Category: புஹாரி

Bukhari

Bukhari-6303

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6303. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டது. முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்ததுமில்லை; எந்த பேரீச்ச மரத்தையும் நான் நட்டதுமில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இது குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களின் குடும்பத்தார் சிலரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் வீடு கட்டினார்’ என்று கூறினார்கள்.

நான், ‘தாம் வீடு கட்டுவதற்கு முன்னர் இவ்வாறு அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்’ என்றேன்.

Book :79


«وَاللَّهِ مَا وَضَعْتُ لَبِنَةً عَلَى لَبِنَةٍ، وَلاَ غَرَسْتُ نَخْلَةً، مُنْذُ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ سُفْيَانُ: فَذَكَرْتُهُ لِبَعْضِ أَهْلِهِ، قَالَ: وَاللَّهِ لَقَدْ بَنَى. قَالَ سُفْيَانُ: قُلْتُ: فَلَعَلَّهُ قَالَ قَبْلَ أَنْ يَبْنِيَ


Bukhari-6302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆடுகளை (அல்லது கறுப்பு நிற ஒட்டகங்களை) மேய்க்கும் இடையர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டி பெருமை யடித்துக்கொள்வது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.76

6302. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை. 77

Book : 79


«رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنَيْتُ بِيَدِي بَيْتًا يُكِنُّنِي مِنَ المَطَرِ، وَيُظِلُّنِي مِنَ الشَّمْسِ، مَا أَعَانَنِي عَلَيْهِ أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ»


Bukhari-6301

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து திசைதிருப்பக்கூடிய ஒவ்வொரு விஷயமும் வீணானதே’ என்பது குறித்தும், ஒருவர் தம் நண்பரிடம் வா. சூதாடுவோம்’ என அழைப்பது குறித்தும். அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணாண பேச்சு களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து மாற்றி விடவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக்கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனை தான் உண்டு. (31:6)

6301. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பனிடம், ‘வா சூதாடுவோம்’ என்று கூறியவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ: بِاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ


Bukhari-6297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

அக்குள் முடியை அகற்றுவதும், வயதான பின் விருத்தசேதனம் (கத்னா) செய்து கொள்வதும்.

6297. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்தசேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக் கத்தியை உபயோகிப்பது 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது. 5. நகங்களை வெட்டுவது.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 79


الفِطْرَةُ خَمْسٌ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ


Bukhari-6296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 இரவில் கதவுகளைத் தாழிடுதல்

6296. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்.

என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘குச்சியை (குறுக்காக) வைத்தேனும் உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.72

Book : 79


«‏ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ ‏‏‏»

‏ ـ قَالَ هَمَّامٌ وَأَحْسِبُهُ قَالَ ـ ‏”‏وَلَوْ بِعُودٍ يَعْرُضُهُ


Bukhari-6295

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 79


«خَمِّرُوا الآنِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ، وَأَطْفِئُوا المَصَابِيحَ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»


Next Page » « Previous Page