தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5635

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5635. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள்.

  1. நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும்,
  2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும்,
  3. தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் – எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும்,
  4. விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும்,
  5. ஸலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும்,
  6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும்,
  7. சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

மேலும்,

  1. (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும்,
  2. (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும்,
  3. மென்பட்டுத் திண்டு-மெத்தை (மீஸரா),
  4. பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும்,
  5. சாதாரணப் பட்டு,
  6. அலங்காரப் பட்டு,
  7. தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்: 74


حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ

أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ: أَمَرَنَا بِعِيَادَةِ المَرِيضِ، وَاتِّبَاعِ الجِنَازَةِ، وَتَشْمِيتِ العَاطِسِ، وَإِجَابَةِ الدَّاعِي، وَإِفْشَاءِ السَّلاَمِ، وَنَصْرِ المَظْلُومِ، وَإِبْرَارِ المُقْسِمِ، وَنَهَانَا عَنْ خَوَاتِيمِ الذَّهَبِ، وَعَنِ الشُّرْبِ فِي الفِضَّةِ، أَوْ قَالَ: آنِيَةِ الفِضَّةِ، وَعَنِ المَيَاثِرِ وَالقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالدِّيبَاجِ وَالإِسْتَبْرَقِ


Bukhari-Tamil-5635.
Bukhari-TamilMisc-5635.
Bukhari-Shamila-5635.
Bukhari-Alamiah-5204.
Bukhari-JawamiulKalim-5231.



  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . மூஸா பின் இஸ்மாயீல்

3 . அபூஅவானா-வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்

4 . அஷ்அஸ் பின் ஸுலைம்

5 . முஆவியா பின் ஸுவைத்

6 . பராஉ பின் ஆஸிப் (ரலி)


1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஷ்அஸ் பின் ஸுலைம் —> முஆவியா பின் ஸுவைத் —> பராஉ பின் ஆஸிப் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-1239, 2445, 5175, 5635, 5650, 5838, 5849, 5863, 6222, 6235, 6654, முஸ்லிம்-4194, இப்னு மாஜா-2115, 3589, திர்மிதீ-1760, 2809, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1939, 3778, 5309, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


…


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1240,

புகாரீ இமாம்

محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்ஜுஃஃபீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்

பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

கால கட்டம்: பிந்தைய காலத்தவர்


வாழ்க்கைக் குறிப்பு

புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ

வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ


ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify

மூஸா பின் இஸ்மாயீல்

மூஸா பின் இஸ்மாயீல்-அல்முன்கரீ (ரஹ்) – Musa bin Isma'il al-Munqari

இறப்பு: ஹிஜ்ரி 223, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: மூஸா பின் இஸ்மாயீல்

தந்தை பெயர்: இஸ்மாயீல்

வம்சம்: பனூ முன்கர் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸலமா

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 223, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

மூஸா பின் இஸ்மாயீல் அல்முன்கரீ ரஹ் அவர்கள் அபூ ஸலமா அத்தபூதகீ என்றும் அறியப்பட்டவர். இவர் மிகப் பலமானவர் ஆவார். பஸராவைச் சேர்ந்த இவர் ஹிஜ்ரி 223 இல் பஸராவில் காலமானார்.

இவர் ஹதீஸ் கலையில் மிகத் துல்லியமானவர்களில் ஒருவராக இருந்தார். இவரைப் பற்றி இமாம் யஹ்யா பின் மயீன் ரஹ் அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபான் பின் யஸீத் அல்அத்தார், ஜரீர் பின் ஹாஸிம், ஜுவைரிய்யா பின் அஸ்மா, ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாம் பின் யஹ்யா, தாவுத் பின் அபில் ஃபூராத், ஸுலைமான் பின் அல்முகீரா, ஸலாம் பின் அபீ முதீஃ, அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல்மாஜிஷூன், அப்துல் வாஹித் பின் ஸியாத், வஹைப் பின் காலித், மஹ்தீ பின் மைமூன்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்புகாரி, அபூ தாவூத், யஹ்யா பின் மயீன், அபூ ஸுர்ஆ, அபூ ஹாதிம், முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, அஹ்மத் பின் ஹஸன் அத்தர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹர்பீ, இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் அஸ்மவீஹி, அஹ்மத் பின் மன்ஸூர் அர்ரமாதி, யஃகூப் பின் ஸுஃப்யான், அபூ பக்ர் அஹ்மத் பின் அம்ர் பின் அபூ ஆஸிம்

வேறு பெயர்கள்: அபூ ஸலமா, மூஸா பின் இஸ்மாயீல் அத்தபூதகீ


ஆதாரம்: muslimscholars.info (20040) · Should verify

அபூஅவானா-வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அஷ்அஸ் பின் ஸுலைம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஆவியா பின் ஸுவைத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

பராஉ பின் ஆஸிப் (ரலி)

பராஉ பின் ஆஸிப்-அல்அன்ஸாரீ (ரலி) – al-Bara' bin Azib bin al-Harith

இறப்பு: ஹிஜ்ரி 72, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: பராஉ பின் ஆஸிப் பின் அல்காரிஸ்

தந்தை பெயர்: ஆஸிப் பின் அல்காரிஸ்

வம்சம்: அல்அவ்ஸ்

புனைப்பெயர்: அபூ உமாரா, அபூ அம்ர், அபூ அத்தஃப்பைல்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 72, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

பராஉ பின் ஆஸிப் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் மதீனாவில் பிறந்தார். இவர் நபி (ஸல்) அவர்களுடன் பதினைந்து அல்லது பதினெட்டு போர்களில் கலந்துகொண்டார்.

பத்ருப் போரின்போது இவர் இளமையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கூஃபாவில் வசித்து, ஹிஜ்ரி 72 இல் அங்கேயே மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூ பக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), அலீ பின் அபூ தாலிப், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ, பிலால் பின் ரபாஹ், அபூ புர்தா பின் நியார், அல்காரிஸ் பின் அம்ர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துல்லாஹ் பின் யஸீத் பின் ஸைத், அபூ ஜுஹைஃபா அஸ்ஸுவாஈ, யஸீத் பின் அல் பராஉ பின் ஆஸிப், உபைது பின் அல் பராஉ பின் ஆஸிப், அர்ரபீஉ பின் அல் பராஉ பின் ஆஸிப், அர்ரபீஉ பின் லவ்த் அல்அன்ஸாரீ, அஸ்ஸுபைர் பின் லவ்த் பின் ஆஸிப், அப்துர்ரஹ்மான் பின் அபூ லைலா, அதீ பின் ஸாபித் அல்அன்ஸாரீ, அபூ இஸ்ஹாக் அஸ்ஸபியீ, முஆவியா பின் சுவைத் அல்மஸ்னீ, அபூ பக்ர் பின் அபூ மூஸா அல்அஷ்அரீ

வேறு பெயர்கள்: அபூ உமாரா, அபூ அம்ர், அபூ அத்தஃப்பைல், பராஉ


ஆதாரம்: muslimscholars.info (400) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.