3893. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு திடுக்கத்தின் போது கூறவேண்டிய சில வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார்கள். அவை:-
அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வமின் ஹமஸாத்திஷ் ஷையாத்தீனி, வஅய் யஹ்ளுரூன் ’
(பொருள் : அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்தை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
தன் பிள்ளைகளில் விவரமுள்ளவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இவைகளை கற்றுக் கொடுப்பார்கள். விவரமில்லாத பிள்ளைகளுக்கு அதை எழுதி அவர்களின் உடலில் கட்டிவிடுவார்கள்.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ: «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ»
وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ، وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3893.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3397.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
- இவர் தத்லீஸ் செய்பவர் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் விமர்சித்துள்ளனர். மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர்; என்றாலும் தத்லீஸ் செய்பவர், பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-24/405, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/168, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/254)
- இந்த கருத்தில் வரும் செய்திகளில் எவற்றிலும் முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியின் முதல் பகுதி வேறு சில அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களின் செயலைப் பற்றி வரும் இரண்டாம் பகுதியை முஹம்மது பின் இஸ்ஹாக் மட்டும் தனித்து அறிவிப்பதால் இது முன்கர்-நிராகரிக்கப்பட்ட செய்தி என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-264)
3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23547, 23604, 29621, அஹ்மத்-6696, அபூதாவூத்-3893, திர்மிதீ-3528, குப்ரா நஸாயீ-10533, 10534, ஹாகிம்-2010, …
மேலும் பார்க்க: முஸ்லிம்-5248, ஹாகிம்-7506.
சமீப விமர்சனங்கள்