தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1752

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (3 ரக்அத்) வித்ரு தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (என்ற திருக்குர்ஆனின் 87 வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன் (என்ற 109 வது) அத்தியாயத்தையும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் (என்ற 112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

தொழுகையை முடிக்கும்போது, மூன்று முறை சத்தமாக “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பொருள்: பேரரசனான, மகா தூய்மையான அல்லாஹ் குறைகளற்றவன்) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)


அபூஅப்துர்ரஹ்மான் (ஆகிய நஸாயீ இமாம்) கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூநுஐம் அவர்கள் எங்களுடைய பார்வையில் முஹம்மத் பின் உபைத், காஸிம் பின் யஸீத் ஆகியோரைவிட மிகவும் பலமானவர்.

எங்களுடைய பார்வையில் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் மாணவர்களில் மிகவும் பலமானவர்கள் (வரிசை முறை-அல்லாஹ்வே மிக அறிந்தவன்) யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அவருக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் முபாரக், பிறகு வகீஃ பின் ஜர்ராஹ், பிறகு அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, பிறகு அபூநுஐம், பிறகு அஸ்வத் ஆகியோர் ஆவார்கள்.

மேலும், ஸுபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜரீர் பின் ஹாஸிம் அவர்கள், “(நபி-ஸல்-அவர்கள்) மூன்றாவது முறை (ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் என்று கூறும்போது) தன் குரலை உயர்த்தி, நீட்டி கூறுவார்கள்” என்று அறிவித்தார்.

(நஸாயி: 1752)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا يَرْفَعُ بِهَا صَوْتَهُ،

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «أَبُو نُعَيْمٍ أَثْبَتُ عِنْدَنَا مِنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ، وَمِنْ قَاسِمِ بْنِ يَزِيدَ، وَأَثْبَتُ أَصْحَابِ سُفْيَانَ عِنْدَنَا، وَاللَّهُ أَعْلَمُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، ثُمَّ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، ثُمَّ وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، ثُمَّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ثُمَّ أَبُو نُعَيْمٍ، ثُمَّ الْأَسْوَدُ، فِي هَذَا الْحَدِيثِ»،

وَرَوَاهُ جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ زُبَيْدٍ، فَقَالَ: يَمُدُّ صَوْتَهُ فِي الثَّالِثَةِ وَيَرْفَعُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1732.
Nasaayi-Shamila-1752.
Nasaayi-Alamiah-1732.
Nasaayi-JawamiulKalim-1742.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் இஸ்மாயீல்-இப்னு உலைய்யாவின் மகன்

3 . அபூநுஐம்-பள்ல் பின் துகைன்

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ

5 . ஸுபைத் பின் ஹாரிஸ்

6 . தர்ரு பின் அப்துல்லாஹ்

7 . ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா

8 . அவரது தந்தை-அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

ஸுபைத் அவர்களின் அறிவிப்புகள்:

1 . இந்தச் செய்தியை ஸுபைத் அவர்களிடமிருந்து பலரும் பலவாறு அறிவித்துள்ளனர். இவற்றில் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஜரீர் பின் ஹாஸிம், முஹம்மத் பின் தல்ஹா, அபூஹனீஃபா பிறப்பு ஹிஜ்ரி 80
இறப்பு ஹிஜ்ரி 150
வயது: 70
ஆகியோர் அறிவிக்கும் ஸுபைத் பின் ஹாரிஸ் —> தர்ரு பின் அப்துல்லாஹ் —> ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.


2 . அப்துல்மலிக் பின் அபூஸுலைமான், முஹம்மத் பின் ஜுஹாதா, அம்ர் பின் கைஸ், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் மிஃக்வல் ஆகியோர் ஸுபைத் அவர்களுக்கும் ஸயீத் அவர்களுக்கும் இடையில் தர்ரு அவர்களைக் கூறவில்லை…


3 . அஃமஷ் அவர்கள், ஸுபைத் அவர்களுக்கும் ஸயீத் அவர்களுக்கும் இடையில் தர்ரு அவர்களை குறிப்பிட்டுவிட்டு கடைசியில் உபை பின் கஅப் (ரலி) அவர்களைக் கூறியுள்ளார்…


4 . ஃபித்ர் பின் கலீஃபா அவர்கள், ஸுபைத் அவர்களுக்கும் ஸயீத் அவர்களுக்கும் இடையில் தர்ரு அவர்களை குறிப்பிடாமல் கடைசியில் உபை பின் கஅப் (ரலி) அவர்களைக் கூறியுள்ளார்…


5 . மிஸ்அர் பின் கிதாம் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர் மிக பலவீனமானது…

இவற்றில் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
போன்றோரின் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூலாகும்.

