Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

401. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். மீண்டும் முஅத்தின் ழுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்ததும் நபி (ஸல்) அவர்கள் சூடு தணியட்டும் என்றார்கள். இரு தடவையோ அல்லது மூன்று தடவையோ சொன்னார்கள். கடைசியில் நாங்கள் மலைக்குன்றுகளின் நிழலை கண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பம் நரகத்தின் அனலாகும் நெருப்பாகும். எனவே, வெப்பம் கடுமையாகி விட்டால் சூடு தணிந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ الظُّهْرَ فَقَالَ: «أَبْرِدْ». ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ: «أَبْرِدْ» – مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا – حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، ثُمَّ قَالَ: «إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ»


Abu-Dawood-400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

400. கோடைக் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் லுஹர் தொழுகையின் (நேர) அளவு, ஒருவரின் நிழல் அவரது மூன்று பாதங்கள் அளவிற்கு வந்ததிலிருந்து ஐந்து பாதங்கள் வரும் வரை இருக்கும். குளிர் காலத்தில் ஐந்து பாதங்கள் முதல் ஏழு பாதங்கள் அளவிற்கு வரும் வரை இருக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(குறிப்பு: இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் லுஹர் தொழுகையின் நேரத்தை எவ்வாறு கணக்கிட்டனர் என்று கூறப்படுகிறது. சூரியன் நடுஉச்சியை விட்டு மேற்கில் சாய்ந்த பின் ஏற்படும் நிழலின் அளவைப் பற்றியே இந்த செய்தியில் கூறப்படுகிறது)


«كَانَتْ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»


Abu-Dawood-399

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 147

லுஹர் தொழுகையின் நேரம்.

399. நான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுபவனாக இருந்தேன். எனது உள்ளங்கையில் ஒரு பிடி சரளை கற்களை சூடுதணிவதற்காக எடுத்து வைத்திருப்பேன். கடுமையான வெப்பத்தின் காரணமாக எனது நெற்றிக்கு அக்கற்களை (தரையில்) வைத்து அக்கற்கள் மீதே நான் சஜ்தா செய்வேன் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.


«كُنْتُ أُصَلِّي الظُّهْرَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآخُذُ قَبْضَةً مِنَ الْحَصَى لِتَبْرُدَ فِي كَفِّي أَضَعُهَا لِجَبْهَتِي أَسْجُدُ عَلَيْهَا لِشِدَّةِ الْحَرِّ»


Abu-Dawood-398

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

398. நபி (ஸல்) அவர்கள் சூரியன் பிரகாசமாக இருக்கும் போது லுஹர் தொழுவார்கள். அஸரும் தொழுவார்கள். எங்களில் ஒருவர் மதினாவின் கடைசிப்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்புவார் அப்போது சூரியன் இருந்து கொண்டிருக்கும். மஃரிப் தொழுகை பற்றிக் கூறியதை நான் மறந்துவிட்டேன். இஷாவை இரவின் மூன்றின் ஒரு பகுதி வரை அல்லது நடுப்பகுதி வரை தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அதற்குப் முன்பு தூங்குவதையும் அதற்குப் பின்பு பேசுபவதையும் வெறுப்பார்கள். எங்களில் ஒவ்வொருவரும் தமது தோழரை அறிந்து கொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் இருக்கும்) வேளையில் சுப்ஹு தொழுவார்கள். அதிலே அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ ، وَيُصَلِّي الْعَصْرَ وَإِنَّ أَحَدَنَا لَيَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ، وَيَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ الْمَغْرِبَ، وَكَانَ لَا يُبَالِي تَأْخِيرَ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ» – قَالَ: ثُمَّ قَالَ: إِلَى شَطْرِ اللَّيْلِ – قَالَ: «وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يُصَلِّي الصُّبْحَ، وَمَا يَعْرِفُ أَحَدُنَا جَلِيسَهُ الَّذِي كَانَ يَعْرِفُهُ، وَكَانَ يَقْرَأُ فِيهَا مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ»


Abu-Dawood-397

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 146

நபி ஸல் அவர்களின் தொழுகை நேரமும் அந்நேரத்தில் தொழுத விதமும்.

