Author: Farook

Musnad-Ahmad-22324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22324.


أَنَّهُ قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ فَقَالُوا لَهُ: احْفَظْ رِحَالَنَا. ثُمَّ تَدْخُلُ وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ فَقَضَى لَهُمْ حَاجَتَهُمْ، ثُمَّ قَالُوا لَهُ: ادْخُلْ فَدَخَلَ. فَقَالَ: «حَاجَتُكَ؟» قَالَ: حَاجَتِي. تُحَدِّثُنِي: أَنْقَضَتِ الْهِجْرَةُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَاجَتُكَ خَيْرٌ مِنْ حَوَائِجِهِمْ لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْعَدُوُّ»


Nasaayi-4173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4173.


وَفَدْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ أَصْحَابِي فَقَضَى حَاجَتَهُمْ، وَكُنْتُ آخِرَهُمْ دُخُولًا، فَقَالَ: حَاجَتُكَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى تَنْقَطِعُ الْهِجْرَةُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْكُفَّارُ»


Nasaayi-4172

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4172. அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு கூட்டத்தினருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சந்திக்க வந்தேன். எங்களில் ஒவ்வொருவரும் ஒரு தேவைக்காக வந்திருந்தனர். அவர்களில், நானே கடைசியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பார்க்க சென்றேன். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!எங்களில் சிலர், ஹிஜ்ரத் முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தில் உள்ளனர் என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இறைமறுப்பாளர்களுடன் யுத்தம் நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் முடிவடையாது என்று கூறினார்கள்.


وَفَدْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدٍ كُلُّنَا يَطْلُبُ حَاجَةً، وَكُنْتُ آخِرَهُمْ دُخُولًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي تَرَكْتُ مَنْ خَلْفِي وَهُمْ يَزْعُمُونَ أَنَّ الْهِجْرَةَ قَدِ انْقَطَعَتْ، قَالَ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْكُفَّارُ»


Musnad-Ahmad-1671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1671. எதிரிகளுடன் சண்டை நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் செய்வது (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், முஆவியா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறியதாவது:

ஹிஜ்ரத் இருவகையாகும். 1. பாவங்களை விடுவது. 2. அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் நாடு துறந்து செல்வது.

பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது. சூரியன் மேற்கில் உதயமாகும் போது ஒவ்வொரு மனிதரின் உள்ளமும் (ஏற்கனவே இருந்த நிலையில்) முத்திரையிடப்பட்டுவிடும். மக்கள் (புதிய) அமல்கள் செய்வதை விட்டு தடுக்கப்படுவர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி)


«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا دَامَ الْعَدُوُّ يُقَاتَلُ»

فَقَالَ مُعَاوِيَةُ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ الْهِجْرَةَ خَصْلَتَانِ: إِحْدَاهُمَا أَنْ تَهْجُرَ السَّيِّئَاتِ، وَالْأُخْرَى أَنْ تُهَاجِرَ إِلَى اللَّهِ وَرَسُولِهِ. وَلا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا تُقُبِّلَتِ التَّوْبَةُ، وَلا تَزَالُ التَّوْبَةُ مَقْبُولَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنَ المَغْرِبِ، فَإِذَا طَلَعَتْ طُبِعَ عَلَى كُلِّ قَلْبٍ بِمَا فِيهِ، وَكُفِيَ النَّاسُ الْعَمَلَ


Kubra-Bayhaqi-17778

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17778. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا


Almujam-Alkabir-907

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

907. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. (இதை மூன்று தடவை கூறினார்கள்).

சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، ثَلَاثَ مَرَّاتٍ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»


Abi-Yala-7371

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7371. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. (இதை மூன்று தடவை கூறினார்கள்).

சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ ـ قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ ـ وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»


Kubra-Nasaayi-8658

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) எப்போது முடிவடையும்?

8658. பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ، وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ قِبَلِ الْمَغْرِبِ»


Darimi-2555

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடையாது.

2555. …பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. (இதை மூன்று தடவை கூறினார்கள்).

சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


تَذَاكَرُوا الْهِجْرَةَ عِنْدَ مُعَاوِيَةَ وَهُوَ عَلَى سَرِيرِهِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ – ثَلَاثًا – وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»


Next Page » « Previous Page