8623. அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு இளைஞர் வந்து தலைப்பாகை அணிவது குறித்து அவரிடம் கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் நாடினால் இது குறித்து நான் உனக்குத் தெளிவாக அறிவிப்பேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் பத்துப் பேரில் பத்தாவதாக இருந்தேன். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), ஹுதைஃபா (ரலி), இப்னு அவ்ஃப் (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் தான் மற்ற ஒன்பது பேர்.
அப்போது அன்ஸாரி இளைஞர் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு அமர்ந்தார். பின்னர் அவர், “அல்லாஹ்வின் தூதரே! முஃமின்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவர் தான்” என்று பதிலளித்தார்கள். பிறகு அந்த இளைஞர், “முஃமின்களில் மிகவும் புத்திசாலி யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகமாக நினைப்பவரும், அது வருவதற்கு முன்பே அதற்காகத் தயாராக இருப்பவரும் தான் மிகவும் புத்திசாலி” என்று பதிலளித்தார்கள். பிறகு அந்த இளைஞர் அமைதியாகிவிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரை நோக்கியவாறே, “முஹாஜிர்களே! ஐந்து விஷயங்களால் நீங்கள் சோதிக்கப்படும்போது (அவற்றை நீங்கள் அடையாமல் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) ஐந்து விளைவுகளைக் காண்பீர்கள் என்று கூறினார்கள். அவை:
1 . ஒரு சமுதாயத்தில் மானக்கேடான செயல் (விபச்சாரம்) பகிரங்கமாக வெளிப்பட்டால் அப்போது அவர்களிடையே கொள்ளை நோயும், அவர்களுக்கு முன் சென்றுவிட்ட மக்களிடம் இல்லாதிருந்த நோய்களும் பரவ ஆரம்பித்துவிடும்.
2 . ஒரு சமுதாயம் அளவையிலும் நிறுவையிலும் குறைத்(து மோசடி செய்)தால், அவர்கள் பஞ்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும், ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பிடிக்கப்படுவார்கள்.
3 . ஒரு சமுதாயம் தங்கள் செல்வத்தின் ஸகாத்தை வழங்காமல் தடுத்து வைத்துக்கொண்டால், அவர்களுக்கு வானத்திலிருந்து மழை வருவது தடுக்கப்பட்டு விடும். கால்நடைகள் மட்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு மழை பொழிந்திருக்காது.
4 . ஒரு சமுதாயம் அல்லாஹ்வுடைய உடன்படிக்கையையும், அவனுடைய தூதருடைய உடன்படிக்கையையும் மீறிக் கொண்டிருந்தால், அல்லாஹ் அவர்களுக்கு வெளியிலிருந்து ஒரு எதிரியை ஏற்படுத்தி, அவர்கள் கைகளிலுள்ள சிலவற்றை அவன் கைப்பற்றுவான்.
5 . ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்காமலும், அல்லாஹ் அருளியதை தேர்ந்தெடுக்காமலும் இருந்தால், அல்லாஹ் அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிடுவான்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை ஒரு படைப் பிரிவுக்குத் தலைவராக நியமித்து புறப்படத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள், பருத்தியினால் செய்யப்பட்ட தடித்த கருப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை அருகில் அழைத்து, அவரது தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு, வெண்ணிறத் தலைப்பாகையை அணிவித்தார்கள். அதன் ஒரு பகுதியை அவரது பின்புறத்தில் நான்கு விரல் நீளமோ அல்லது அதைவிடக் குறைவாகவோ தொங்கவிட்டார்கள்.
