Author: Farook

Musnad-Ahmad-18171

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18171. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் இருந்துள்ளேன். அப்போது, அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதாக இருந்தால் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.

(ஒரு தடவை) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற சென்ற போது முஃகீராவே! தண்ணீருடன் என் பின்னால் வா! என்று கூறினார்கள்.

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَكَانَ إِذَا ذَهَبَ أَبْعَدَ فِي الْمَذْهَبِ، فَذَهَبَ لِحَاجَتِهِ وَقَالَ: «يَا مُغِيرَةُ اتْبَعْنِي بِمَاءٍ» فَذَكَرَ الْحَدِيثَ

Ibn-Majah-331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வெட்டவெளியில் இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது (மக்களை விட்டுத்) தொலைவான இடத்திற்குச் செல்லுதல்.

331. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் சென்றார்கள்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»

Tirmidhi-20

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 16

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற எண்ணினால், தொலைவான இடத்திற்குச் செல்வார்கள் என்பது குறித்து வந்துள்ளவை.

20. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் சென்றார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி), அபூகதாதா (ரலி), ஜாபிர் (ரலி), உபைத் (ரலி), அபூமூஸா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), பிலால் பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

“நபி (ஸல்) அவர்கள் தங்குவதற்காக மென்மையான இடத்தைத் தேர்வு செய்வதைப் போன்று சிறுநீர் கழிப்பதற்கும் மென்மையான இடத்தைத் தேர்வு செய்வார்கள்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளரான) அபூஸலமா (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ என்பதாகும்.

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَأَبْعَدَ فِي الْمَذْهَبِ،

وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ، وَأَبِي قَتَادَةَ، وَجَابِرٍ، وَيَحْيَى بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِيهِ، وَأَبِي مُوسَى، وَابْنِ عَبَّاسٍ، وَبِلَالِ بْنِ الْحَارِثِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
وَيُرْوَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَرْتَادُ لِبَوْلِهِ مَكَانًا كَمَا يَرْتَادُ مَنْزِلًا وَأَبُو سَلَمَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ الزُّهْرِيُّ

Bazzar-8941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உடமைகள் மற்றும்  உயிர்கள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

المسلم من سلم المسلمون من لسانه ويده. والمؤمن من أمنه الناس على أموالهم ودمائهم.

Bazzar-3752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3752. ஹஜ்ஜதுல் வதாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்…

அறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி)

أَنَّهُ قَالَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «هَذَا يَوْمٌ حَرَامٌ، وَبَلَدٌ حَرَامٌ، فَدِمَاؤُكُمْ وَأَمْوَالُكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ مِثْلُ هَذَا الْيَوْمِ وَهَذِهِ الْبَلْدَةِ إِلَى يَوْمٍ تَلْقَوْنَهُ وَحَتَّى دَفْعَةٌ دَفَعَهَا مُسْلِمٌ مُسْلِمًا يُرِيدُ بِهَا سُوءًا حَرَامًا، وَسَأُخْبِرُكُمْ مَنِ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ، وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللَّهِ»

Hakim-22

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியின் முதல் பகுதியை புகாரி, முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். கூடுதலான இந்த (இரண்டாவது) பகுதியை அவர்கள் பதிவு செய்யவில்லை. என்றாலும் இது முஸ்லிம் இமாம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான செய்தியாகும்.

இதனுடன் இருவரும் பதிவு செய்யாத, கூடுதலான, முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்திகளும் உள்ளன.

«الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»

Ibn-Hibban-180

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உயிர், உடமை விஷயத்தில் மக்களுக்கு நிம்மதி அளிப்பவர் பற்றி முஃமின்-ஈமான் உள்ளவர் என்ற பெயர் கையாளப்பட்டிருப்பது.

180. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»

Nasaayi-4995

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இறை நம்பிக்கையாளரின் பண்பு.

4995. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«الْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»

Musnad-Ahmad-8931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8931. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«الْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُؤْمِنُ مَنْ أمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»

Tirmidhi-2627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தனது நாவினால், கரத்தினால் பிறருக்கு தொல்லைத் தராதவரே முஸ்லிம் என்று வந்துள்ள செய்திகள்.

2627. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான்.

முஃமின் (இறைநம்பிக்கையாளர்) யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ»

Next Page » « Previous Page