2890. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ர் என்று அறியாமல் கூடாரம் அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ”தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்…” எனத் துவங்கும் (அல்குர்ஆன்: 67:1-30) அத்தியாயத்தை முழுமையாக ஓதி முடித்தார்.
இதைக் கண்ட அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் கப்ர் என்று அறியாமல் என் கூடாரத்தை கப்ரில் அமைத்து விட்டேன். அப்போது கப்ரில் இருந்த ஒரு மனிதர் தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க் என்பதை முழுமையாக ஓதி முடித்தார்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அந்த அத்தியாயம் தடுக்கக் கூடியது; கப்ருடைய வேதனையை நீக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வரும் இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ضَرَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِبَاءَهُ عَلَى قَبْرٍ وَهُوَ لَا يَحْسِبُ أَنَّهُ قَبْرٌ، فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ حَتَّى خَتَمَهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي ضَرَبْتُ خِبَائِي عَلَى قَبْرٍ وَأَنَا لَا أَحْسِبُ أَنَّهُ قَبْرٌ، فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ المُلْكِ حَتَّى خَتَمَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ المَانِعَةُ، هِيَ المُنْجِيَةُ، تُنْجِيهِ مِنْ عَذَابِ القَبْرِ»
சமீப விமர்சனங்கள்