Author: Farook

Daraqutni-1729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1729. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும். அவ்விரண்டிற்கு பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதவேண்டும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«التَّكْبِيرُ سَبْعٌ فِي الْأُولَى وَخَمْسٌ فِي الْآخِرَةِ , وَالْقِرَاءَةُ بَعْدَهُمَا كِلْتَيْهِمَا»


Abu-Dawood-1152

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1152.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ الْأُولَى سَبْعًا، ثُمَّ يَقْرَأُ، ثُمَّ يُكَبِّرُ، ثُمَّ يَقُومُ فَيُكَبِّرُ أَرْبَعًا، ثُمَّ يَقْرَأُ، ثُمَّ يَرْكَعُ»


Ibn-Majah-1292

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1292. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்னும் பின்னும் வேறு எந்த தொழுகையையும் தொழவில்லை.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا فِي عِيدٍ»


Ibn-Khuzaymah-174

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

174. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا ثَلَاثًا، فَقَالَ: «مَنْ زَادَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ أَوِ اعْتَدَى وَظَلَمَ»


Ibn-Majah-422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

422.

நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறைபற்றி கேட்டார்.அதற்கு நபியவர்கள் மூன்று, மூன்று தடவைதான். இது தான் உளூ ஆகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார் அல்லது அநீதி இழைத்து விட்டார் என்று கூறினார்கள்.


قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، أَوْ تَعَدَّى، أَوْ ظَلَمَ»


Abu-Dawood-135

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 51

உளூச் செய்யும் போது உறுப்புக்களை மும்மூன்று தடவை கழுவுதல்.

135. நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! உலூச் செய்வது எவ்வாறு? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி தமது இரு முன் கைகயையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறையும், தமது கைகளை முட்டுக்கை வரை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு தனது தலைக்கு மஸஹ் செய்து விட்ட தனது இரு ஆட் காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள் செலுத்தி இரு காதுகளின் வெளிப்பாகத்தை தனது இரு பெருவிரல்களாலும் உட்பாகத்தை ஆட்காட்டி விரல்களாலும் மஸஹ் செய்தார்கள். பிறகு தனது இரு கால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள். பின்னர் உலூச் செய்யும் விதம் இவ்வாறு தான் யார் இதை விடக் கூடுதலாகச் செய்கிறாரோ அல்லது இதை விடக் குறைத்து விட்டாரோ அவரும் தீங்கு இழைத்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ருபின் ஷுஐப் (ரலி) தனது தந்தை மூலமாகப் பாட்டனார் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு குஸைமா ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الطُّهُورُ فَدَعَا بِمَاءٍ فِي إِنَاءٍ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ السَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ، وَمَسَحَ بِإِبْهَامَيْهِ عَلَى ظَاهِرِ أُذُنَيْهِ، وَبِالسَّبَّاحَتَيْنِ بَاطِنَ أُذُنَيْهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا أَوْ نَقَصَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ – أَوْ ظَلَمَ وَأَسَاءَ -»


Musnad-Ahmad-6684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6684. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ؟ فَأَرَاهُ ثَلَاثًا، ثَلَاثًا قَالَ: «هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، وَتَعَدَّى، وَظَلَمَ»


Nasaayi-140

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உளூவில் எல்லை மீறுதல்.

140. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ الْوُضُوءَ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ»


Abu-Dawood-1079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1079. நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், கவிதை பாடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِي الْمَسْجِدِ، وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ، وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ، وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلَاةِ يَوْمَ الْجُمُعَةِ»


Abu-Dawood-1692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1692. தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَقُوتُ»


Next Page » « Previous Page