ஹுஜய்யா பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் மாடு (எத்தனை பேருக்காகக் குர்பானி கொடுக்கப்படலாம் என்பது) பற்றிக் கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஏழு பேருக்காக” என்று கூறினார்கள்.
அம்மனிதர், “அதன் கொம்பு உடைந்திருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அது உனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது (அதாவது, அது கூடும்)” என்றார்கள்.
மீண்டும் அம்மனிதர், “அது நொண்டியாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அது அறுக்குமிடம் வரை (தன்னால் நடந்து) வந்துவிட்டால், நீ அதனை அறுத்துவிடு” (அது கூடும்) என்று கூறிவிட்டு,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்” என்று சொன்னார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 734)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجَيَّةَ، قَالَ:
سَأَلَ رَجُلٌ عَلِيًّا عَنِ الْبَقَرَةِ، فَقَالَ: عَنْ سَبْعَةٍ. فَقَالَ: مَكْسُورَةُ الْقَرْنِ؟ فَقَالَ: لَا يَضُرُّكَ. قَالَ: الْعَرْجَاءُ؟ قَالَ: «إِذَا بَلَغَتِ الْمَنْسَكَ فَاذْبَحْ، أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-696.
Musnad-Ahmad-Shamila-734.
Musnad-Ahmad-Alamiah-696.
Musnad-Ahmad-JawamiulKalim-716.
- இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். இந்தச் செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடரில் உள்ள முதல் மூன்று பகுதிகள் நபித்தோழர் அலீ (ரலி) அவர்களின் சொல்லாகும். கடைசிப் பகுதி நபி (ஸல்) அவர்களின் சொல்லாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . வகீஃ பின் ஜர்ராஹ் (2. மிகப் பலமானவர்).
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத் (2. மிகப் பலமானவர்).
4 . ஸலமா பின் குஹைல் (2. மிகப் பலமானவர்).
5 . ஹுஜய்யா பின் அதீ (4. நடுத்தரமானவர்).
6 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி) (1. நபித்தோழர்).
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11354-ஹுஜய்யா பின் அதீ அவர்கள் பற்றிய ஆய்வில் இவரை சில ஹதீஸ்துறை அறிஞர்கள் பலமானவர் என்றும் சிலர் நடுத்தரமானவர் என்றும் முடிவைக் கூறியுள்ளனர்.
பார்க்க: ராவிபெயர்-ஹுஜய்யா பின் அதீ.
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . ஸலமா பின் குஹைல் அவர்களின் அறிவிப்புகள்:
- ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-13437, 13265, அஹ்மத்-734, 732, 1021, 1309, 1312, இப்னு மாஜா-3143, …
- ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஹம்மாத் பின் ஸலமா —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-155, அஹ்மத்-826, 1021, 1022, 1309, 1312, தாரிமீ-1994, நஸாயீ-4376, …
- ஷரீக் —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)
பார்க்க: திர்மிதீ-1503, ஷரஹ் மஆனில் ஆஸார்-6198,
- ஹஸன் பின் ஸாலிஹ் —> ஸலமா பின் குஹைல் —> ஹுஜய்யா பின் அதீ —> அலீ (ரலி)
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-6198,
2 . அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:
அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-609, 851, 1061, 1275, தாரிமீ-1995, இப்னு மாஜா-3142, அபூதாவூத்-2804, திர்மிதீ-1498, நஸாயீ-4372, 4373, 4374, 4375, …
- அபூஇஸ்ஹாக் —> ஷுரைஹ் பின் நுஃமான் —> இப்னு அஷ்வஃ —> அலீ (ரலி)
பார்க்க: ஹாகிம்-7532,
- அபூஇஸ்ஹாக் —> ஹுபைரா —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-1106, அல்முஃஜமுல் அவ்ஸத்-7973,
……………………………………………………………………………………………………………………………………..
3 . வேறு சிலரின் அறிவிப்புகள்:
விளக்கம் பார்க்க: அபூதாவூத்-2805.
- ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஹம்மாம் —> கதாதா —> ஜுரய்யு பின் குலைப் —> அலீ (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-99, அஹ்மத்-633, 791, 1048, 1066, 1157, 1158, 1293, 1294, இப்னு மாஜா-3145, அபூதாவூத்-2805, திர்மிதீ-1504, நஸாயீ-4377, … ஷரஹ் மஆனில் ஆஸார்-6195,
- ஜாபிர் —> அப்துல்லாஹ் பின் நுஜை —> அலீ (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-98, அஹ்மத்-864,
2 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2932.
3 . அபூமஸ்ஊத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-14114.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: மாலிக்-1387, முஸ்லிம்-2538, திர்மிதீ-905,
சமீப விமர்சனங்கள்