தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-734

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

734. ஹுஜய்யா பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் மாடு (எத்தனை பேருக்காகக் குர்பானி கொடுக்கப்படலாம் என்பது) பற்றிக் கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஏழு பேருக்காக” என்று கூறினார்கள்.

அம்மனிதர், “அதன் கொம்பு உடைந்திருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அது உனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது (அதாவது, அது கூடும்)” என்றார்கள்.

மீண்டும் அம்மனிதர், “அது நொண்டியாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அது அறுக்குமிடம் வரை (தன்னால் நடந்து) வந்துவிட்டால், நீ அதனை அறுத்துவிடு” (அது கூடும்) என்று கூறிவிட்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்” என்று சொன்னார்கள்.


حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجَيَّةَ، قَالَ:

سَأَلَ رَجُلٌ عَلِيًّا عَنِ الْبَقَرَةِ، فَقَالَ: عَنْ سَبْعَةٍ. فَقَالَ: مَكْسُورَةُ الْقَرْنِ؟ فَقَالَ: لَا يَضُرُّكَ. قَالَ: الْعَرْجَاءُ؟ قَالَ: «إِذَا بَلَغَتِ الْمَنْسَكَ فَاذْبَحْ، أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-696.
Musnad-Ahmad-Shamila-734.
Musnad-Ahmad-Alamiah-696.
Musnad-Ahmad-JawamiulKalim-716.



  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். இந்தச் செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடரில் உள்ள முதல் மூன்று பகுதிகள் நபித்தோழர் அலீ (ரலி) அவர்களின் சொல்லாகும். கடைசிப் பகுதி நபி (ஸல்) அவர்களின் சொல்லாகும்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
(2. மிகப் பலமானவர்)
.

2 . வகீஃ பின் ஜர்ராஹ் (2. மிகப் பலமானவர்).

3 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத் (2. மிகப் பலமானவர்).

4 . ஸலமா பின் குஹைல் (2. மிகப் பலமானவர்).

5 . ஹுஜய்யா பின் அதீ (4. நடுத்தரமானவர்).

6 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) (1. நபித்தோழர்).


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11354-ஹுஜய்யா பின் அதீ அவர்கள் பற்றிய ஆய்வில் இவரை சில ஹதீஸ்துறை அறிஞர்கள் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் என்றும் முடிவைக் கூறியுள்ளனர்.

பார்க்க: ராவிபெயர்-ஹுஜய்யா பின் அதீ.


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . ஸலமா பின் குஹைல் அவர்களின் அறிவிப்புகள்:

  •  ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-13437, 13265, அஹ்மத்-734, 732, 1021, 1309, 1312, இப்னு மாஜா-3143, …


  • ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    ஹம்மாத் பின் ஸலமா —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-155, அஹ்மத்-826, 1021, 1022, 1309, 1312, தாரிமீ-1994, நஸாயீ-4376, …


  • ஷரீக் —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)

பார்க்க: திர்மிதீ-1503, ஷரஹ் மஆனில் ஆஸார்-6198,


  • ஹஸன் பின் ஸாலிஹ் —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-6198,


2 . அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:

அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-609, 851, 1061, 1275, தாரிமீ-1995, இப்னு மாஜா-3142, அபூதாவூத்-2804, திர்மிதீ-1498, நஸாயீ-4372, 4373, 4374, 4375,  …


  • அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> இப்னு அஷ்வஃ —> அலீ (ரலி)

பார்க்க: ஹாகிம்-7532,


  • அபூஇஸ்ஹாக் —> ஹுபைரா —> அலீ (ரலி)

பார்க்க: அஹ்மத்-1106, அல்முஃஜமுல் அவ்ஸத்-7973,


……………………………………………………………………………………………………………………………………..


3 . வேறு சிலரின் அறிவிப்புகள்:

விளக்கம் பார்க்க: அபூதாவூத்-2805.

  • ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    ஹம்மாம் —> கதாதா —> ஜுரய்யு பின் குலைப் —> அலீ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-99, அஹ்மத்-633, 791, 1048, 1066, 1157, 1158, 1293, 1294, இப்னு மாஜா-3145, அபூதாவூத்-2805, திர்மிதீ-1504, நஸாயீ-4377, … ஷரஹ் மஆனில் ஆஸார்-6195,


  • ஜாபிர் —> அப்துல்லாஹ் பின் நுஜை —> அலீ (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-98, அஹ்மத்-864,


2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2932.