மேலும் கூறினார்கள்: “இப்னு அவ்ஃபே! இவ்வாறே தலைப்பாகை அணிவீராக. இது மிகவும் அழகாகவும், கண்ணியமாகவும் இருக்கிறது.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், கொடியை அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறிவிட்டு, “இப்னு அவ்ஃபே! இதைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் உங்களுடன் உள்ளவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யுங்கள். அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் போரிடுங்கள். மோசடி செய்யாதீர்கள், துரோகம் செய்யாதீர்கள், (எதிரிகளின் உடலை) சிதைக்காதீர்கள், குழந்தைகளைக் கொல்லாதீர்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுமாகும்” என்று கூறினார்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَمْشَاذَ الْعَدْلُ، ثَنَا أَبُو الْجُمَاهِرِ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنِي الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ حَفْصُ بْنُ غَيْلَانَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ:
كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَأَتَاهُ فَتًى يَسْأَلُهُ عَنْ إِسْدَالِ الْعِمَامَةِ، فَقَالَ ابْنُ عُمَرَ: سَأُخْبِرُكَ عَنْ ذَلِكَ بِعِلْمٍ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى، قَالَ: كُنْتُ عَاشِرَ عَشَرَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، وَعَلِيٌّ، وَابْنُ مَسْعُودٍ، وَحُذَيْفَةُ، وَابْنُ عَوْفٍ، وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَجَاءَ فَتًى مِنَ الْأَنْصَارِ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جَلَسَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا وَأَحْسَنُهُمْ لَهُ اسْتِعْدَادًا قَبْلَ أَنْ يَنْزِلَ بِهِمْ أُولَئِكَ مِنَ الْأَكْيَاسِ» ثُمَّ سَكَتَ الْفَتَى
وَأَقْبَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ، خَمْسٌ إِنِ ابْتُلِيتُمْ بِهِنَّ وَنَزَلَ فِيكُمْ أَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ: لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يَعْمَلُوا بِهَا إِلَّا ظَهَرَ فِيهِمُ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمُؤْنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ، وَلَمْ يَمْنَعُوا الزَّكَاةَ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا، وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سُلِّطَ عَلَيْهِمْ عَدُوُّهُمْ مَنْ غَيْرِهِمْ وَأَخَذُوا بَعْضَ مَا كَانَ فِي أَيْدِيهِمْ، وَمَا لَمْ يَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ إِلَّا أَلْقَى اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ “
ثُمَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ يَتَجَهَّزُ لِسَرِيَّةٍ بَعَثَهُ عَلَيْهَا، وَأَصْبَحَ عَبْدُ الرَّحْمَنِ قَدِ اعْتَمَّ بِعِمَامَةٍ مَنْ كَرَابِيسَ سَوْدَاءَ، فَأَدْنَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَقَضَهُ وَعَمَّمَهُ بِعِمَامَةٍ بَيْضَاءَ، وَأَرْسَلَ مِنْ خَلْفِهِ أَرْبَعَ أَصَابِعَ أَوْ نَحْوَ ذَلِكَ وَقَالَ: «هَكَذَا يَا ابْنَ عَوْفٍ اعْتَمَّ فَإِنَّهُ أَعْرَبُ وَأَحْسَنُ» ثُمَّ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا أَنْ يَدْفَعَ إِلَيْهِ اللِّوَاءَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: خُذِ ابْنَ عَوْفٍ فَاغْزُوا جَمِيعًا فِي سَبِيلِ اللَّهِ فَقَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ، لَا تَغُلُّوا وَلَا تَغْدِرُوا، وَلَا تُمَثِّلُوا، وَلَا تَقْتُلُوا وَلِيدًا، فَهَذَا عَهْدُ اللَّهِ وَسِيرَةُ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَلَّمَ
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخْرِجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8623.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8726.
Hakim-JawamiulKalim-8727.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அலீ பின் ஹம்ஷாத்-அல்அத்ல்
3 . அபுல்ஜுமாஹிர்-முஹம்மத் பின் உஸ்மான் அத்திமிஷ்கீ
4 . ஹைஸம் பின் ஹுமைத்
5 . அபூமுஅய்த்-ஹஃப்ஸ் பின் ஃகைலான்
6 . அதாஉ பின் அபூரபாஹ்
7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13696-ஹஃப்ஸ் பின் ஃகைலான்-அபூமுஅய்த் அவர்கள் பற்றி முஹம்மத் பின் முபாரக் அஸ்ஸூரீ, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர். - இஸ்ஹாக் பின் ஸய்யார், அபூபக்ர் பின் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
போன்ற வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இவர் கத்ரிய்யா கொள்கையுடைவர் என்பதால் சிலர் இவ்வாறு கூறியுள்ளனர்)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/186, அஸ்ஸிகாத்-6/198, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/296, தஹ்தீபுல் கமால்-7/70, அல்காஷிஃப்-2/301, தஹ்தீபுத் தஹ்தீப்-1/459, தக்ரீபுத் தஹ்தீப்-1/260)
எனவே இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: … இப்னு மாஜா-4019, 4259, முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-8623,
- ஃபர்வா பின் கைஸ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
சமீப விமர்சனங்கள்