நாங்கள் அபூஸுஹைர் அன்னுமைரீ (ரலி) அவர்கள் அருகே அமர்ந்திருந்தோம். அவர் நபித்தோழர்களில் ஒருவராவார். ஆதலால் மிக அழகான ஹதீஸ்களை அவர் அறிவிப்பார். எங்களில் ஒருவர் ஒரு பிரார்த்தனையை செய்தால் அதை ஆமீன் கூறி முடித்துக் கொள்க!. ஏனெனில் அது ஒரு ஏட்டின் மீதுள்ள முத்திரையை போன்றதாகும் என்று கூறுவார். மேலும் அபூஸுஹைர் (ரலி) அவர்கள், உங்களுக்கு இது தொடர்பாக ஹதீஸ் அறிவிக்கட்டுமா? என்று கேட்டு பின்வரும் ஹதீஸையும் அறிவிப்பார்.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவில் புறப்பட்டு ஒருவரிடம் சென்றோம். அவர் துஆ செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் அவரின் பிரார்த்தனையை செவியுற்றவாறு நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர் முத்திரையிட்டு விட்டால் (சுவனத்தை) உறுதி செய்தவராவார் என்று சொன்னார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் எதைக் கொண்டு அவர் முத்திரையிடல் வேண்டும்? என்று கேட்டார். ஆமீன் என்பதைக் கொண்டு முத்திரையிட வேண்டும். ஏனெனில் ஆமீன் என்பதைக் கொண்டு அவர் முத்திரையிட்டு விட்டால் அவர் (தனக்கு) சுவனத்தை உறுதியாக்கிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் (எதைக் கொண்டு முத்திரையிடுவது எனக்) கேட்டவர், (துஆவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த) மனிதரிடம் வந்து இன்னாரே! நீ ஆமீன் என்று கூறி (உனது துஆவிற்கு) முத்திரையிடுக! மேலும் நீ (இந்த) நற்செய்தி பெறுக! என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூமுஸப்பிஹ் அல்மக்ராயீ (ரஹ்)
இந்த செய்தியின் வாசகம் மஹ்மூத் என்ற அறிவிப்பாளரின் வாசகமாகும்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
அல்மக்ராஉ என்பது ஹிம்யர் என்ற இனத்தில் உள்ள ஒரு கோத்திரமாகும்.
(அபூதாவூத்: 938)حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ، وَمَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَا: حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ صُبَيْحِ بْنِ مُحْرِزٍ الْحِمْصِيِّ، حَدَّثَنِي أَبُو مُصَبِّحٍ الْمَقْرَائِيُّ، قَالَ:
كُنَّا نَجْلِسُ إِلَى أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ، وَكَانَ مِنَ الصَّحَابَةِ، فَيَتَحَدَّثُ أَحْسَنَ الْحَدِيثِ، فَإِذَا دَعَا الرَّجُلُ مِنَّا بِدُعَاءٍ قَالَ: اخْتِمْهُ بِآمِينَ، فَإِنَّ آمِينَ مِثْلُ الطَّابَعِ عَلَى الصَّحِيفَةِ، قَالَ أَبُو زُهَيْرٍ: أُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ؟ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ، فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَمِعُ مِنْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْجَبَ إِنْ خَتَمَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ؟ قَالَ: «بِآمِينَ، فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ»، فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الرَّجُلَ، فَقَالَ: اخْتِمْ يَا فُلَانُ بِآمِينَ، وَأَبْشِرْ،
وَهَذَا لَفْظٌ مَحْمُودٌ،
قَالَ أَبُو دَاوُدَ: «الْمَقْرَاءُ قَبِيلٌ مِنْ حِمْيَرَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-938.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-804.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19689-ஸுபைஹ் பின் முஹ்ரிஸ் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - மேலும் இவரிடமிருந்து முஹம்மது பின் யூஸுஃப் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகிவிடுகிறார்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை மக்பூல் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/203, தக்ரீபுத்தக்ரீப்-1/449)
இவரைப் போன்று வேறு யாரும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அபூஸுஹைர் (யஹ்யா பின் நுஃபைர்-நுஃகைர்-ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-938 , இப்னு அபூஆஸிம்-, அல்குனா வல்அஸ்மா-, அத்துஆ-தப்ரானீ-, அல்முஃஜமுல் கபீர்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு முன்தஹ்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-,
சமீப விமர்சனங்கள்