பாடம்:
தூய்மை செய்வது குறித்து வந்துள்ளவை.
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையை விரும்புகிறவன்.
சுத்தமானவன்; சுத்தத்தை விரும்புகிறவன்.
கண்ணியமானவன்; கண்ணியத்தை விரும்புகிறவன்.
கொடையாளன்; கொடை வழங்குவதை விரும்புகிறவன்.
ஆகவே, உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்களுக்கு ஒப்பாக ஆகாதீர்கள்.
அறிவிப்பவர்: ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்)
மேலும் ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதை, முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது, “இதேபோன்ற ஹதீஸை ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்கள்.
எனினும், அதில், “உங்களின் முற்றங்களைச் சுத்தமாக வையுங்கள்” என்றே இடம்பெற்றிருந்தது. (யூதர்களுக்கு ஒப்பாவது பற்றி குறிப்பிடவில்லை)” என்று முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி: 2799)بَابُ مَا جَاءَ فِي النَّظَافَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ إِلْيَاسَ، وَيُقَالُ ابْنُ إِيَاسٍ، عَنْ صَالِحِ بْنِ أَبِي حَسَّانَ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ:
«إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ، كَرِيمٌ يُحِبُّ الكَرَمَ، جَوَادٌ يُحِبُّ الجُودَ، فَنَظِّفُوا – أُرَاهُ قَالَ – أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِاليَهُودِ»
قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيَتَكُمْ».
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2799.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2742.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . அப்துல்மலிக் பின் அம்ர்-அபூஆமிர்-அல்அகதீ
4 . காலித் பின் இல்யாஸ்-இப்னு இயாஸ்
5 . ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான்
6 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . அப்துல்மலிக் பின் அம்ர்-அபூஆமிர்-அல்அகதீ
4 . காலித் பின் இல்யாஸ்-இப்னு இயாஸ்
5 . ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான்
6 . முஹாஜிர் பின் மிஸ்மார்
7 . ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ்
8 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14476-காலித் பின் இல்யாஸ்-இப்னு இயாஸ் என்பவர் பற்றி இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் மட்டுமே இவர் அரிதான செய்திகளை அறிவிப்பவர்; மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர்; பலவீனமானவர். இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். (ஆய்வுக்காக, தெரிந்துக் கொள்வதற்காக எழுதிக் கொள்ளலாம் என்ற கருத்தில் கூட அவர் கூறியிருக்கலாம்.) - இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற மற்ற அறிஞர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்றும், விடப்பட்டவர், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை விடப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/321, அஸ்ஸிகாத்-, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/411, அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால்-, தஹ்தீபுல் கமால்-, அல்இக்மால்-, அல்காஷிஃப்-, தாரீகுல் இஸ்லாம்-, ஸியரு அஃலாமின் நுபலா-, மீஸானுல் இஃதிதால்-, அல்இஸாபா-, தஹ்தீபுத் தஹ்தீப்-, தக்ரீபுத் தஹ்தீப்-1/284)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
ஆய்வின் சுருக்கம்:
மேற்கண்ட செய்தியின் 5 பகுதிகளில் 4 ஆவது பகுதியான அல்லாஹ்வின் பெயர்களில் ஜவாத்-கொடையாளன் எனும் பெயரும் உள்ளது என்ற கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளது. (இந்த செய்தியின் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் இணைத்து ஹஸன் லிஃகைரிஹீ என்பதின்படியே சில அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர்)
التوحيد ومعرفة أسماء الله عز وجل وصفاته على الاتفاق والتفرد لابن منده (2/ 99)
62 – وَمِنْ أَسْمَاءِ الله عَزَّ وَجَلَّ: الجَوَادُ الجَمِيلُ الجَلِيلُ الجَامِعُ الجَبَّارُ.
ذُكِرَ عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ: إِنَّ الله يَقُولُ: إِنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، وَرُوِيَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلى الله عَليه وسَلم قَالَ: إِنَّ الله أَجْوَدُ الأَجْوَدِينَ.