3 . அபூமஸ்ஊத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-14114.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: மாலிக்-1387, முஸ்லிம்-2538, திர்மிதீ-905,

அஹ்மத் இமாம்-அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

வகீஃ பின் ஜர்ராஹ்

وكيع بن الجراح

இறப்பு: ஹிஜ்ரி 197, ஃபைத்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: வகீஃ பின் ஜர்ராஹ் பின் மலீஹ் பின் அதீ பின் ஃபரஸ் பின் ஸுஃப்யான் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: ஜர்ராஹ் பின் மலீஹ்

வம்சம்: அர்ரூஆஸீ

புனைப்பெயர்: அபூ ஸுஃப்யான்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, மக்கா, ஷாம், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 129, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 197, ஃபைத்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

வகீஃ பின் ஜர்ராஹ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர், இமாம் மற்றும் ஹாஃபிழ் ஆவார். அவர் ஹிஜ்ரி 129 இல் கூஃபாவில் பிறந்தார். அவர் தனது நினைவாற்றலுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்; இப்னு ஹன்பல் அவர்கள், “வகீஃ அவர்களைப் போன்று அறிவை உள்வாங்கியவரையும், மனனம் செய்தவரையும் நான் கண்டதில்லை” என்று கூறியுள்ளார்கள்.

அவர் நீதிபதி பதவியை ஏற்க மறுத்தார். ஹிஜ்ரி 197 இல் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் வழியில் ஃபைத் என்ற இடத்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஜர்ராஹ் பின் மலீஹ், இஸ்மாயீல் பின் அபூ காலித் அல்அஹ்மஸீ, ஹிஷாம் பின் உர்வா, ஸுலைமான் அல்அஃமஷ், அப்துல்லாஹ் பின் அவ்ன், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, மாலிக் இமாம், உஸாமா பின் ஸைத் அல்லைஸீ, இஸ்ராயீல் பின் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், இஸ்மாயீல் பின் முஸ்லிம் அல்அப்தீ, ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஃப்யான் பின் வகீஃ, மலீஹ் பின் வகீஃ, உபைது பின் வகீஃ, அஹ்மத் பின் ஹன்பல், அபூபக்ர் பின் அபீ ஷைபா, ஸுஹைர் பின் ஹர்ப், அப்துல்லாஹ் பின் முஸ்லிமா அல்கஅனபீ, அப்துல்லாஹ் பின் ஸயீத் அல்அஷஜ், அலீ பின் கஷ்ரம், மஸ்தத் பின் மஸ்ரஹத், முஹம்மத் பின் ஸலாம் அல்பைகந்தீ, முஹம்மத் பின் யஹ்யா பின் அபூஉமர்

வேறு பெயர்கள்: வகீஃ


ஆதாரம்: muslimscholars.info (20032) · Should verify

ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத்

ஸுஃப்யான் ஸவ்ரீ-அஸ்ஸவ்ரீ (ரஹ்) – Sufyan bin Sa‘id Ath-Thawri

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுஃப்யான் பின் ஸயீத் பின் மஸ்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ

வம்சம்: பனூ தவ்ர் பின் அப்து மனாத்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, ஹிஜாஸ், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 97, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 97 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 161 ஆம் ஆண்டு பஸராவில் மரணமடைந்தார்கள். இவர் மிகப் பலமானவர், ஹாஃபிழ், ஃபகீஹ், இமாம், ஹுஜ்ஜத் ஆவார்.

ஹதீஸ் கலையில் 'அமீருல் முஃமினீன்' என்று போற்றப்பட்டார்கள். அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள், 'நான் 1100 ஷேக்குகளிடமிருந்து எழுதினேன், ஸுஃப்யான் ரஹ் அவர்களை விட சிறந்த ஒருவரிடமிருந்தும் நான் எழுதவில்லை' என்று கூறினார்கள். இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள், 'இமாம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள்தான். என் இதயத்தில் அவரை விட யாரும் முந்தியதில்லை' என்று கூறினார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ, ஸுலைமான் பின் அபூ ஸுலைமான், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபியீ, அப்துல் மாலிக் பின் உமைர், இஸ்மாயீல் பின் அபூ காலித், ஸலமா பின் கஹைல், ஸுலைமான் அல்அஃமஷ், மன்ஸூர் பின் அல்மஃதமர், ஹம்மாத் பின் அபூ ஸுலைமான், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், அதா பின் அஸ்ஸாயிப் அஸ்ஸகஃபீ, ஸைத் பின் அஸ்லம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துல்லாஹ் பின் முபாரக், ஜரீர் பின் அப்துல் ஹமீத், ஹஃப்ஸ் பின் கியாஸ், ஹம்மாத் பின் உஸாமா, வகீஃ பின் அல்ஜர்ராஹ், யஸீத் பின் ஹாறூன், அபூ நுஐம், உபைதுல்லாஹ் பின் மூஸா, அல்ஃபள்ல் பின் மூஸா அஸ்ஸீனானீ

