உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு யார் இவ்வாறு அங்கத்தூய்மை செய்துவிட்டுத் தொழுவதற்காக என்றே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்கிறாரோ அவர், முன்பு செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 2
(முஸ்லிம்: 392)حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: وَأَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ، قَالَ
تَوَضَّأَ عُثْمَانُ بْنُ عَفَّانَ، يَوْمًا وُضُوءًا حَسَنًا ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ هَكَذَا، ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ، غُفِرَ لَهُ مَا خَلَا مِنْ ذَنْبِهِ»
Tamil-392
Shamila-232
JawamiulKalim-345
சமீப விமர்சனங்கள்