نونية ابن القيم = الكافية الشافية (ص: 208)
وهو الجواد فجوده عم الوجو … د جميعه بالفضل والإحسان
القواعد المثلى في صفات الله وأسمائه الحسنى (ص: 16)
ومن سنة رسول الله صلى الله عليه وسلم:
الجميل1 الجواد2 الحكم3 الحييُ4 الرب5 الرفيق6 السُّبوح7 السيد8 الشافي9 الطيب10 القابض11 الباسط12 المقدم13 المؤخر14 المحسن15 المعطي16 المنان17 الوتر18.
هذا ما اخترناه بالتتبع: واحد وثمانون اسما في كتاب الله تعالى، وثمانية عشر اسما في سنة رسول الله صلى الله عليه وسلم، وإن كان عندنا تردد في إدخال (الحفي) ، لأنه إنما ورد مقيدًا في قوله تعالى عن إبراهيم: {إِنَّهُ كَانَ بِي حَفِيّاً} وكذلك (المحسن) لأننا لم نطلع على رواته في الطبراني، وقد ذكره شيخ الإسلام من الأسماء.
ومن أسماء الله تعالى ما يكون مضافا مثل: مالك الملك، ذي الجلال والإكرام.
இப்னு மன்தா, இப்னுல் கய்யிம், இப்னு உஸைமீன், மஹ்மூத் பின் ரஸ்ஸாக் போன்ற சிலர் இந்த பெயரை அஸ்மாஉல் ஹுஸ்னாவில் சேர்த்துள்ளனர்.
(நூல்கள்: அத்தவ்ஹீத்-இப்னு மன்தா-2/99, நூனிய்யது இப்னுல் கய்யிம்-1/208, அல்கவாஇதுல் மிஸ்லீ-இப்னு உஸைமீன்-1/16, அஸ்மாஉல்லாஹில் ஹுஸ்னா அஸ்ஸாபிதது ஃபில்கிதாபி வஸ்ஸுன்னா-1/1113-1125)
1 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- காலித் பின் இல்யாஸ் —> ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் —> முஹாஜிர் பின் மிஸ்மார் —> ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: திர்மிதீ-2799,
- காலித் பின் இல்யாஸ் —> முஹாஜிர் பின் மிஸ்மார் —> ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் ஸஃத் பின் அபூவக்காஸ்-, அல்கரமு வல்ஜூத்-, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-,
- காலித் பின் இல்யாஸ் —> ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-,
…
تاريخ دمشق لابن عساكر (14/ 288):
أخبرنا أبو جعفر أحمد بن محمد بن عبد العزيز المكي أنا أبو علي الحسن بن عبد الرحمن بن الحسن الشافعي بمكة أنا أبو الحسن أحمد بن إبراهيم بن أحمد بن علي بن فراس نا أبو علي الحسين بن الفتح بن نصر بن محمد ب عبد الله النيسابوري المتفقه بقول الشافعي في المحرم سنة ثلاث وعشرين وثلاثمائة نا أحمد بن عمير بن يوسف بدمشق نا إبراهيم بن سعيد نا أبو معاوية عن إبراهيم بن مهاجر عن بكير بن مسمار عن عامر بن سعد عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى كريم يحب الكرماء جواد يحب الجودة يحب معالي الأخلاق ويكره سفسافها
…
2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2495.
2 . இப்னு அப்பாஸ்
4 . அனஸ்
5 . அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
மேற்கண்ட செய்தியில் இடம்பெற்றுள்ள சில அஸ்மாஉல் ஹுஸ்னா-அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் குறித்து வந்துள்ள வேறு சரியான செய்திகள்:
முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
1 . الطَيِّب – அல்லாஹ் தூய்மையானவன்.
பார்க்க: முஸ்லிம்-1844.
மூன்றாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
2 . الْكَرِيمُ – கண்ணியமானவன், கொடை கொடுப்பவன்.
பார்க்க: ஹாகிம்-152.
3 . இரண்டாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க:
4 . நான்காவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க:
5 . ஐந்தாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4057.
இந்தச் செய்தியின் 5 பகுதிகளில் 1, 3 ஆகிய பகுதியைத் தவிர மற்றவற்றில் விமர்சனம் உள்ளது.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2736,
சமீப விமர்சனங்கள்