வேறு பெயர்கள்: ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (20012) · Should verify

ஸலமா பின் குஹைல்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹுஜய்யா பின் அதீ-அல்கின்தீ

حجية بن عدي الكندي

தரம்: நடுத்தரமானவர்.


ஊர் பெயர்: கூஃபா.

கால கட்டம்: 3.


இவரைப் பற்றிய ஆய்வில் சில ஹதீஸ்துறை அறிஞர்கள் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் என்றும் முடிவைக் கூறியுள்ளனர்.


[إكمال تهذيب الكمال - ط العلمية 2/ 231:]

1215 - (4) حُجَيَّة بن عَدِي الْكِنْدِيِّ، الكُوفيّ (4)

1 - قال ابن حِبَّان لما ذكره في جملة الثقات: روى عنه أهل الكوفة.

2 - وقال العجلي: تابعي ثقة.

3 - وقال محمد بن سعد في كتاب "الطبقات": كان معروفًا، وليس بذاك.

4 - وقال الكلبي في كتاب "الجامع": هو من بني الحارث بن بدَّاء بن الحارث بن معاوية بن ثور وهو كندة، وكان فقيهًا.

5 - وخَرَّج ابن حِبَّان حديثه في "صحيحه"، وكذلك: أبو علي الطوسي، الدارمي، وأبو محمد ابن الجارود، والحاكم، وقال: لم يحتجا به، وهو مِنْ كِبار أصحاب علي. ونسبه البخاري في "تاريخه" أسديًّا.

6 - وقال أبو الحسن ابن القَطَّان -وذكر حديثه عن علي مرفوعًا "إذا قرأ: {وَلَا الضَّالِّينَ} قال: آمين-: روى عنه أبو إسحاق عِدَّة أحاديث، وهو فيها مستقيم لم يُعهد منه خطأ، ولا اختلاط، ولا نكارة.

7 - وذكره ابن خلفون في "الثقات"، وكَنَّاه أبا الزعراء ونسبه أسديًّا.

8 - ولما سُئل أبي حاتم الرَّازي عن حديثه في "التأمين" قال: هذا عندي أيضًا خطأ، إِنَّمَا هو سلمة، عن حجر، عن وائل، عن النَّبِيِّ صلى الله عليه وسلم.

1 . இப்னு ஹிப்பான் அவர்கள் தனது 'அஸ்ஸிகாத்' (பலமானவர்கள்) என்ற நூலில் இவரைக் குறிப்பிட்டு, "இவரிடமிருந்து கூஃபா வாசிகள் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

2 . இஜ்லீ அவர்கள் "இவர் ஒரு தாபிஈ, பலமானவர்" என்று கூறியுள்ளார்.

3 . முஹம்மத் பின் ஸஃத் அவர்கள் தனது 'அத்தபகாத்' என்ற நூலில், "இவர் (ஹதீஸ் கலையில்) அறியப்பட்டவர்; எனினும் அந்தளவிற்கு (மிகப் பலமானவர்) இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

4 . அல்கல்பீ அவர்கள் தனது 'அல்ஜாமிஃ' என்ற நூலில், "இவர் ஹாரிஸ் பின் பத்தாஃ பின் ஹாரிஸ் பின் முஆவியா பின் ஸவ்ர் (என்ற பரம்பரை) வழியில் வந்தவர். இக்குலமே 'கிந்தா' எனப்படுகிறது. மேலும் இவர் மார்க்கச் சட்ட அறிஞராக (ஃபகீஹ்) திகழ்ந்தார்" என்று கூறியுள்ளார்.

5 . இப்னு ஹிப்பான் தனது 'ஸஹீஹ்' நூலில் இவருடைய ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். இதேபோல் அபூஅலீ அத்தூஸீ, தாரிமீ, அபூமுஹம்மத் இப்னுல்ஜாரூத், ஹாகிம் ஆகியோரும் இவருடைய ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர். ஹாகிம் அவர்கள், "இமாம் புகாரி, முஸ்லிம் ஆகிய இருவராலும் இவர் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; ஆயினும் இவர் அலி (ரலி) அவர்களின் மூத்த தோழர்களில் ஒருவராவார்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புகாரி அவர்கள் தனது 'தாரீக்' (வரலாற்று) நூலில் இவரை 'அஸதீ' என்ற குலத்தைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டுள்ளார்.

