Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-323

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

323. அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் அப்ஸா அறிவிக்கும் போது இந்த ஹதீஸில், அம்மாரே! நீ இவ்வாறு செய்வதே உனக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி பின்பு தனது இரு கைகளை யும் ஒரே ஒரு தடவை மண்ணில் அடித்தார் கள். பிறகு அவ்விரண்டில் மற்றொன்றின் மீது அடித்து, தனது முகத்தையும் முழுங் கைகளையும், முட்டுக்கைகளை அடையாத வண்ணம் பாதி முழங்கைகள் வரை தடவினார்கள் என்று அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் கள்: இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா, சலமா பின் குஹைல், அஃமஷ் வழியாக இதை ஜரீர் அறிவிக்கின்றார்.


«يَا عَمَّارُ إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا، ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ، ثُمَّ ضَرَبَ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَالذِّرَاعَيْنِ إِلَى نِصْفِ السَّاعِدَيْنِ، وَلَمْ يَبْلُغِ الْمِرْفَقَيْنِ ضَرْبَةً وَاحِدَةً»


Abu-Dawood-322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

322. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா அவர் கள் அறிவிக்கின்றார்கள் : நான் உமர் (ரலி) அவர்களிடம் வீற்றிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் ஓரிடத்தில்ஒரு மாதம் அல்லது இரு மாதங் கள் தங்குகின்றறோம். (நாங்கள் எவ்வாறு தொழுவது) என்று வினவிய போது, உமர் (ரலி)அவர்கள் என்னை பொறுத்தவரையில் தண்ணீர் கிடைக்கின்ற வரை நான் தொழ மாட்டேன் என்று பதிலளித்தார்கள். அப் போது அம்மார்(ரலி) அவர்கள் இறை நம்பிக்கையாளரின் தலைவர் அவர்களே! உங்களுக்கு நினைவில்லையா? நானும், நீங் களும் ஒட்டகம் மேய்ப்பதில் ஈடுபட்டி ருக்கும் போது எமக்கு ஜனாபத் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் (மண்ணில்) புரண்டெழுந்தேன். நாம் நபி (ஸல்) அவர் களிடம் வந்ததும், நான் இதை அவர் களிடம் தெரிவித்தேன். அப்போது அவர் கள் நீ இவ்வாறு செய்வது உனக்கு போது மானதாகும் என்று கூறி, தனது இரு கை களையும் மண்ணில் அடித்தார்கள். பிறகு அவ்விரண்டு கைகளையும் ஊதினார்கள். பிறகு அவ்விரண்டையும் பாதி முழுங்கை கள் வரை தடவினார்கள் என்று கூறினார் கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், அவ்வா றன்று அல்லாஹ் மீது ஆணையாக! இது விஷயத்தில் நீர் எதை நோக்கி திரும்பி விட்டீரோ அதை நோக்கியே உம்மை திருப்பி விடுகிறோம் (இது உன் விருப்பத்தை சார்ந்தது)

كُنْتُ عِنْدَ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّا نَكُونُ بِالْمَكَانِ الشَّهْرَ وَالشَّهْرَيْنِ فَقَالَ عُمَرُ: أَمَّا أَنَا فَلَمْ أَكُنْ أُصَلِّي حَتَّى أَجِدَ الْمَاءَ. قَالَ: فَقَالَ عَمَّارٌ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا تَذْكُرُ إِذْ كُنْتُ أَنَا وَأَنْتَ فِي الْإِبِلِ، فَأَصَابَتْنَا جَنَابَةٌ، فَأَمَّا أَنَا، فَتَمَعَّكْتُ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا، وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَهُمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى نِصْفِ الذِّرَاعِ» فَقَالَ عُمَرُ: يَا عَمَّارُ اتَّقِ اللَّهَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنْ شِئْتَ وَاللَّهِ لَمْ أَذْكُرْهُ أَبَدًا، فَقَالَ عُمَرُ: كَلَّا وَاللَّهِ لَنُوَلِّيَنَّكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ


Abu-Dawood-321

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

321. ஹகீக் அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நான் அப்துல்லஹ் (பின் மஸ்வூத்) (ரலி) அவர்களுக்கும் அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்து இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ்வை நோக்கி) அபூஅப்துர் ரஹ்மான் அவர்களே! ஒருவர் ஜுனுபாகி, ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்கவில்லை எனில், அவர் தயம்மம் செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றீர்களா? என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் ஒரு மாதம் வரை தண்ணீர் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தயம்மம் செய்யவேண்டாம்! என்று பதிலுரைத்தார்கள். உடனே அபூமூஸா (ரலி)அவர்கள் அப்படியானால் அல் மாயிதா என்ற (5ம்) அத்தியாயத்தில் நீங்கள் (சுத்தம் செய்வதற்குரிய) நீரை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பரிசுத்தமான மண்ணைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள் என்ற (6ம்) வசனத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று வினவியதும் அப்துல்லாஹ் அவர்கள், இதில் அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுவிட்டால், அவர்களுக்கு குளிர்ந்துவிடும் போது அவர்கள் மண்ணில் தயம்மம் செய்ய துவங்கி விடுவார்கள்! என்று பதிலளித்தார்கள். அதற்காகத் தான் நீங்கள் இதை வெறுக்கின்றீர்களா? என்று அபூமூஸா(ரலி) அவர்கள் கேட்டபோது, அவர்கள் ஆம் என்றார்கள்.

