அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது; ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6675)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَنْتِفُوا الشَّيْبَ، فَإِنَّهُ مَا مِنْ عَبْدٍ يَشِيبُ فِي الْإِسْلَامِ شَيْبَةً، إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً ، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6675.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6498.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41097-இப்னு அஜ்லான் அறிவிக்கும் சில அறிவிப்பாளர்தொடர்களில் மட்டுமே விமர்சனம் உள்ளது.
1. இவர், நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தி.
2. இவர், ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) கூறியதாக அறிவிக்கும் செய்தி.
(கூடுதல் தகவல் பார்க்க: இப்னு அஜ்லான் , அரபியில்: محمد بن عجلان ثقة أم صدوق؟)
- அதில் இந்த அறிவிப்பாளர்தொடர் இல்லை என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2821 .
சமீப விமர்சனங்கள்