6 . அபுஹஸன்-இப்னுல் கத்தான் அவர்கள், அலீ (ரலி) அவர்கள் வழியாக நபியவர்கள் "வ லள்ளால்லீன்" என்று ஓதியதும், "ஆமீன்" என்று கூறினார்கள் என்ற இவருடைய மர்ஃபூஃவான (நபியவர்கள் வரை செல்லும்) ஹதீஸைக் குறிப்பிட்டுவிட்டு, "அபூஇஸ்ஹாக் இவரிடமிருந்து பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அந்த ஹதீஸ்களில் இவர் நேர்மையானவராக விளங்குகிறார்; இவரிடம் எவ்விதத் தவறும், குழப்பமும், (நகாரத்) ஆதாரமற்ற செய்திகளும் காணப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

7 . இப்னு கலஃபூன் இவரை பலமானவர்கள் (ஸிகாத்) பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவருக்கு 'அபுஸ் ஸஃராஃ' என்று புனைப்பெயரைக் குறிப்பிட்டு, இவரை 'அஸதீ' குலத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

8 . அபூஹாதிம் அர்ராஸி அவர்களிடம் (ஆமீன் கூறும்) ஹதீஸைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, "என்னுடைய கணிப்பின்படி இந்த ஹதீஸில் தவறு நேர்ந்துள்ளது. ஸலமா --->  ஹுஜ்ர் ---> வாயில் (ரலி) ---> நபி (ஸல்) என்பதே சரியான அறிவிப்பாளர் தொடர் ஆகும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இக்மால்-2/231)


1150 - حُجَيَّة، بوزن عُلَيَّة، ابن عَدِي الكِنْديُّ: صدوقٌ يُخْطئ، من الثالثة. ت (1).

• بل: ضعيفٌ يُعتَبَر به في المتابعات والشواهد، قال أبو حاتم: "شيخٌ لا يحتجُّ بحديثه شبيهٌ بالمجهول"، وقال ابن سعد: "ليس بذاك"، وذكره العجليُّ وابن حبَّان في "الثقات"، وقال الذهبي في "الميزان": "صدوقٌ إن شاء الله"، وهي صيغة تمريضية.

ஹுஜய்யா பின் அதீ அல்கின்தீ: (இவரது பெயர் உலைய்யா என்ற வார்த்தையின் அமைப்பில் உச்சரிக்கப்பட வேண்டும்). இவரைப் பற்றி இப்னு ஹஜர் குறிப்பிடும் போது, "ஸதூக்-உண்மையாளர், சில நேரங்களில் தவறிழைப்பவர், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய ஹதீஸ்கள் திர்மிதீயில் இடம் பெற்றுள்ளன" என்று எழுதியுள்ளார்.

ஆனால் இவர் பலவீனமானவர். வேறு சான்றுகள் இருந்தால் மட்டுமே இவருடைய ஹதீஸ்கள் ஏற்கப்படும். ஏனெனில், இவரைப் பற்றி அபூஹாதிம் கூறும் போது, 'இவர் ஒரு ஷைக் (முதியவர்), இவருடைய ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது, அறியப்படாத ஒருவரைப் போன்றவர்' என்று கூறியுள்ளார். இப்னு ஸஃத், 'இவர் அந்தளவுக்குக் குறிப்பிடும்படியானவர் அல்ல' என்று கூறியுள்ளார். இவரை இஜ்லீ, இப்னுஹிப்பான் ஆகியோர் பலமானவர்களின் பட்டியலில் சேர்த்திருந்தாலும், தஹபீ அவர்கள் தனது மீஸான் நூலில் 'அல்லாஹ் நாடினால் இவர் ஸதூக்-நடுத்தரமானவர்' என்று கூறியுள்ளார். இவ்வாறு 'அல்லாஹ் நாடினால்' எனக் கூறுவது அந்த அறிவிப்பாளரின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு சொல்லாகும்.

(நூல்: தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-1/256)


221 - (1150 تحرير) حُجَيَّة، بوزن عُلَيَّة، ابن عدي الكِنديُّ صدوق يخطئ، من الثالثة. ت.

