தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8395

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் தலையில் இருக்கும் நரம்புகள் படபடப்பதால் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 8395)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ قَطُّ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: «فَهَلْ أَخَذَكَ الصُّدَاعُ قَطُّ؟» قَالَ: وَمَا الصُّدَاعُ؟ قَالَ: «عُرُوقٌ تَضْرِبُ عَلَى الْإِنْسَانِ فِي رَأْسِهِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: فَلَمَّا وَلَّى، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-8045.
Musnad-Ahmad-Shamila-8395.
Musnad-Ahmad-Alamiah-8045.
Musnad-Ahmad-JawamiulKalim-8196.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . முஹம்மத் பின் பிஷ்ர் பின் ஃபராஃபிஸா

3 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

4 . அபூஸலமா

5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


பார்க்க:

1 . முஹம்மத் பின் அம்ர்.

2 . முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா.


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் முஹம்மது பின் அம்ர் வழியாக வரும் செய்தியை ஹைஸமீ, அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
முக்பில் வாதிஈ போன்ற பல அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8395, அல்அதபுல் முஃப்ரத்-495, முஸ்னத் பஸ்ஸார்-7981, குப்ரா நஸாயீ-7449, இப்னு ஹிப்பான்-2916, ஹாகிம்-1283, ஷுஅபுல் ஈமான்-9438,

  • அபூமஃஷர் —> ஸயீத் பின் அபூஸயீத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-8794, முஸ்னத் அபீ யஃலா-6556,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5905.


3 . ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21235.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21282, அல்முஃஜமுல் கபீர்-7233,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.