Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-303

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 116

உதிரப்போக்குடையவள் அவ்வப்போது குளித்தல்.

303. சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தொடர்பாக முஹம்மது பின் உஸ்மான் அவர்கள் காசிம் பின் முஹம்மது அவர்களிடம் வினவிய போது, அப்படிப் பட்டவர் தனது (வழமையான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு விடுவாராக! பின்பு குளித்து தொழுவாராக. பிறகு, (உதிரப்போக்கு) நாட்களில் (அவ்வப்போது) குளிப்பாராக என்று பதிலளித்தார். 

அறிவிப்பவர் : முஹம்மது பின் உஸ்மான்.


أَنَّهُ سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ فَتُصَلِّي، ثُمَّ تَغْتَسِلُ فِي الْأَيَّامِ»


Abu-Dawood-302

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 115

நண்பகலில் எனக் குறிப்பிட்டுக் கூறாமல் ஒவ்வோொரு நாளும் ஒருமுறை குளிக்க வேண்டும் என்று சொல்லுதல்.

302. சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தனது மாதவிடாய் நின்றதும் தினந்தோறும் குளிப்பாராக. மேலும் அவர் கொழுப்பு அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிய கம்பளித் துணியை (தனது மர்மத்தானத்தில்) வைத்துக் (கட்டி) கொள்வாராக! 

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(குறிப்பு : இது கரீபான ஹதீஸ் ஆகும் என முன்திரி குறிப்பிடுகின்றார்.)


«الْمُسْتَحَاضَةُ إِذَا انْقَضَى حَيْضُهَا اغْتَسَلَتْ كُلَّ يَوْمٍ، وَاتَّخَذَتْ صُوفَةً فِيهَا سَمْنٌ أَوْ زَيْتٌ»


Abu-Dawood-301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 114

ரத்தப் போக்குள்ளவள் ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தல்.

301. கஃகாஃ, ஸைது பின் அஸ்லம் ஆகிய இருவரும் அபூபக்கர் (ரலி) அவர்களின் அடிமையான சுமைய்யீ என்பவரை சயீத் பின் அல்முஸய்யிப் (ரலி) யிடம் சூதக ரத்தப் போக்குள்ளவர் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்போது சயீத், அப்படிப் பட்டவர் ழுஹ்ருக்கு லுஹர் குளிக்க வேண்டும். (அதாவது இன்று லுஹர் – நண்பகல் நேரத்தில் குளித்தால் அவர் குளிப்பு மறுநாள் லுஹர் வரை செல்லுபடியாகும்.) மேலும் அவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும். அவருக்கு ரத்தம் மிகைத்து வருமானால் பஞ்சிட்ட ஆடையை கொண்டு துணியில் இறுக்கிக் கட்டிக் கொள்ளவும் என்று பதிலளித்தார்கள் என்று சுமைய்யி அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இப்னு உமர் (ரலி) யிடம் இருந்தும் அனஸ் பின் மாலிக் (ரலி) யிடம் இருந்தும் அவர் ழுஹருக்கு லுஹர் குளிக்க வேண்டும் என்றே அறிவிக்கப் படுகிறது. ஆயிஷா (ரலி)யிடம் இருந்து கமீர் வழியாக தனது மனைவி மூலம் அறிவிக்கும் ஷுஃபீ வழியாக தாவூத், ஆஸிம் ஆகியோரும் இவ்வாறே அறிவிக்கின்றனர்.

أَنَّ الْقَعْقَاعَ، وَزَيْدَ بْنَ أَسْلَمَ أَرْسَلَاهُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ يَسْأَلُهُ كَيْفَ تَغْتَسِلُ الْمُسْتَحَاضَةُ فَقَالَ: «تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ، وَتَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَإِنْ غَلَبَهَا الدَّمُ اسْتَثْفَرَتْ بِثَوْبٍ»


Abu-Dawood-299

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

299. சூதக இரத்தப்போக்குள்ளவர் தொடர்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்படிப்பட்டவர் (ஒரு தடவை மட்டும் குளிப்பாராக! பிறகு தனது மாதவிடாய் நாட்கள் வரை உலூச் செய்வாராகஎன்று கூறுகின்றார். 

அறிவிப்பவர் : அன்னைஆயிஷா (ரலி).


«فِي الْمُسْتَحَاضَةِ تَغْتَسِلُ تَعْنِي مَرَّةً وَاحِدَةً، ثُمَّ تَوَضَّأُ إِلَى أَيَّامِ أَقْرَائِهَا»


Abu-Dawood-298

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

298. பாத்திமா பின்த் அபீஷுபைஷ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களது நிகழ்ச்சியை தெரிவிக்கின்றார். பிறகு நீ குளித்துக் கொள். பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து தொழுது கொள் என்று கூறியதாகவும்அறிவிக்கின்றார்.

