அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தொழும் இடத்திற்கு வந்தார்கள். அங்கே மக்கள் சிலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “மகிழ்ச்சிகளைப் போக்கும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினைத்திருந்தால், நீங்கள் இப்படி இருப்பதை விட்டும் அது உங்களைத் திசைதிருப்பி இருக்கும். எனவே, மகிழ்ச்சிகளைப் போக்கும் மரணத்தை நீங்கள் அதிகமாக நினையுங்கள்.
ஒவ்வொரு நாளும் மண்ணறை, நான் தான் அந்நியர்களின் வீடு! நான் தான் தனிமையின் வீடு! நான் தான் புழுதியின் வீடு! நான் தான் புழுக்களின் வீடு! என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஒரு இறைநம்பிக்கையாளர் இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு அமர்தப்பட்டுள்ளேன்; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதை பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும்.
ஆனால் ஒரு பாவி அல்லது இறைநிராகரிப்பாளன் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீ தான் மிகவும் வெறுப்புக்குரியவன்! இன்று உன் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன்! நீ என்னிடம் வந்துவிட்டாய்! நான் உன்னை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார் என்று மண்ணறை சொல்லும். பிறகு அது அவனது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று நசுங்கும் வரை அவனை இறுக்கத் தொடங்கும். இதைக் கூறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை ஒன்றுக்கொன்று கோர்த்துக் காட்டி கூறினார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு அவன் மீது அல்லாஹ் எழுபது ராட்சத பாம்புகளை ஏவுவான். அவற்றில் ஒன்று இந்த பூமியின் மீது ஊதினால் கூட, அது இருக்கும் வரை (அதாவது மறுமை நாள் வரை) அது எதையும் முளைப்பிக்காது. அவைகள் அவனைக் கொத்தி, காயப்படுத்திக் கொண்டே இருக்கும். இது அவன் விசாரிக்கப்படும் (மறுமை நாள் நடக்கும்) வரை நடைப்பெற்றுக் கொண்டே இருக்கும்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறை என்பது சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாக இருக்கும். அல்லது நரகப் படுகுழிகளில் ஒரு படுகுழியாக இருக்கும்.
(திர்மிதி: 2460)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ وَهُوَ ابْنُ مَدُّوَيْهِ قَالَ: حَدَّثَنَا القَاسِمُ بْنُ الحَكَمِ العُرَنِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الوَلِيدِ الوَصَّافِيُّ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصَلَّاهُ فَرَأَى نَاسًا كَأَنَّهُمْ يَكْتَشِرُونَ قَالَ: ” أَمَا إِنَّكُمْ لَوْ أَكْثَرْتُمْ ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ لَشَغَلَكُمْ عَمَّا أَرَى، فَأَكْثِرُوا مِنْ ذِكْرِ هَاذِمِ اللَّذَّاتِ المَوْتِ، فَإِنَّهُ لَمْ يَأْتِ عَلَى القَبْرِ يَوْمٌ إِلَّا تَكَلَّمَ فِيهِ فَيَقُولُ: أَنَا بَيْتُ الغُرْبَةِ وَأَنَا بَيْتُ الوَحْدَةِ، وَأَنَا بَيْتُ التُّرَابِ، وَأَنَا بَيْتُ الدُّودِ، فَإِذَا دُفِنَ العَبْدُ المُؤْمِنُ قَالَ لَهُ القَبْرُ: مَرْحَبًا وَأَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَحَبَّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ، فَإِذْ وُلِّيتُكَ اليَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِيَ بِكَ ” قَالَ: ” فَيَتَّسِعُ لَهُ مَدَّ بَصَرِهِ وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَى الجَنَّةِ. وَإِذَا دُفِنَ العَبْدُ الفَاجِرُ أَوِ الكَافِرُ قَالَ لَهُ القَبْرُ: لَا مَرْحَبًا وَلَا أَهْلًا أَمَا إِنْ كُنْتَ لَأَبْغَضَ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَيَّ، فَإِذْ وُلِّيتُكَ اليَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَتَرَى صَنِيعِيَ بِكَ ” قَالَ: «فَيَلْتَئِمُ عَلَيْهِ حَتَّى تَلْتَقِيَ عَلَيْهِ وَتَخْتَلِفَ أَضْلَاعُهُ»، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِأَصَابِعِهِ، فَأَدْخَلَ بَعْضَهَا فِي جَوْفِ بَعْضٍ قَالَ: «وَيُقَيِّضُ اللَّهُ لَهُ سَبْعِينَ تِنِّينًا لَوْ أَنْ وَاحِدًا مِنْهَا نَفَخَ فِي الأَرْضِ مَا أَنْبَتَتْ شَيْئًا مَا بَقِيَتِ الدُّنْيَا فَيَنْهَشْنَهُ وَيَخْدِشْنَهُ حَتَّى يُفْضَى بِهِ إِلَى الْحِسَابِ»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا القَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّارِ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2384.
Tirmidhi-Shamila-2460.
Tirmidhi-Alamiah-2384.
Tirmidhi-JawamiulKalim-2397.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27308-உபைதுல்லாஹ் பின் வலீத்-அபூஇஸ்மாயீல் என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என்றும், விடப்பட்டவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
- இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் முஹாரிப் பின் திஸார் வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் இவர் மிக பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/520, தஹ்தீபுத் தஹ்தீப்-3/30, தக்ரீபுத் தஹ்தீப்-1/646)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . மரணத்தை நினைவு கூறுங்கள் என்ற கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2460,
மேலும் பார்க்க: திர்மிதீ-2307.
காரணம் எதுவும் குறிப்பிடாமல் பலஹீனமான செய்தி என கூறப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது என்பதற்கு காரணம் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் மற்ற செய்திகள் பற்றி பிறகு பதிவு செய்யப்படும்.