தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-568

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 47

ஸஜ்தா செய்ய வேண்டிய (குர்ஆன்) வசனங்கள் குறித்து வந்துள்ளவை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

(திர்மிதி: 568)

بَابُ مَا جَاءَ فِي سُجُودِ القُرْآنِ

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ عُمَرَ الدِّمَشْقِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ:

«سَجَدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهَا الَّتِي فِي النَّجْمِ»


Tirmidhi-Tamil-519.
Tirmidhi-TamilMisc-519.
Tirmidhi-Shamila-568.
Tirmidhi-Alamiah-519.
Tirmidhi-JawamiulKalim-519.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31397-உமர் பின் ஹய்யான் அத்திமிஷ்கீ யாரென அறியப்படாதவர் ஆவார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், ஸயீத் பின் அபூஹிலால், உமர் திமிஷ்கிடமிருந்து உம்முத்தர்தா வழியாக அறிவிக்கும் செய்தி, அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ (இடைமுறிவு ஏற்பட்ட செய்தி) என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-2186 (6/206), தஹ்தீபுல் கமால்-21/313, தஹ்தீபுத் தஹ்தீப்-3/220, தக்ரீபுத் தஹ்தீப்-1/716)


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் அபூஹிலால் —> உமர் அத்திமிஷ்கீ —> உம்முத்தர்தா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: அஹ்மத்-21692 , 27494 , இப்னு மாஜா-1055 , திர்மிதீ-568 ,

  • ஸயீத் பின் அபூஹிலால் —> உமர் அத்திமிஷ்கீ —> ஒரு மனிதர் —> உம்முத்தர்தா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: திர்மிதீ-569 ,

  • ஸயீத் பின் அபூஹிலால் —> ஒரு மனிதர் —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2080 , குப்ரா பைஹகீ-3705

  • மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் —> உம்முத்தர்தா —> அபுத்தர்தா (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-1056 , ஸுனன் குப்ரா பைஹகீ-3704 ,

  • அறிவிப்பாளர்தொடர் இல்லாத தஃலீக் செய்தி:

பார்க்க: குப்ரா பைஹகீ-3706 ,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

1 . 15 ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1401 .

2 . ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தா வசனங்கள் பற்றிய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-578 .

3 . குர்ஆனில் 4 இடங்களில் ஸஜ்தா வசனங்கள் உள்ளது என்பது பற்றிய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-1067 , 1069 , 766 , முஸ்லிம்-1010 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.