397. நபி (ஸல்) அவர்களின் தொழுகை நேரத்தைப் பற்றி ஜாபிர் (ரலி)யிடம் நாங்கள் விசாரித்தோம். அதற்கு அவர், நபி (ஸல்) அவர்கள் நடுப்பகலில் ழுஹரையும், சூரியன் பிரகாசமாக இருக்கும் போது அஸரையும், சூரியன் மறைந்ததும் மக்ரிபையும், இஷாவை மக்கள் அதிகமாக இருந்தால் விரைந்தும், மக்கள் குறைவாக இருந்தால் பிற்படுத்தியும், சுப்ஹை அதிகாலை நேரத்திலும் தொழுபவர்களாக இருந்தனர் என்று முஹம்மது பின் அம்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி காயும் போது ழுஹரை தொழுவார்கள். எங்களில் ஒருவர் மதீனாவின் கடைசிக்கு போய் விட்டு திரும்புகிற நேரத்தில் அஸர் தொழுவார்கள். அந்த நேரத்தில் சூரியன் உயிருடன் (சூடு குறையாமல்) இருக்கும். நான் மக்ரிப் நேரத்தை மறந்து விட்டேன். இஷாவை இரவில் மூன்றில் ஒரு பகுதி கழியும் வரை பிற்படுத்துவதை சிரமமாகக் கருதமாட்டார்கள். இஷாவுக்கு தூங்குவதையும், இஷாவுக்கு பிறகு பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் வெறுப்பார்கள். தனக்கு ஏற்கனவே

سَأَلْنَا جَابِرًا عَنْ وَقْتِ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ حَيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ، وَإِذَا قَلُّوا أَخَّرَ، وَالصُّبْحَ بِغَلَسٍ»


Abu-Dawood-396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

396. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகையின் நேரம் அஸ்ர் தொழுகை (நேரம்) வராத வரை ஆகும். அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் மஞ்சள் நிறமாக ஆகாத வரை ஆகும். மஃரிப் தொழுகையின் நேரம் ஆரம்ப இரவின் செம்மை இல்லாமல் இருக்கும் வரை ஆகும். இஷா தொழுகையின் நேரம் பாதி இரவு வரை ஆகும். ஃபஜ்ரு தொழுகையின் நேரம் சூரியன் உதிக்காத வரை ஆகும்.


«وَقْتُ الظُّهْرِ مَا لَمْ تَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ فَوْرُ الشَّفَقِ، وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، وَوَقْتُ صَلَاةِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ»


Abu-Dawood-395

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

395. நபி (ஸல்) அவர்களிடமிருந்த ஒருவர் வினவினார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் பிலாலுக்கு இகாமத் சொல்ல உத்தரவிட்டார்கள். பஜ்ர் நேரம் தென்பட்டவுடன் அவர் இகாமத் சொன்னார். ஒருவர் தனது தோழரின் முகத்தை அடையாளங்காண முடியாத அல்லது தனது பக்கத்தில் உள்ளவர் யார் என்று இனங்கண்டு கொள்ள முடியாத நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் சுபுஹை தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) பிலாலுக்கு உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சி சாயும் நேரத்தில் பிலால் ழுஹருக்கு இகாமத் சொல்வார். நபி (ஸல்) அவர்கள் லுஹர் நேரத்தை நன்கு தெரிந்திருந்தும் நடு பகல் ஆகிவிட்டதே என்று ஒருவர் சொல்கின்ற வரை நபி (ஸல்) ழுஹருக்கு பாங்கு சொல்ல உத்தரவிடமாட்டார்கள்.

பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் சூரியன் உச்சியில் உயர்ந்து வெண்மையாக இருக்கும்போது பிலால் அஸருக்கு இகாமத் சொல்வார். பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்வார்கள். மீண்டும் பிலாலுக்கு உத்தரவிடுவார்கள். செம்மேகம் மறைந்ததும் இஷாவுக்கு இகாமத் சொல்வார். மறுநாளானதும் பஜ்ர் தொழுது விட்டு திரும்பினார்கள். அப்போது நாங்கள் சூரியன் உதித்து விட்டதா? என்று

أَنَّ سَائِلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا حَتَّى أَمَرَ بِلَالًا فَأَقَامَ الْفَجْرَ حِينَ انْشَقَّ الْفَجْرُ، فَصَلَّى حِينَ كَانَ الرَّجُلُ لَا يَعْرِفُ وَجْهَ صَاحِبِهِ – أَوْ أَنَّ الرَّجُلَ لَا يَعْرِفُ مَنْ إِلَى جَنْبِهِ – ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَقَامَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ حَتَّى قَالَ: الْقَائِلُ انْتَصَفَ النَّهَارُ وَهُوَ أَعْلَمُ، ثُمَّ أَمَر بِلَالًا فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ، وَأَمَر بِلَالًا فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَأَمَر بِلَالًا فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، فَلَمَّا كَانَ مِنَ  الْغَدِ صَلَّى الْفَجْرَ وَانْصَرَفَ، فَقُلْنَا أَطَلَعَتِ الشَّمْسُ، فَأَقَامَ الظُّهْرَ فِي وَقْتِ الْعَصْرِ الَّذِي كَانَ قَبْلَهُ وَصَلَّى الْعَصْرَ، وَقَدِ اصْفَرَّتِ الشَّمْسُ – أَوْ قَالَ: أَمْسَى – وَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ، وَصَلَّى الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ “، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ الْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ»


Abu-Dawood-391

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அத்தியாயம் : 2

தொழுகை

144. கடமையான தொழுகை பற்றிய பாடம்.

391. நஜ்த் நாட்டவர்களிடமிருந்து ஒருவர் பரட்டைத் தலையோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது குரலின் முணுமுணுப்பை செவியுற முடிந்தது. ஆனால் கிட்டவருகின்ற வரை புரியவில்லை. (அவர் அருகில் வந்து) இஸ்லாத்தைப் பற்றி கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பகலிலும் இரவிலும் ஐந்து நேர தொழுகைகள் என்று சொன்னார்கள்.

அடுத்து இவை அல்லாதவை என் மீது கடமையாகுமா? என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள் இல்லை, ஆனால் நீ மேல் மிச்சமாக தொழுதாலே தவிர! என்று விளக்கம் சொன்னார்கள். மேலும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமலான் மாத நோன்பைப் பற்றி கூறினார்கள். அதற்கு அவர், இது அல்லாதது என் மீது கடமையாகுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால் நீ விரும்பி அதிகமாக நோன்பு நோற்றாலே தவிர! என்று பதில் சொன்னார்கள்.

அடுத்து, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மத்தை கூறினார்கள். இது அல்லாதது என் மீது கடமையாகுமா? என்று அவர் கேட்டதும், இல்லை. ஆனால் நீ விரும்பி அதிகமாக வழங்கினாலே தவிர! என்று பதில் சொன்னார்கள்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ: حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامَ شَهْرِ رَمَضَانَ». قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّدَقَةَ. قَالَ: فَهَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَّوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»


Abu-Dawood-389

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 143

ஆடையில் உமிழ்தல்.

389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆடையில் உமிழ்ந்து அதன் ஒரு பதியை மற்றொரு பகுதியுடன் தேய்த்து விட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூநள்ரா அவர்கள்.


«بَزَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبِهِ، وَحَكَّ بَعْضَهُ بِبَعْضٍ»


Next Page » « Previous Page