* أقول: هكذا رقما له: (ت) وقالا في الحاشية: "هكذا في الأصل وصوابه (4) كما نص عليه المزي".

وتعقبا الحكم عليه بقولهما: "بل: ضعيف يعتبر به في المتابعات والشواهد، قال أبو حاتم: "شيخ لا يحتج بحديثه شبيه بالمجهول"، وقال ابن سعد: "ليس بذاك"، وذكره العجلي وابن حبان في "الثقات" وقال الذهبي في "الميزان": "صدوق، إن شاء اللَّه"، وهي صيغة تمريضية".

* أقول: أما استدراكهما الرقم فهو من عجيب شأنهما، ومن سبق قلمهما ليحاولا تخطئة الحافظ في حكمه من أجل أن يقنعا الناس بأنهما قابلا أصل الكتاب، ودليل ذلك أنه ورد في النسخ المطبوعة (4) انظر على سبيل المثال طبعة عبد الوهاب عبد اللطيف (1/ 155 الترجمة 177)، أما حكمهما: فهو كلام، لا أدري كيف قال مثلهما مثله. وعليهما فيه أمور:

الأول: إنهما أهملا بعض التوثيق، فقد وثقه أبو عبد اللَّه محمد بن إبراهيم البوشنجي، فقال: "هو ثقة مأمون"، (تهذيب التهذيب 2/ 217) ووثقه ابن خلفون كما في التعليق على تهذيب الكمال (5/ 485).

الثاني: جرهما قول الذهبي إلى ضعيف يعتبر به من الغريب جدًّا.

الثالث: حذفا بعض قول ابن سعد، فتمام كلامه: "كان معروفًا وليس بذاك" (تهذيب التهذيب 2/ 217).

الرابع: جعلا عمدة حكمهما كلام أبي حاتم، مع أن الدكتور بشارًا لم يرتضِ كلامه، وردَّ عليه في تعليقه على تهذيب الكمال (5/ 485 هامش 2) واحتج عليه بمن وثقه، بل دافع ابن القطان عن المترجم له في بيان الوهم والإيهام (5/ 370 - 371 عقيب 2541) دفاعًا مجيدًا، فكفى وشفى. دلَّ على أن بعض النقاد لهم اصطلاحهم الخاص في إطلاق الألفاظ جرحًا أو تعديلًا، وإنه لا ينبغي الاغترار بذلك إلا بعد معرفة مسالكهم وخبرة أقوالهم، وها أنا أنقل لك كلامه بطوله، فهو كلام في غاية النفاسة، ليتسنى الحكم عن مقربة، قال رحمه الله: "وهذا منه غير صحيح، ومن عُلمت حاله في حمل العلم وتحصيله، وأَخَذَ الناس عنه، ونُقِلَت لنا سيرته الدالة على صلاحه، أو عُبِّرَ لنا بلفظ قام مقام نقل التفاصيل من الألفاظ المصطلح عليها لذلك كثقة، ورضا ونحو ذلك، لا يقبل من قائل فيه: إنه لا يحتج به، أو ما أشبه ذلك من ألفاظ التضعيف، ولا بد أن يضعفه بحجة ويذكر جرحًا مفسرًا، وإلا لم يسمع منه ذلك لا هو ولا غيره كذلك كما قد جرى الآن، فإنه -أعني أبا حاتم- لم يُدْلِ في أمر هؤلاء بشيء، إلا أنهم ليسوا بالمشهورين والشهرة إضافية، قد يكون الرجل مشهورًا عند قوم ولا يشتهر عند آخرين.

نعم، لو قال لنا ذلك من ألفاظ التضعيف فيمن لم يعرف حاله بمشاهدة أو بإخبار مخبر، كنّا نقبله منه، ونترك روايته به، بل كنا نترك روايته للجهل بحاله، لو لم نسمع ذلك فيه.

فحُجَيَّة المذكور، لا يلتفت فيه إلى قول من قال: "لا يحتج به" إذ لم يأت بحجة، فإنه رجل مشهور، قد روى عنه سلمة بن كهيل، وأبو إسحاق، والحكم بن عتيبة، رووا عنه عدة أحاديث وهو فيها مستقيم لم يعهد منه خطأ ولا اختلاط ولا نكارة".

الخامس: إن المترجم له ليس له كبير خطأ كي ينزلاه إلى هذه الرتبة فليس له في ابن ماجه سوى ثلاثة أحاديث:

الأول: برقم (854) وهو متن صحيح بشواهده.

والثاني: برقم (1795) وهو معلول بالإرسال.

