தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2324

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். மினா முழுவதும் பலியிடும் இடமாகும். மக்காவின் பாதை முழுவதும் பலியிடும் இடமாகும். முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 2324)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، فِي حَدِيثِ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ قَالَ:

«وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ، وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ، وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ، وَكُلُّ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ، وَكُلُّ جَمْعٍ مَوْقِفٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2324.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1982.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38100-முஹம்மது பின் முன்கதிர் அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களை இவர் சந்திக்கவே இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளனர்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/709)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-697 .

3 comments on Abu-Dawood-2324

  1. ஜசாகல்லாஹ், இதே கருத்தில் வரும் திர்மிதீ-697 இந்த ஹதீஸும் பலகீனமா?

    1. சிலர் அந்த செய்தியை ஹஸன் என்று கூறுகின்றனர். ஸயீத் அவர்களிடமிருந்து உஸ்மான் பின் முஹம்மத் அறிவிக்கும் செய்திகள் முன்கர் என்ற விமர்சனம் உள்ளது…

      இந்த செய்தியின் பற்றி முடிவை தெரிந்துக் கொள்ள காலதாமதம் ஆகலாம்.

      இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.