தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-235-2

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குஸைலா பின்த் வாஸிலா தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.

235-நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிக்கிறார். இவர் இனவெறியரா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்படியென்றால் இனவெறியர் யார்? என்று கேட்டேன்.

அதற்கவர்கள், “தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிபவர் தான் இனவெறியர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 2)

خُصَيْلَةُ بِنْتُ وَاثِلَةَ عَنْ أَبِيهَا

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ الْحَوْطِيُّ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ صَدَقَةَ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَتْنِي بِنْتُ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، عَنْ أَبِيهَا قَالَ:

قُلْتُ: ” يَا رَسُولَ اللهِ، الرَّجُلُ يُحِبُّ قَوْمَهُ، أَعَصِبِيٌّ هُوَ؟ قَالَ: «لَا» قُلْتُ: مَنَ الْعَصَبِيُّ؟ قَالَ: «الَّذِي يُعِينُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-235-2.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17725.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19758-ஸதகா பின் யஸீத் என்பவர் பற்றி வலீத் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    ஆகியோர் இவர் ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.
  • துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • மற்ற அதிகமானவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரை முன்கருல்ஹதீஸ்-நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/431, ஸியரு அஃலாமின் நுபலாஃ-7/57, லிஸானுல் மீஸான்-4/315, )

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3949 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.