والثالث: برقم (3143) وهو حديث صحيح، وقد توبع حجية فيه وليس له في الترمذي سوى حديثين:

الأول: برقم (678) وهو حديث حسن.

والثاني: برقم (1503) قال فيه الترمذي: "حسن صحيح".

221 – (தஹ்ரீர் தக்ரீப் நூலின் வரிசை எண்: 1150)

ஹுஜய்யா பின் அதீ அல்கின்தீ: (இவரது பெயர் உலைய்யா என்ற வார்த்தையின் அமைப்பில் உச்சரிக்கப்பட வேண்டும்). இவரைப் பற்றி இப்னு ஹஜர் குறிப்பிடும் போது, "ஸதூக்-உண்மையாளர், சில நேரங்களில் தவறிழைப்பவர், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய ஹதீஸ்கள் திர்மிதீயில் இடம் பெற்றுள்ளன" என்று எழுதியுள்ளார்.

1 . "மூலப் பிரதியில் 'திர்மிதீ' என்று மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இமாம் மிஸ்ஸீ அவர்கள் தெளிவுபடுத்தியபடி 'நான்கு ஹதீஸ் நூல்களிலும்' (அதாவது அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னு மாஜா ஆகியவற்றிலும்) ஹுஜய்யா பின் அதீ அவர்களின் ஹதீஸ்கள் வந்துள்ளன என்பதே சரியானது."

"இவர் ஸதூக் அல்ல; மாறாக, இவர் பலவீனமானவர். வேறு சான்றுகள் இருந்தால் மட்டுமே இவருடைய ஹதீஸ்கள் ஏற்கப்படும். ஏனெனில், இவரைப் பற்றி அபூஹாதிம் கூறும் போது, 'இவர் ஒரு ஷைக் (முதியவர்), இவருடைய ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது, அறியப்படாத ஒருவரைப் போன்றவர்' என்றுள்ளார். இப்னு ஸஅத், 'இவர் அந்தளவுக்குக் குறிப்பிடும்படியானவர் அல்ல' என்றுள்ளார். இவரை இஜ்லீ, இப்னுஹிப்பான் ஆகியோர் பலமானவர்களின் பட்டியலில் சேர்த்திருந்தாலும், இமாம் தஹபீ தனது மீஸான் நூலில் 'அல்லாஹ் நாடினால் இவர் ஸதூக்-நடுத்தரமானவர்' என்று கூறியுள்ளார். இவ்வாறு 'அல்லாஹ் நாடினால்' எனக் கூறுவது அந்த அறிவிப்பாளரின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு சொல்லாகும்.

அவர்கள் இப்னு ஹஜரின் குறியீட்டைத் திருத்த முயன்றது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தாங்கள் ஏதோ மூலப் பிரதியை அணு அணுவாக ஆய்வு செய்ததாக மக்களுக்குக் காட்டுவதற்காக, அவசரத்தில் இப்னு ஹஜர் மீது தவறு சுமத்த முயன்றுள்ளனர். ஏனெனில், அச்சடிக்கப்பட்ட மற்ற பிரதிகளிலேயே (உதாரணமாக, அப்துல்வஹ்ஹாப் அப்துல் லத்தீஃபின் பதிப்பில்) 'நான்கு நூல்கள்' என்ற குறியீடு சரியாகத்தான் உள்ளது.

அவர்கள் இந்த அறிவிப்பாளர் பற்றி மற்றவர்களின் பாராட்டுகளை விட்டுவிட்டனர். அபூஅப்துல்லாஹ் முஹம்மத் பின் இப்ராஹீம் அல்பூஷன்ஜீ இவரைப் பற்றி, "இவர் பலமானவர், நேர்மையானவர்" என்று சான்றளித்துள்ளார். மேலும், இப்னு கலஃபூனும் இவரை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இமாம் தஹபீ இவரை "ஸதூக்-நடுத்தரமானவர்" என்று கூறியிருக்க, அதை வைத்துக் கொண்டு இவர்கள் இவரை "பலவீனமானவர்" என்ற நிலைக்குக் கீழே இறக்கியது மிகவும் விசித்திரமானது.

இப்னு ஸஅதின் முழுமையான கூற்றை அவர்கள் எழுதவில்லை. அவரது முழுமையான வார்த்தை: "இவர் அறியப்பட்டவர், ஆயினும் அந்தளவுக்குக் குறிப்பிடும்படியானவர் அல்ல" என்பதாகும்.

