2881.
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
2881.
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
229.
«إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
3976.
«مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»
பாடம்:
பயணி எப்போது (நான்கு ரக்அத்) தொழுகையை (இரண்டாக) சுருக்கித் தொழலாம்?
1201. நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே (“மூன்று மைல்கள்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنْ قَصْرِ الصَّلَاةِ، فَقَالَ أَنَسٌ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلَاثَةِ أَمْيَالٍ، أَوْ ثَلَاثَةِ فَرَاسِخَ – شَكَّ شُعْبَةُ – يُصَلِّي رَكْعَتَيْنِ»
9325. மக்களே! உங்களில் உள்ள இளைஞர்கள் பாவம் செய்தும், பெண்கள் வரம்புமீறியும் நடந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் நன்மையை தீமையாகவும்; தீமையை நன்மையாகவும் கருதும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«كَيْفَ بِكُمْ إِذَا فَسَقَ شَبَابُكُمْ، وَطَغَى نِسَاؤُكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ذَلِكَ لَكَائِنٌ؟ قَالَ: «وَشَرٌّ مِنْ ذَلِكَ سَيَكُونُ، كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُمُ الْمَعْرُوفَ مُنْكَرًا وَالْمُنْكَرَ مَعْرُوفًا؟»
6420. மக்களே! உங்களில் உள்ள பெண்களும், இளைஞர்களும் வரம்புமீறி நடந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காவிட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இப்படியும் நடக்குமா? என்று (ஆச்சரியமாகக்) கேட்டனர். அதற்கு, ஆம் இதை விட கடுமையான விசயமும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் தீமையை நன்மையாகவும்; நன்மையை தீமையாகவும் கருதும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்கும்? என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«كَيْفَ بِكُمْ أَيُّهَا النَّاسُ إِذَا طَغَى نِسَاؤُكُمْ، وَفَسَقَ فِتْيَانُكُمْ؟»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا لَكَائِنٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَشَدُّ مِنْهُ، كَيْفَ بِكُمْ إِذَا تَرَكْتُمُ الْأَمْرَ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ؟»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا لَكَائِنٌ؟ قَالَ: «نَعَمْ، وَأَشَدُّ مِنْهُ، كَيْفَ بِكُمْ إِذَا رَأَيْتُمُ الْمُنْكَرَ مَعْرُوفًا، وَالْمَعْرُوفَ مُنْكَرًا؟»
பாடம்:
அல்லாஹ் ஒருவருக்கு வசதி வாய்ப்புகளை வழங்கியிருந்தும் அவர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள் ஒரு தடவை பழமையான ஆலயத்துக்கு (ஹஜ் செய்ய) வராவிட்டால் அவர் … இழந்தவராவார்.
3703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நான், ஒரு அடியாருக்கு உடல் ஆரோக்கியத்தையும், விசாலமான பொருளாதாரத்தையும் வழங்கியிருந்து அவர் எனது கஅபா எனும் ஆலயத்துக்கு வராமல் 5 ஆண்டுகள் கடந்துவிட்டால் பிறகு அவருக்கு அந்த நற்பேறு கிடைக்காமல் போய்விடும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
«قَالَ اللَّهُ: إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدُ إِلَيَّ لَمَحْرُومٌ»
7421. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். ஒரு தடவை அவர்கள் குளிப்பதற்காக சென்றபோது தனது ஆடையை ஒரு கல்லின் மீது வைத்தார்கள். (அவர்கள் அதிகமாக வெட்கப்பட்ட காரணத்தால்) தனது மறைவிடத்தை வெளிப்படுத்தமாட்டார்கள்.
பனூ இஸ்ரவேலர்கள் இவருக்கு விரைவீக்கம் எனும் குறை இருப்பதால் தான் இவர் (குளிக்கும்போது நமக்குமுன்) ஆடையைக் கழற்றுவதில்லை என்று கூறுவார்கள்.
(மூஸா (அலை) அவர்கள் குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள்) அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடி பனூ இஸ்ரவேலர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அப்போது பனூ இஸ்ரவேலர்கள், மூஸா (அலை) அவர்கள் ஆண்களிலேயே அழகானவராக இருப்பதைக் கண்டனர்.
இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறிக்கிறது.
كان موسى رجلاً حييا وأنه أتى، أحسبه قال: الماء ليغتسل فوضع ثيابه على صخرة، وَكان لا يكاد تبدو عورته فقالت بنو إسرائيل: إن موسى آدر وبه آفة يعنون أي لا يضع ثيابه , فاحتملت الصخرة ثيابه حتى صارت بحذاء مجالس بني إسرائيل , فنظروا إلى موسى صَلَّى الله عَلَيه وَسَلَّم كأحسن الرجال، أو كما قال: فذلك قوله {فبرأ الله مما قالوا وَكان عند الله وجيها}
3579. இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால்) பனூஇஸ்ரவேலர்கள், மூஸா விரை வீக்கமுடையவர் என்று கூறினர். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள்.
அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினார்கள். இறுதியில் பனூஇஸ்ரவேலர்கள் இருக்கும் இடைத்தை அடைந்துவிட்டார்கள். அப்போது, பனூஇஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களை விரைவீக்கம் என்ற குறையில்லாதவராக கண்டனர். இதையே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்ட செய்தியாகும். இந்த வாக்கிய அமைப்பில்
فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى} [الأحزاب: 69] الْآيَةُ. قَالَ: ” لَهُ قَوْمُهُ بِهِ أُدْرَةُ فَخَرَجَ ذَاتَ يَوْمٍ يَغْتَسِلُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى صَخْرَةٍ، فَخَرَجَتِ الصَّخْرَةُ تَشْتَدُّ بِثِيَابِهِ فَخَرَجَ مُوسَى يَتْبَعُهَا عُرْيَانًا حَتَّى انْتَهَتْ إِلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ فَرَأَوْهُ وَلَيْسَ بَآدَرَ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69]
31848. இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால்) பனூஇஸ்ரவேலர்கள், மூஸா விரை வீக்கமுடையவர் என்று கூறினர். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள்.
அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினார்கள். இறுதியில் பனூஇஸ்ரவேலர்கள் இருக்கும் இடைத்தை அடைந்துவிட்டார்கள். அப்போது, பனூஇஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களை விரைவீக்கம் என்ற குறையில்லாதவராக கண்டனர். இதையே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
فِي قَوْلِهِ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69] قَالَ: قَالَ لَهُ قَوْمُهُ: إِنَّهُ آدَرُ، قَالَ: فَخَرَجَ ذَاتَ يَوْمٍ يَغْتَسِلُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى صَخْرَةٍ فَخَرَجَتِ الصَّخْرَةُ تَشْتَدُّ بِثِيَابِهِ وَخَرَجَ يَتْبَعُهَا عُرْيَانًا حَتَّى انْتَهَتْ بِهِ إِلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ قَالَ: «فَرَأَوْهُ لَيْسَ بِآدَرَ»، قَالَ: ” فَذَاكَ قَوْلُهُ: {فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69] “
சமீப விமர்சனங்கள்