Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-313

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 122

மாதவிடாய் குளிப்பு.

313. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களுடைய ஒட்டகையின் சேணத்தின் பின் பக்கம் அமர்த்தி பயணம் செய்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் வைகறை வரை தொடர்ந்து பயணம் செய்து, தனது ஒட்டகையை படுக்க வைத்தார்கள். நான் அவர்கள் ஒட்டகையின் சேணத்திலிருந்து இறங்கினேன். இந்த இடத்தில் எனது இரத்தம் படிந்திருந்தது! அது எனது முதல் மாதவிடாயாகும். உடனே, ஒட்டகத்திற்கு பாய்ந்து சென்று விட்டேன். மேலும், நான் வெட்கமடைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும், இரத்ததையும் கண்ட போது உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்றேன். அப்போது அவர்கள் நீ உன்னை (உனது ரத்தம் சேணத்தில் வழிவதை விட்டும்) சரி செய்து கொள்க! மேலும், நீ ஒரு தண்ணீர் பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு போட்டு சேணத்தில் பட்ட இரத்தத்தை கழுவி விடு. பிறகு உனது வாகன இருக்கைக்கு வருக என்று சென்னார்கள். இந்நிகழ்ச்சியை தெரிவித்த பின்னர் அறிவிப்பாளர் மேலும் அறிவிக் கின்றார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கைபரை வெற்றி கண்ட போது எங்க ளுக்கு யுத்தத்தில் கிடைத்த பொருளில் இருந்து கொஞ்சத்தை வழங்கினார்கள். மேலும்,

أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَقِيبَةِ رَحْلِهِ قَالَتْ: فَوَاللَّهِ، لَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصُّبْحِ، فَأَنَاخَ وَنَزَلْتُ عَنْ حَقِيبَةِ رَحْلِهِ، فَإِذَا بِهَا دَمٌ مِنِّي فَكَانَتْ أَوَّلُ حَيْضَةٍ حِضْتُهَا قَالَتْ: فَتَقَبَّضْتُ إِلَى النَّاقَةِ وَاسْتَحْيَيْتُ، فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بِي وَرَأَى الدَّمَ قَالَ: «مَا لَكِ لَعَلَّكِ نَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «فَأَصْلِحِي مِنْ نَفْسِكِ، ثُمَّ خُذِي إِنَاءً مِنْ مَاءٍ، فَاطْرَحِي فِيهِ مِلْحًا، ثُمَّ اغْسِلِي مَا أَصَابَ الْحَقِيبَةَ مِنَ الدَّمِ، ثُمَّ عُودِي لِمَرْكَبِكِ». قَالَتْ: فَلَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ رَضَخَ لَنَا مِنَ الفَيْءِ قَالَتْ: وَكَانَتْ لَا تَطَّهَّرُ مِنْ حَيْضَةٍ إِلَّا جَعَلَتْ فِي طَهُورِهَا مِلْحًا، وَأَوْصَتْ بِهِ أَنْ يُجْعَلَ فِي غُسْلِهَا حِينَ مَاتَتْ


Abu-Dawood-312

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

312. நான் ஹஜ்ஜுக்கு சென்றதும் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது நான் இறை நம்பிக்கையாளரின் அன்னையே! சம்ரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் மாதவிடாய் (காலத்தில் விட்ட தொழுகையை) பெண்கள் களாச் செய்ய வேண்டும் (திரும்பத் தொழ வேண்டும்) என்று பெண்களுக்கு கட்டளையிடு கின்றாரே? என்று வினவியதற்கு அவர்கள் அவ்வாறு பெண்கள் களா செய்ய வேண்டாம். நபி(ஸல்) அவர்களின் மனைவி யரில் எவரேனும் பேறுகால இரத்தப் போக்கின் போது நாற்பது இரவுகள் (தொழாமல்) இருப்பார்கள். பேறுகால ரத்தப்போக்கின் போது விடுபட்ட தொழுகையை களா செய்யும்படி அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட மாட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அஸ்தி கிளையைச் சார்ந்த முஸ்ஸா

அசத்திய்யா : இவருடைய பெயர் முஸ்ஸா என்பதாகும். இவர் உம்மு பஸ்ஸ என்ற இடுகுளி பெயரால் அழைக்கப் படுகிறார் என்று முஹம்மது பின் ஹாதம் அவர்கள் கூறுகின்றார்கள்.


حَجَجْتُ فَدَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، إِنَّ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ يَأْمُرُ النِّسَاءَ يَقْضِينَ صَلَاةَ الْمَحِيضِ فَقَالَتْ: «لَا يَقْضِينَ كَانَتِ الْمَرْأَةُ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقْعُدُ فِي النِّفَاسِ أَرْبَعِينَ لَيْلَةً لَا يَأْمُرُهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَضَاءِ صَلَاةِ النِّفَاسِ»


Abu-Dawood-311

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 121

பேர்கால ரத்தம்.

311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பேர்கால தொடக்குள்ள பெண்கள் பேர்கால ரத்தத்திற்கு பிறகு நாற்பது பகல்கள் அல்லது நாற்பது இரவுகள் (தொழாமல், நோன்பு நோற் காமல்) இருப்பார்கள். மேலும் நாங்கள் எங்களுடைய முகங்களில் (ஏற்படுகின்ற பருவை போக்குவதற்காக) வரிஸ் என்ற செடியின் சாயத்தைப் பூசிக் கொள்வோம். 