இவர்கள் அபூஹாதிமின் கடுமையான விமர்சனத்தையே தங்களின் தீர்ப்புக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஆனால், டாக்டர் பஷ்ஷாரே கூட வேறொரு இடத்தில் அபூஹாதிமின் இதுபோன்ற விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துள்ளார்.

"அபூஹாதிம் இவரைப் பலவீனப்படுத்தியது தவறானதாகும். ஒருவருடைய கல்விப் பின்புலமும், அவரிடமிருந்து மக்கள் ஹதீஸ்களைக் கற்றுக்கொண்ட வரலாறும், அவரது நற்பண்புகளும் நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும் போது, அல்லது 'நம்பிக்கையானவர்', 'மனவிருப்பத்திற்குரியவர்' போன்ற அங்கீகார வார்த்தைகள் அவர் விஷயத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது, எவ்விதக் காரணமும் இன்றி 'இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது' என்ற விமர்சனத்தை ஏற்க முடியாது. அவ்வாறு பலவீனப்படுத்துபவர் அதற்கான தகுந்த காரணத்தையும், தெளிவான குற்றச்சாட்டையும் முன்வைக்க வேண்டும்.

அபூஹாதிம் போன்ற விமர்சகர்கள் 'இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல' என்ற காரணத்திற்காகவே இவ்வாறு கூறுவதுண்டு. ஆனால், பிரபல்யம் என்பது சார்புடையது; ஒரு கூட்டத்தாரிடம் பிரபலமானவர் மற்றொரு கூட்டத்தாரிடம் பிரபலமில்லாமல் இருக்கலாம்.

"அதே நேரத்தில், ஒருவருடைய நிலை (அதாவது அவரது நற்பண்புகள் மற்றும் கல்வித் தகுதி) நேரில் பார்த்தோ அல்லது நம்பகமானவர் அறிவித்தோ நமக்குத் தெரியாமல் இருக்கும் பட்சத்தில், அவரைப் பற்றி (அபூஹாதிம் போன்ற விமர்சகர்) அத்தகைய பலவீனப்படுத்தும் சொற்களைக் கூறினால், நாம் அதை அவரிடமிருந்து ஏற்றுக் கொள்வோம்; அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அந்த அறிவிப்பாளரின் ஹதீஸையும் தவிர்த்து விடுவோம். இன்னும் சொல்லப்போனால், அந்த விமர்சகர் அப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்காவிட்டாலும் கூட, அந்த அறிவிப்பாளரின் நிலைமை என்னவென்றே நமக்குத் தெரியாத காரணத்தினாலேயே (அறியப்படாதவர் என்ற அடிப்படையில்) அவரது ஹதீஸை நாம் ஏற்கனவே தவிர்த்திருப்போம். (இவ்வாறு இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ அபூஹாதிம் அவர்களின் விமர்சனத்திற்கு பதில் தந்துள்ளார்)

இவரிடமிருந்து ஸலமா பின் குஹைல், அபூஇஸ்ஹாக், ஹகம் பின் உதைபா போன்ற பெரிய அறிஞர்கள் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவருடைய ஹதீஸ்கள் யாவும் சீராகவே உள்ளன. இவரிடம் எவ்விதத் தவறும், தடுமாற்றமும், முன்கரான அறிவிப்புகளும் காணப்படவில்லை. எனவே இவரைப் பலவீனமானவர் என்று கூறுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

1 . அது இதர சான்றுகளின் அடிப்படையில் முற்றிலும் சரியானது ஹதீஸ்.

2 . முர்ஸலான அறிவிப்பாளர்தொடர்.

3 . சரியான ஹதீஸ். இதற்கு சான்றாக வேறு ஹதீகளும் உள்ளன.

1 . முதல் ஹதீஸ் நடுத்தரமான ஹதீஸ்.

2 . இரண்டாவது ஹதீஸ். இதை ஹஸன் ஸஹீஹ் என்று திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: கஷ்ஃபுல் ஈஹாம் லிமா தளம்மனஹு தஹ்ரீருத் தக்ரீப் மினல் அவ்ஹாம்-பக்கம்: 339)


[1150] حجية بوزن علية بن عدي الكندي صدوق يخطئ من الثالثة ت

قلت: حسن الحديث: وثقه العجلي وذكره ابن حبان في الثقات وروى عنه الحكم بن عتيبة وسلمة بن كهيل وأبو إسحاق السبيعي (تهذيب التهذيب 2/ 216) والحكم لا يروي إلا عن ثقة. وأخرج له ابن خزيمة في صحيحه (4/ 293 رقم 2914) والحاكم في المستدرك (3/ 375 رقم 5431) وقال "هذا حديث صحيح الإسناد" ووافقه الذهبي. وأما قول أبي حاتم "شيخ لا يحتج بحديثه شبيه بالمجهول" فأما قوله "لا يحتج به" فجرح مبهم وأما قوله "شبيه المجهول" فقد وثق وروى عنه ثلاث ثقات.

