Category: புஹாரி

Bukhari

Bukhari-6344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 நபி (ஸல்) அவர்கள் தம் சேவகரின் நீண்ட ஆயுளுக்காகவும் நிறைந்த செல்வத்திற் காகவும் பிரார்த்தித்தது.

6344. அனஸ்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ள (ஆயுள் முதலான) வற்றில் வளம் சேர்ப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

Book : 80


قَالَتْ أُمِّي: يَا رَسُولَ اللَّهِ، خَادِمُكَ أَنَسٌ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»


Bukhari-6343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கிப்லாவை முன்னோக்கியவாறு பிரார்த்திப்பது

6343. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க இந்தத் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தம் மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டார்கள்.

Book : 80


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هَذَا المُصَلَّى يَسْتَسْقِي، فَدَعَا وَاسْتَسْقَى، ثُمَّ اسْتَقْبَلَ القِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ»


Bukhari-6342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 கிப்லாவை முன்னோக்காமல் பிரார்த்திப்பது

6342. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு) வெள்ளிக் கிழமையன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பின்) மேகமூட்டம் உண்டாம் மழை பொழிந்தது. எந்த அளவிற்கென்றால், அந்த மனிதரால் தம் வீட்டுக்குப் போய்ச் சேர முடியவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை நீடித்தது. (அந்த வெள்ளிக்கிழமை) ‘அதே மனிதர்’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, ‘மழையை வேறு பக்கம் திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (கன மழையினால்) நாங்கள் நீரில் மூழ்கிவிட்டோம்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே’ என்று பிரார்த்தித்தார்கள்.

அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப் புறங்களுக்குச் சென்றது

بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَتَغَيَّمَتِ السَّمَاءُ وَمُطِرْنَا، حَتَّى مَا كَادَ الرَّجُلُ يَصِلُ إِلَى مَنْزِلِهِ، فَلَمْ تَزَلْ تُمْطَرُ إِلَى الجُمُعَةِ المُقْبِلَةِ، فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ، فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا فَقَدْ غَرِقْنَا. فَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَجَعَلَ السَّحَابُ يَتَقَطَّعُ حَوْلَ المَدِينَةِ، وَلاَ يُمْطِرُ أَهْلَ المَدِينَةِ


Bukhari-6341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 பிரார்த்திக்கும் போது கைகளை உயர்த்துவது அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தையின் சகோதரர் அபூஆமிர் கொல்லப்பட்ட சமயம்) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தினார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் கண்டேன்.30 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும் உயர்த்தியவாறு, இறைவா! கா-த் செய்த தவற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என உன்னிடம் நான் அறிவிக்கிறேன் என்று கூறினார்கள்.31

6341. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்த போது) அவர்களின் அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்கத் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.

Book : 80


«رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ»


Bukhari-6340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

6340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 80


يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي


Bukhari-6339

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6339. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக’ என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :80


لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمِ المَسْأَلَةَ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ


Bukhari-6338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 கேட்பதை வ-யுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

6338. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு’ என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 80


إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمِ المَسْأَلَةَ، وَلاَ يَقُولَنَّ: اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّهُ لاَ مُسْتَكْرِهَ لَهُ


Bukhari-6337

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 எதுகைமோனையுடன் (அலங்கார ஒ- நயத்துடன்) பிரார்த்திப்பது வெறுக்கப்பட்ட தாகும்.29

6337. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

வாரத்தில் ஒரு முறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள். (அது போதாது எனக் கருதி) அதற்கு நீங்கள் மறுத்தால் (வாரத்தில்) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள். அதை விட அதிகமாகப் போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள். (அதை விட அதிகமாகப் போய்) இந்தக் குர்ஆன் மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடாதீர்கள்.

மக்கள் எதையோ பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற, அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட, அதனால், அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கிற நிலையில் உங்களை நான் காணக் கூடாது. மாறாக, நீங்கள் (அப்போது) மெளனமாக இருங்கள். அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக் கொண்டால் அவர்களிடையே உரையாற்றுங்கள். எதுகைமோனையுடன் பிரார்த்திப்பதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன்.

«حَدِّثِ النَّاسَ كُلَّ جُمُعَةٍ مَرَّةً، فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ، فَإِنْ أَكْثَرْتَ فَثَلاَثَ مِرَارٍ، وَلاَ تُمِلَّ النَّاسَ هَذَا القُرْآنَ، وَلاَ أُلْفِيَنَّكَ تَأْتِي القَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ، فَتَقُصُّ عَلَيْهِمْ، فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ، وَلَكِنْ أَنْصِتْ، فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ، فَانْظُرِ السَّجْعَ مِنَ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ»، فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لاَ يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ


Bukhari-6336

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6336. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்)நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், ‘நிச்சயமாக இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன்) அறிவித்தார். (அதை) நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். (அதைக் கேட்ட போது) நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அவர்களின் முகத்தில் நான் அக்கோபத்தைக் கண்டேன். (அப்போது) அவர்கள், ‘(இறைத்தூதர்) மூஸா அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதைவிட அதிகமாக அவர்கள் புண்படுத்தப் பட்டார்கள். இருப்பினும், சகித்துக் கொண்டார்கள்’ என்றார்கள்.

Book :80


قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، فَأَخْبَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَغَضِبَ، حَتَّى رَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، وَقَالَ: «يَرْحَمُ اللَّهُ مُوسَى لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ»


Bukhari-6335

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6335. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்தவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்’ என்றார்கள்.

Book :80


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي المَسْجِدِ فَقَالَ: «رَحِمَهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً، أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا»


Next Page » « Previous Page