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)


«كَانَتِ النُّفَسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقْعُدُ بَعْدَ نِفَاسِهَا أَرْبَعِينَ يَوْمًا – أَوْ أَرْبَعِينَ لَيْلَةً – وَكُنَّا نَطْلِي عَلَى وُجُوهِنَا الْوَرْسَ – تَعْنِي – مِنَ الكَلَفِ»


Abu-Dawood-310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

310. ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் சூதக ரத்தப் போக்கு உடையவர் ஆனார்கள். அவருடைய கணவர் அவரிடம் உடலுறவு கொள்வார்கள். 

அறிவிப்பவர் : ஹிம்னா பின்த் ஜஹ்ஷ்

(குறிப்பு : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ், ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் ஆயியோரிடம் இக்ரிமா செவியுற்றார் என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது என்று முன்திரி குறிப்பிடுகிறார்கள்.


«أَنَّهَا كَانَتْ مُسْتَحَاضَةً وَكَانَ زَوْجُهَا يُجَامِعُهَا»


Abu-Dawood-309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 120

சூதக ரத்தப் போக்குள்ளவரை கட்டி உடலுறவு கொள்ளுதல்.

309. உம்மு ஹபீபா (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக இருக்கும் போது அவரிடம் அவரது கணவர் உடலுறவு கொள்வார்.

அறிவிப்பவர் : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: 

முஅல்லா பின் மன்சூர் நம்பிக்கை யாளர் என்று யஹ்யா பின் முஈன் தெரிவிக் கின்றார். இவர் எதையும் சொந்த அபிப் பிராய கண்ணோட்டத்துடன் அனுகுபவர் என்பதால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இவரிடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள்.


«كَانَتْ أُمُّ حَبِيبَةَ تُسْتَحَاضُ فَكَانَ زَوْجُهَا يَغْشَاهَا»


Abu-Dawood-307

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 119

துப்புரவுக்குப் பிறகு கலங்கலான (மண் நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால் ?

307. நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற மற்றும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ளமாட் டோம் என்று நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்ட உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஹுதைல்

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் துப்புரவான பிறகு என்ற வாசகம் இடம் பெறவில்லை.)


«كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ، وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا»


Abu-Dawood-306

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

306. ரபீஆ அவர்கள், சூதக ரத்தப்போக்கு உள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று கருத்து கொண்டிருக்கவில்லை எனினும், ரத்தமல்லாத உலூ முறிவு அவரை தீண்டினால் அவர் உலூச் செய்ய வேண்டும் என்பதை தவிர.

அறிவிப்பவர் : வஹப் லைஸ்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:

இதுவே, மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்களது கருத்தாகும்.


«أَنَّهُ كَانَ لَا يَرَى عَلَى الْمُسْتَحَاضَةِ وُضُوءًا عِنْدَ كُلِّ صَلَاةٍ إِلَّا أَنْ يُصِيبَهَا حَدَثٌ غَيْرُ الدَّمِ، فَتَوَضَّأُ»


Abu-Dawood-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 118

உளூவை நீக்கும் காரியம்.

305. உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக ஆன போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது (வழமையான) மாதவிடாய்களில் (தொழுகையை விட்டு) காத்திருந்து பிறகு குளித்து தொழுமாறும் அதன் பிறகு எதையும் கண்டால் உலூச் செய்து தொழுவாராக என்றும் கட்டளையிட்டார்.

அறிவிப்பவர் : இக்ரிமா

(குறிப்பு : இந்த ஹதீஸ் முர்ஸலானது என்று முந்திரி குறிப்பி டுகின்றார். ஏனெனில் இக்ரிமா நபித் தோழர் அல்ல.)


أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْتَظِرَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي، فَإِنْ رَأَتْ شَيْئًا مِنْ ذَلِكَ، تَوَضَّأَتْ وَصَلَّتْ»


Abu-Dawood-304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 117

ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யலாம்.

304. பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் சூதக ரத்தப் போக்கு உள்ளவராக ஆனபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், இது மாதவிடாய் ரத்தம் எனில் அது அடையாளங்கண்டு கொள்ளப் படும் கரிய ரத்தமாகும். இந்த ரத்தம் உனக்கு வந்தால் நீ தொழுகை விட்டுவிடு. இது அல்லாத ரத்தம் வந்தால் நீ உலூச் செய்து தொழுது கொள் என்றார்கள். 

அறிவிப்பவர் : பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

எமக்கு இப்னு அபீ அதீ என்பார் தனது மனனத்தின் மூலம் அறிவிக்கும் போது உர்வா (அவர்களுக்கும் பாத்திமா அவர்களுக்கும் இடையில்) அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் என்று அறிவிப்பாளர் இப்னுல் முஸன்னா கூறுகின்றார். (286 வது ஹதீஸின் குறிப்பை பார்க்கவும்).

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: 

இந்த ஹதீஸை அபூ ஜஃபர் வழியாக ஹக்கம் மூலம் அறிவிக்கும் அலா பின் அல் முஸய்யிப் என்பாரிடமிருந்தும் ஷுஃபா விடமிருந்தும் அறிவிக்கப் படுகின்றது. இந்த

أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ، فَتَوَضَّئِي وَصَلِّي»


Next Page » « Previous Page