ஹுஜய்யா பின் அதீ அல்கின்தீ: (இவரது பெயர் உலைய்யா என்ற வார்த்தையின் அமைப்பில் உச்சரிக்கப்பட வேண்டும்). இவரைப் பற்றி இப்னு ஹஜர் குறிப்பிடும் போது, "ஸதூக்-உண்மையாளர், சில நேரங்களில் தவறிழைப்பவர், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய ஹதீஸ்கள் திர்மிதீயில் இடம் பெற்றுள்ளன" என்று எழுதியுள்ளார்.

நான் கூறுகிறேன்: இவர் ‘ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர்’ ஆவார். இவரை இஜ்லீ இமாம் பலமானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்; இப்னு ஹிப்பான் தனது ‘அஸ்ஸிகாத்’ (நம்பகமானவர்கள்) நூலில் கூறியுள்ளார். மேலும், இவரிடமிருந்து ஹகம் பின் உதைபா, ஸலமா பின் குஹைல், அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் (தஹ்தீபுத் தஹ்தீப் 2/216). (இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் ஹகம் அவர்கள் பலமான அறிவிப்பாளர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர் ஆவார்.

மேலும் இப்னு குஸைமா தனது ‘ஸஹீஹ்’ நூலிலும் (பாகம்: 4, பக்கம்: 293, ஹதீஸ் எண்: 2914), ஹாகிம் அவர்கள் தனது ‘அல்முஸ்தத்ரக்’ நூலிலும் (பாகம்: 3, பக்கம்: 375, ஹதீஸ் எண்: 5431) இவருடைய ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர். ஹாகிம் அவர்கள், “இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்; தஹபீ அவர்களும் இதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

1 . “இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது” என்று அவர் கூறியிருப்பது, (காரணம் தெளிவுபடுத்தப்படாத) தெளிவற்ற விமர்சனம் (ஜர்ஹ் முப்ஹம்) ஆகும்.

2 . “இவர் அறியப்படாதவர் (மஜ்ஹூல்) போன்றவர்” என்று அவர் கூறியிருப்பதைப் பொறுத்தவரை, (அது ஏற்புடையதல்ல; ஏனெனில் இவர் பலமானவர் என்று சான்றளிக்கப்பட்டுள்ளார், மேலும் இவரிடமிருந்து மூன்று பலமான அறிவிப்பாளர்கள் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.

(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-1/288)

(அபூஹாதிம் அவர்களைப் பொருத்தவரை ஒருவரிடமிருந்து அதிகமானவர்கள் ஹதீஸை அறிவித்தால் தான் அவர் அறியப்பட்டவர் ஆவார் என்பதும் ஒரு நிபந்தனையாகும்.)

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (1. நபித்தோழர்) (ரலி)

அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) – Ali ibn Abi Talib

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அலீ பின் அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப் பின் ஹாஷிம்

தந்தை பெயர்: அபூதாலிப் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 23, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 40, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் புனித தலமான கஅபாவில் பிறந்த ஒரே நபர் ஆவார். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டிலேயே வளர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது, இஸ்லாத்தை முதலில் ஏற்றுக்கொண்டவர்களில் அவர்களும் ஒருவர்.

அவர்கள் இஸ்லாத்தின் நான்காவது கலீஃபாவாக இருந்தார்கள். ஹிஜ்ரி 40 இல் கூஃபாவில் ஷஹீதாக்கப்பட்டார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபாத்திமா பின்த் முஹம்மத், அல்மிக்ஃதாத் பின் அல்அஸ்வத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹஸன் பின் அலீ பின் அபூதாலிப், ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப், இப்னு மஸ்ஊத், அல்-பரா பின் ஆஸிப், அபூ ஹுரைரா, அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸுஹைப் பின் ஸினான் அர்ரூமீ, ஸஃபீனா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஜஃபர்

வேறு பெயர்கள்: அலீ, அபூ ஹஸன், அபூ துராப், அமீருல் முஃமினீன்


ஆதாரம்: muslimscholars.info (5) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.