Author: Farook

Nasaayi-1425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தால்…

1425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ»


Daraqutni-1608

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். எனினும், (தவறிப்போன ஒரு ரக்அத்தை) அவர் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا وَلْيُضِفْ إِلَيْهَا أُخْرَى».

وَقَالَ ابْنُ نُمَيْرٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»


Nasaayi-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவரின் தொழுகை முழுமையடைந்துவிட்டது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ»


Ibn-Majah-1123

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»


Kubra-Bayhaqi-5737

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

5737. யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். எனினும், (தவறிப்போன ஒரு ரக்அத்தை) அவர் நிறைவேற்ற வேண்டும் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا، إِلَّا أَنَّهُ يَقْضِي مَا فَاتَهُ


Abi-Yala-3425

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3425. நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«الْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ»


Bazzar-6391

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6391. நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


الأَنْبِيَاءُ أَحْيَاءٌ يُصَلُّونَ فِي قُبُورِهِمْ.


Bazzar-6888

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6888. நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


الأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ.


Shuabul-Iman-4600

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4600. அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர்த்து அதிகமாகப் பேசாதீர்கள். இறை நினைவு அல்லாத அதிகமான வார்த்தைகள் உள்ளத்தை இறுகச் செய்துவிடும். அல்லாஹ்விடத்தில் மிகவும் தூரமானவர்கள் இறுகிய உள்ளம் உடையவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ قَسْوَةُ الْقَلْبِ، وَإِنَّ أَبَعْدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِي


Tirmidhi-2411

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2411. அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர்த்து அதிகமாகப் பேசாதீர்கள். இறை நினைவு அல்லாத அதிகமான வார்த்தைகள் உள்ளத்தை இறுகச் செய்துவிடும். அல்லாஹ்விடத்தில் மிகவும் தூரமானவர்கள் இறுகிய உள்ளம் உடையவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تُكْثِرُوا الكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ، وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ القَلْبُ القَاسِي»

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ قَالَ: حَدَّثَنِي أَبُو النَّضْرِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ بِمَعْنَاهُ


Next Page » « Previous Page