Author: Farook

Musnad-Ahmad-20013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20013.

..ஒரு மனிதர் நபியவர்களிடம் “மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர்(ரலி)


سَأَلَهُ رَجُلٌ مَا حَقُّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ؟ قَالَ: «تُطْعِمُهَا إِذَا طَعِمْتَ، وَتَكْسُوهَا إِذَا اكْتَسَيْتَ، وَلَا تَضْرِبِ الْوَجْهَ، وَلَا تُقَبِّحْ، وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ»


Darimi-527

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

527. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், எங்களுக்கு லுஹர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு ஏடு இருந்தது. பின்பு அஸர் தொழுகை தொழுவிக்க வந்தார்கள். அப்போதும் அவர்களிடம் அந்த ஏடு இருந்தது. எனவே நான் முஃமின்களின் தலைவரே! அது என்ன ஏடு? என்று கேட்டேன். அதற்கவர்கள், இது அவ்ன் பின் அப்துல்லாஹ் எனக்கு அறிவித்த ஹதீஸ்கள் என்று கூறினார். எனவே நான் ஆச்சரியமடைந்து (அவர்களிடம் அனுமதிபெற்று) அதை எழுதிக் கொண்டேன். அப்போது அதில் (ஹதீஸ் எண்-526 இல் உள்ள) மேற்கண்ட செய்தி இடம்பெற்றிருந்தது.


خَرَجَ عَلَيْنَا عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ لِصَلَاةِ الظُّهْرِ، وَمَعَهُ قِرْطَاسٌ، ثُمَّ خَرَجَ عَلَيْنَا لِصَلَاةِ الْعَصْرِ وَهُوَ مَعَهُ، فَقُلْتُ لَهُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، مَا هَذَا الْكِتَابُ؟ قَالَ: ” هَذَا حَدِيثٌ حَدَّثَنِي بِهِ عَوْنُ بْنُ عبْدِ اللَّهِ، فَأَعْجَبَنِي فَكَتَبْتُهُ، فَإِذَا فِيهِ هَذَا الْحَدِيثُ


Darimi-526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

526. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம், நபித்தோழர்களில் இன்ன மனிதர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார் என்று கூறினேன். உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவரை தெரிந்துக்கொண்டார்கள்.

மேலும் நான்,

“வெட்கமும், பத்தினித்தனமும்-கற்பொழுக்கமும், குறைவாக பேசுவதும், மார்க்க ஞானமும் ஈமானுடைய அம்சமாகும். இவை மறுமையில் அதிக நன்மையைத் தரும். உலகில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் நன்மையைத் தருவதே அதிகமாகும்.

கெட்ட வார்த்தையும், கெட்ட குணமும், கஞ்சத்தனமும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். இவை உலகில் அதிக நன்மையைத் தருவதாக தெரியலாம். ஆனால் மறுமையில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துவதே அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அந்த நபித்தோழர் எனக்கு அறிவித்தார் எனக் கூறினேன்.


قُلْتُ: لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنِي فُلَانٌ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَرَفَهُ عُمَرُ، قُلْتُ: حَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَيَاءَ، وَالْعَفَافَ، وَالْعِيَّ، عِيَّ اللِّسَانِ، لَا عِيَّ الْقَلْبِ، وَالْفِقْهَ مِنَ الْإِيمَانِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الْآخِرَةِ، وَيُنْقِصْنَ مِنَ الدُّنْيَا، وَمَا يَزِدْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ، وَإِنَّ الْبَذَاءَ، وَالْجَفَاءَ، وَالشُّحَّ، مِنَ النِّفَاقِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الدُّنْيَا، وَيُنْقِصْنَ فِي الْآخِرَةِ، وَمَا يُنْقِصْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ»


Musnad-Ahmad-10512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கம் ஈமானுடைய அம்சமாகும்….


«الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ»


Hakim-170

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

170. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


الْعِيُّ وَالْحَيَاءُ: شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ، وَالْبَذَاءُ وَالْجَفَاءُ: شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ


Hakim-17

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


«الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ، وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ»


Almujam-Alkabir-7481

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7481. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்…

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


«إِنَّ الْحَيَاءَ وَالْعِيَّ مِنَ الْإِيمَانِ، وَهُمْا يُقَرِّبَانِ مِنَ الْجَنَّةِ، وَيُبَاعِدَانِ مِنَ النَّارِ. وَالْفُحْشُ وَالْبِذَاءُ مِنَ الشَّيْطَانِ، وَهُمْا يُقَرِّبَانِ مِنَ النَّارِ، وَيُبَاعِدَانِ مِنَ الْجَنَّةِ» فَقَالَ أَعْرَابِيٌّ لِأَبِي أُمَامَةَ: إِنَّا لَنَقُولُ فِي الشِّعْرِ: إِنَّ الْعِيَّ مِنَ الْحُمْقِ، فَقَالَ: تَرَانِي أَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، وَتُحَسِّنْ بِشِعْرِكَ النَّتِنِ


Musnad-Ahmad-22312

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22312. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


«الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ، وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30428

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

30428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி­)


«الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ»


Abu-Dawood-5204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5204.


«مَرَّ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ فَسَلَّمَ عَلَيْنَا»


Next Page » « Previous Page