அறிவிப்பவர் : அன்னைஆயிஷா (ரலி).


جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ خَبَرَهَا وَقَالَ «ثُمَّ اغْتَسِلِي، ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ وَصَلِّي»


Abu-Dawood-297

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 113

உதிரப்போக்குடையவள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்காமல் மாதவிடாய் நிற்கும் மட்டும் குளித்தல்.

297. சூதகரத்தப்போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து தொழுவாராக. மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்தல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

உஸ்மான் பின் அபீஷைபா என்பார், அவர் நோன்பு நோற்பாராக மேலும் தொழுவாராக என்று கூடுதலாக அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் திர்மிதி, இப்னுமாஜாஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.

கூபா நகரின் நீதிபதியான ஷரீக் என்பாரை அநேகர் குறை கூறியுள்ளனர். அதை கூபா நகரத்தை சார்ந்த அபுல் யக்லான் என்ற உஸ்மான் பின் அபீர் என்பாரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.)


فِي «الْمُسْتَحَاضَةِ تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي، وَالْوُضُوءُ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


Abu-Dawood-296

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

296. ஒரு பெண்மணிக்கு சூதகரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் லைஸ்னற அறிவிப்பாளரின் கருத்தை கூறும் போது, அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும் தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக என்று அறிவித்து, மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தில் தொடர்கிறார்.

அறிவிப்பாளர் தொடர் : அப்துல்லாஹ் பின் மஸ்லமா.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ اسْتُحِيضَتْ – مُنْذُ كَذَا وَكَذَا – فَلَمْ تُصَلِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ، إِنَّ هَذَا مِنَ الشَّيْطَانِ لِتَجْلِسْ فِي مِرْكَنٍ، فَإِذَا رَأَتْ صُفْرَةً فَوْقَ الْمَاءِ فَلْتَغْتَسِلْ لِلظُّهْرِ وَالْعَصْرِ غُسْلًا وَاحِدًا، وَتَغْتَسِلْ لِلْمَغْرِبِ وَالْعِشَاءِ غُسْلًا وَاحِدًا، وَتَغْتَسِلْ لِلْفَجْرِ غُسْلًا وَاحِدًا ، وَتَتَوَضَّأْ فِيمَا بَيْنَ ذَلِكَ»


Abu-Dawood-295

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

295. ஒரு பெண்மணிக்கு சூதக இரத்தபோக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸின் கருத்தை கூறும் போது அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும். தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளக! என்று மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தை போன்றே தொடர்ந்து இங்கும் தெரிவிக்கின்றார்.

அறிவிப்பவர் : உம்முஸலமா (ரலி)

(குறிப்பு : இமாம் நஸயீ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இந்த தொடரில் யாரென அறியப்படாத ஒருவர் இடம் பெறுகிறார்.)


أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلٍ «اسْتُحِيضَتْ فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ» فَلَمَّا جَهَدَهَا ذَلِكَ «أَمَرَهَا أَنْ تَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِغُسْلٍ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِغُسْلٍ، وَتَغْتَسِلَ لِلصُّبْحِ»


Abu-Dawood-294

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 112

இரு தொழுகைக்காகவும் குளித்துக் கொண்டு இரு தொழுகைகளையும் சேர்த்து தொழுவது பற்றிய அறிவிப்புகள்.

294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அஸர் தொழுகையை முற்படுத்தி லுஹர் தொழுகையை பிற்படுத்தி இரண்டுக்கும் சேர்த்து ஒரு தடவை குளிக்க வேண்டும் எனவும் மக்ரிபை பிற்படுத்தி இஷாவை முற்படுத்தி அவ்விரண்டிற்கும் சேர்த்து ஒரு தடவை குளிக்க வேண்டும் எனவும் அந்த பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டது என ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என தன் தந்தை வாயிலாக அப்துற்றஹ்மான் அறிவித்தார். நான் அப்துற்றஹ்மானிடம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தான்.


«اسْتُحِيضَتِ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُمِرَتْ أَنْ تُعَجِّلَ الْعَصْرَ وَتُؤَخِّرَ الظُّهْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا، وَأَنْ تُؤُخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلًا، وَتَغْتَسِلَ لِصَلَاةِ الصُّبْحِ غُسْلًا». فَقُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَا أُحَدِّثُكَ إِلَّا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ


Next Page » « Previous Page