Category: புஹாரி

Bukhari

Bukhari-6426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6426. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்றார்கள்.18

Book :81


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا، فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى المَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى المِنْبَرِ، فَقَالَ: «إِنِّي فَرَطُكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي قَدْ أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ – أَوْ مَفَاتِيحَ الأَرْضِ – وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنِّي أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»


Bukhari-6425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 இவ்வுலக வாழ்வின் செழுமை குறித்தும், அதை அடைவதற்காக(ப் போட்டி போட்டுக் கொண்டு) அதீத ஆர்வம் காட்டுவது குறித்தும் வந்துள்ள எச்சரிக்கை.

6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது.

أَنَّ عَمْرَو بْنَ عَوْفٍ، وَهُوَ حَلِيفٌ لِبَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ، كَانَ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ إِلَى البَحْرَيْنِ يَأْتِي بِجِزْيَتِهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ صَالَحَ أَهْلَ البَحْرَيْنِ، وَأَمَّرَ عَلَيْهِمُ العَلاَءَ بْنَ الحَضْرَمِيِّ، فَقَدِمَ أَبُو عُبَيْدَةَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَسَمِعَتِ الأَنْصَارُ بِقُدُومِهِ، فَوَافَتْهُ صَلاَةَ الصُّبْحِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا انْصَرَفَ تَعَرَّضُوا لَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ رَآهُمْ، وَقَالَ: «أَظُنُّكُمْ سَمِعْتُمْ بِقُدُومِ أَبِي عُبَيْدَةَ، وَأَنَّهُ جَاءَ بِشَيْءٍ» قَالُوا: أَجَلْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَأَبْشِرُوا وَأَمِّلُوا مَا يَسُرُّكُمْ، فَوَاللَّهِ مَا الفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمُ الدُّنْيَا، كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا، وَتُلْهِيَكُمْ كَمَا أَلْهَتْهُمْ»


Bukhari-6424

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6424. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :81


يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ، إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ، إِلَّا الجَنَّةُ


Bukhari-6423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6423. (தொடர்ந்து) முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.

இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.

(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள். 16

Book :81


غَدَا عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” لَنْ يُوَافِيَ عَبْدٌ يَوْمَ القِيَامَةِ، يَقُولُ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ


Bukhari-6422

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 இறைதிருப்தியை நாடிச் செய்யப்படும் நல்லறம்13 இது குறித்து சஅத் (ரலி) அவர்களின் அறிவிப்பில் வந்துள்ளது. 14

6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.

(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.

Book : 81


وَزَعَمَ مَحْمُودٌ أَنَّهُ عَقَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: وَعَقَلَ مَجَّةً مَجَّهَا مِنْ دَلْوٍ، كَانَتْ فِي دَارِهِمْ


Bukhari-6421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:

1. பொருளாசை.

2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :81


يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ ” رَوَاهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ


Bukhari-6420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.

1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.

2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Book :81


لاَ يَزَالُ قَلْبُ الكَبِيرِ شَابًّا فِي اثْنَتَيْنِ: فِي حُبِّ الدُّنْيَا وَطُولِ الأَمَلِ ” قَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، وَابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدٌ، وَأَبُو سَلَمَةَ


Bukhari-6419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

ஒருவர் அறுபது வயதை அடைந்து விட்டால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

சிந்தித்து உணரக்கூடியவன் சிந்திப்பதற்கு வேண்டிய நீண்ட ஆயுளை உங்களுக்கு நாம் கொடுக்கவில்லையா? இன்னும் எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்துதானே இருந்தார்! (என்று அல்லாஹ் கேட்பான்). (அல்குர்ஆன்: 35:37)

அதாவது, எச்சரிக்கை செய்பவர் என்பது வயது மூப்பினால் ஏற்படும் நரையாகும்.


6419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இந்தச் செய்தியை ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அவர்களிடமிருந்து மஃன் பின் முஹம்மத் அறிவித்துள்ளதைப்

«أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ، حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً»


Bukhari-6418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6418. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு ‘(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் – ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது’ என்று கூறினார்கள்.

Book :81


خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطُوطًا، فَقَالَ: «هَذَا الأَمَلُ وَهَذَا أَجَلُهُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ جَاءَهُ الخَطُّ الأَقْرَبُ»


Bukhari-6417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.

அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 3:185)

அவர்கள் உண்டு, சுகித்து, ஆசை அவர்களைத் திசை திருப்புமாறு அவர்களை விட்டு விடுவீராக! பின்னர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 15:3)

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மறுமை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் புதல்வர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் மறுமையின் புதல்வர்களாயிருங்கள். இம்மையின் புதல்வர்களாகிவிடாதீர்கள். இன்று வினை உண்டு. விசாரணை இல்லை. நாளை விசாரணை உண்டு. ஆனால் வினை இல்லை.


6417. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

خَطَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا مُرَبَّعًا، وَخَطَّ خَطًّا فِي الوَسَطِ خَارِجًا مِنْهُ، وَخَطَّ خُطَطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الوَسَطِ، وَقَالَ: ” هَذَا الإِنْسَانُ، وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ – أَوْ: قَدْ أَحَاطَ بِهِ – وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهَذِهِ الخُطَطُ الصِّغَارُ الأَعْرَاضُ، فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا


Next Page » « Previous Page