பாடம்: 2.
தீர்ப்பு வழங்குவதில் தவறு செய்யும் நீதிபதி.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சொர்க்கத்திலும் புகுவர்.
1 . நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சொர்க்கத்தில் நுழைவார்.
2 . நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
3 . உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு புரைதா அவர்கள், (தனது தந்தையிடமிருந்து) அறிவிக்கும் செய்தி மிகச் சரியானதாகும்.
(அபூதாவூத்: 3573)بَابٌ فِي الْقَاضِي يُخْطِئُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الْقُضَاةُ ثَلَاثَةٌ: وَاحِدٌ فِي الْجَنَّةِ، وَاثْنَانِ فِي النَّارِ، فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ
قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِيهِ يَعْنِي حَدِيثَ ابْنِ بُرَيْدَةَ الْقُضَاةُ ثَلَاثَةٌ
Abu-Dawood-Tamil-3102.
Abu-Dawood-TamilMisc-3102.
Abu-Dawood-Shamila-3573.
Abu-Dawood-Alamiah-3102.
Abu-Dawood-JawamiulKalim-3104.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ் (3. பலமானவர்).
2 . முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் (4. நடுத்தரமானவர்).
3 . கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத் அல்அஷ்ஜஈ (4. நடுத்தரமானவர்).
4 . யஹ்யா பின் தீனார்-அபூஹாஷிம் (3. பலமானவர்).
5 . அப்துல்லாஹ் பின் புரைதா (3. பலமானவர்).
6 . புரைதா (ரலி)-ஆமிர் பின் ஹுஸைப் (1. நபித்தோழர்).
1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38586-முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் என்பவர் நடுத்தரமானவர்.
பார்க்க: ராவிபெயர்-38586-முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித்.
கஃலப் பின் கலீஃபாவிடமிருந்து இவர் மட்டும் இந்தச் செய்தியை (தனித்து) அறிவிக்கவில்லை. வேறு சிலரும் அறிவித்துள்ளனர்
2 . மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14974-கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத் அல்அஷ்ஜஈ என்பவர் நடுத்தரமானவர். இவர் இடம்பெறும் 4 செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார்.
(பார்க்க: முஸ்லிம்-420, 818, 4143, 5466)
இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இந்த செய்தியை இவரிடம் ஆரம்பத்தில் கேட்டவர்களும் அறிவித்துள்ளனர். இவரைப் போன்று வேறு சிலரும் இதை அறிவித்துள்ளனர்.
பார்க்க: ராவிபெயர்-14974-கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத்.
எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரமாகும். இது வேறு சில அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதால் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ளதாகும்.
1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கலஃப் பின் கலீஃபா —> அபூஹாஷிம் —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-2315, அபூதாவூத்-3573, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-5891, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-3616, குப்ராபைஹகீ-20354,
- ஷரீக் பின் அப்துல்லாஹ் —> அஃமஷ் —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: திர்மிதீ-1322, முஸ்னத் பஸ்ஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-1154, ஹாகிம்-7013, குப்ராபைஹகீ-20355, 20356, ஷுஅபுல்ஈமான்-7125,
- கைஸ் பின் ரபீஃ —> அஃமஷ் —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4468,
- கைஸ் பின் ரபீஃ —> அல்கமா பின் மர்ஸத் —> ஸுலைமான் பின் புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1156,
- யஹ்யா பின் ஹம்ஸா —> ஸஃத் பின் உபைதா —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6786,
- ஹகம் பின் உதைபா, யூனுஸ் பின் கப்பாப் —> இப்னு புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6757,
- அப்துல்லாஹ் பின் புகைர் —> ஹகீம் பின் ஜுபைர் —>அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)
பார்க்க: ஹாகிம்-7012,
2 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21599.
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13801.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-475,
புலூஃகுல் மராம்-1397.
சமீப விமர்சனங்கள்