மேலும் தர்ரு பின் அப்துல்லாஹ் அவர்களிடமிருந்து ஸுபைத் அறிவிப்பதைப் போன்றே ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அவர்களும் தர்ரு பின் அப்துல்லாஹ் —> ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்…


கதாதா அவர்களின் அறிவிப்புகள்:

1 . கதாதா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹம்மாம் பின் யஹ்யா ஆகியோர் கதாதா —> அஸ்ரா பின் அப்துர்ரஹ்மான் —> ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

2 . ஹிஷாம், மஃமர் ஆகியோர் … என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

எனவே மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்தச் செய்தியை அறிவிப்பவர், அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) என்பதே சரியாகும்.

இந்தச் செய்தியை அறிவிப்பவர், உபை பின் கஅப் (ரலி) என்று வந்திருப்பது தவறாகும்.


இந்த அனைத்து வகையான அறிவிப்பாளர்தொடர்களை ஆய்வு செய்து பார்க்கும் போது இந்த ஹதீஸில் இடம்பெறும் கீழ்கண்ட கூடுதலான தகவல் தவறாகும்.

1 . நபி (ஸல்) அவர்கள், ருகூவுக்கு முன்பு குனூத் ஓதுவார்கள்.

2 . நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுத பின் (ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸு என்பதுடன்) “ரப்புல் மலாஇகதி வர்ரூஹ்” என்று கூறுவார்கள்.

இந்த இருவகை கூடுதல் தகவல் பலவீனமானது என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.


வேறு சில நபித்தோழர்கள் வழியாக, “நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்கு முன்பு குனூத் ஓதுவார்கள்” என்று வந்துள்ளது. இவற்றில் சிலவை பலவீனமானவை. சிலவை குனூத் நாஸிலா பற்றி வந்துள்ளவை.


 


1 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுபைத் பின் ஹாரிஸ் —> தர்ரு பின் அப்துல்லாஹ் —> ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4696, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-6873, அஹ்மத்-15361, 15362, நஸாயீ-1752, …


மற்ற அறிவிப்புகள்:

(மக்லத் பின் யஸீத் —> ஸுஃப்யான் …

பார்க்க: இப்னு மாஜா-1182, நஸாயீ-1699, அமலுல் யவ்மி வல்லைலா-நஸயீ-734, முஸ்னத் அபூஹனீஃபா-அபூநுஐம்-1/109, அல்அஹாதீஸுல் முக்தாரா-1217, 1221,


காஸிம் பின் யஸீத், முஹம்மத் பின் உபைத் —> ஸுஃப்யான், (அப்துல்மலிக் பின் அபூஸுலைமான்)  …

பார்க்க: நஸாயீ-1750, 1751, அமலுல் யவ்மி வல்லைலா-நஸயீ-735,

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுலைமான் —> முஹம்மத் பின் உபைத் …

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-6872, நஸாயீ-1735,

முஹம்மத் பின் உபைதிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுலைமான் அவர்கள் ஸுஃப்யான் அவர்களை கூறவில்லை. அப்துல்மலிக் பின் அபூஸுலைமான் என்பவரை மட்டுமே கூறியுள்ளார். (நஸாயீ-1735)

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யஹ்யா மட்டுமே அப்துல்மலிக் என்பவருடன் ஸுஃப்யானை சேர்த்து அறிவித்துள்ளார். (நஸாயீ-1751)

இந்த ஸுஃப்யான், ஸுஃப்யான் பின் ஸியாத் ஆவார். (தஹ்தீபுல் கமால்-2406), ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அல்ல…)


  • கதாதா —> அஸ்ரா பின் அப்துர்ரஹ்மான் —> ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

பார்க்க: அஹ்மத்-15355,  15357, 15359, நஸாயீ-1740, அமலுல் யவ்மி வல்லைலா-நஸயீ-743,


  • கதாதா —> ஸுராரா பின் அவ்ஃபா —> அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)

பார்க்க: அஹ்மத்-15353,  15356, 15366, …


முஹம்மத் பின் ஜுஹாதா..

நஸாயீ-1736,


2 . உபை பின் கஅப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-1699.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-464, அபூதாவூத்-1427,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.