كُنْتُ جَالِسًا بَيْنَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا أَمَا كَانَ يَتَيَمَّمُ؟ فَقَالَ: لَا، وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا. فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُونَ بِهَذِهِ الْآيَةِ الَّتِي فِي سُورَةِ الْمَائِدَةِ {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} [النساء: 43] فَقَالَ عَبْدُ اللَّهِ: لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذَا لَأَوْشَكُوا إِذَا بَرَدَ عَلَيْهِمُ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا بِالصَّعِيدِ. فَقَالَ لَهُ أَبُو مُوسَى: وَإِنَّمَا كَرِهْتُمْ هَذَا لِهَذَا. قَالَ: نَعَمْ. فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَر بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ، فَلَمْ أَجِدَ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَتَمَرَّغُ الدَّابَّةُ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَصْنَعَ هَكَذَا فَضَرَبَ بِيَدِهِ عَلَى الْأَرْضِ فَنَفَضَهَا، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ وَبِيَمِينِهِ عَلَى شِمَالِهِ عَلَى الْكَفَّيْنِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ» فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَفَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ


Abu-Dawood-320

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

320. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் உளலாதி ஜைவி என்ற இடத்தில் ஓய்வு எடுப்பதற்காக இரவு தங்கினார்கள். அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தனர். ஜஸ்ஃலிபார் என்ற இடத்தில் அன்னையாரின் கழுத்து மாலை அறுந்து விழுந்து விட்டது. இதனால் அவரது கழுத்து மாலையை தேடும் பணி, மக்களை அவர்களிடம் தண்ணீரில்லாத நிலையில் வைகறை வெளுக்கும் வரை (புறப்படமுடி யாமல்) தடுத்து விட்டது. இதனால் அபூபக்கர்(ரலி) அவர்கள் அன்னை ஆயி ஷா(ரலி) மீது கோபம் கொண்டு, மக்களை அவர்களிடம் தண்ணீர் இல்லாத சமயத்தில் (தொழமுடியாமல்)தடுத்து நிறுத்திவிட்டாயே என்று கூறினார்கள். அவ்வமயம் அல்லாஹ் தஆலா தனது திருத்தூதர் (ஸல்) அவர் களுக்கு தூய்மையான மண்ணில் சுத்தம் செய்கின்ற சலுகையை இறக்கியருளினான். எனவே, முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தயம்மம் செய்யக்) கிளம்பி தங்கள் கைகளை மண்ணில் அடித் தனர். பிறகு தங்கள் கைகளை மண்ணிலி ருந்து எதையும் அள்ளாமல் உயர்த்தி அவற்றை கொண்டு தங்களது முகங்களை யும், தங்களது (வெளிப்பக்க) கைகளை முழங்கைகள் வரையிலும் தங்களது உட்பக்க கைகளை அக்குள் வரையிலும் தடவிக் கொண்டார்கள் என்று அம்மார் பின் யாஸிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَّسَ بِأَوَّلَاتِ الْجَيْشِ وَمَعَهُ عَائِشَةُ فَانْقَطَعَ عِقْدٌ لَهَا مِنْ جَزْعِ ظَفَارِ، فَحُبِسَ النَّاسُ ابْتِغَاءَ عِقْدِهَا ذَلِكَ حَتَّى أَضَاءَ الْفَجْرُ، وَلَيْسَ مَعَ النَّاسِ مَاءٌ فَتَغَيَّظَ عَلَيْهَا أَبُو بَكْرٍ وَقَالَ: حَبَسْتِ النَّاسَ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رُخْصَةَ التَّطَهُّرِ بِالصَّعِيدِ الطَّيِّبِ، فَقَامَ الْمُسْلِمُونَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبُوا بِأَيْدِيهِمْ إِلَى الْأَرْضِ، ثُمَّ رَفَعُوا أَيْدِيَهُمْ، وَلَمْ يَقْبِضُوا مِنَ التُّرَابِ شَيْئًا، فَمَسَحُوا بِهَا وُجُوهَهُمْ وَأَيْدِيَهُمْ إِلَى الْمَنَاكِبِ، وَمِنْ بِطُونِ أَيْدِيهِمْ إِلَى الْآبَاطِ ” زَادَ ابْنُ يَحْيَى فِي حَدِيثِهِ قَالَ ابْنُ شِهَابٍ فِي حَدِيثِهِ: «وَلَا يَعْتَبِرُ بِهَذَا النَّاسُ»، قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ إِسْحَاقَ قَالَ فِيهِ: عَنِ ابْنِ عَبَّاسٍ «وَذَكَرَ ضَرْبَتَيْنِ». كَمَا ذَكَرَ يُونُسُ، وَرَوَاهُ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ «ضَرْبَتَيْنِ»، وَقَالَ مَالِكٌ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ، وَكَذَلِكَ قَالَ أَبُو أُوَيْسٍ: عَنِ الزُّهْرِيِّ، وَشَكَّ فِيهِ ابْنُ عُيَيْنَةَ قَالَ: مَرَّةً عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَمَرَّةً قَالَ: عَنْ أَبِيهِ، وَمَرّةً قَالَ: عَنِ ابْنِ عَبَّاسٍ اضْطَرَبَ ابْنُ عُيَيْنَة فِيهِ، وَفِي سَمَاعِهِ مِنَ الزُّهْرِيِّ وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ فِي هَذَا الْحَدِيثِ «الضَّرْبَتَيْنِ» إِلَّا مَنْ سَمَّيْتُ