Author: Farook

Almujam-Alawsat-1018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1018. பள்ளிவாசலின் பல வாசல்களில் இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ கூறினார்.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ: «لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ» .

قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ حَتَّى مَاتَ


Abu-Dawood-463

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

463. இந்த கருத்தை உமர் (ரலி) கூறியதாக நாபிஃ அறிவிக்கின்றார்.

இது தான் மிகச் சரியானதாகும்.


قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ بِمَعْنَاهُ، وَهُوَ أَصَحُّ


Abu-Dawood-464

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

464. (ஆண்கள்) பெண்களின் வாசல் வழியாக வருவதை உமர் (ரலி) தடுத்துக் கொண்டிருந்தார்கள் என நாபிஃ அறிவிக்கின்றார்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، «كَانَ يَنْهَى أَنْ يُدْخَلَ مِنْ بَابِ النِّسَاءِ»


Tayalisi-1938

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலை கட்டியபோது பெண்களுக்கு தனிவாசலை ஏற்படுத்தினார்கள். மேலும், இந்த வாசல் வழியாக ஆண்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அதிலிருந்து) இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த வாசல் வழியாக பள்ளிக்குள் செல்வதையோ, அல்லது அதிலிருந்து வெளியேறுவதையோ நான் பார்த்ததில்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى الْمَسْجِدَ جَعَلَ بَابًا لِلنِّسَاءِ، وَقَالَ: «لَا يَلِجَنَّ مِنْ هَذَا الْبَابِ مِنَ الرِّجَالِ أَحَدٌ»

قَالَ نَافِعٌ: فَمَا رَأَيْتُ ابْنَ عُمَرَ دَاخِلًا مِنْ ذَلِكَ الْبَابِ وَلَا خَارِجًا مِنْهُ


Abu-Dawood-571

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

571. இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாஃபிஉ (ரஹ்) கூறினார்.

அபூதாவூத் கூறுகிறார்:

அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில் நாஃபிஉ அவர்கள், உமர் (ரலி) கூறியதாக அறிவித்ததாக வந்துள்ளது. இதுதான் மிகச் சரியானதாகும்.


«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»

قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ حَتَّى مَاتَ،

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ: قَالَ عُمَرُ: وَهَذَا أَصَحُّ


Nasaayi-463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகையை விடக்கூடியவரின் (விசயத்தில் உள்ள) தீர்ப்பு.

463. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«إِنَّ الْعَهْدَ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمِ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Tirmidhi-2621

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2621. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«العَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Musnad-Ahmad-23007

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23007. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«بَيْنَنَا وَبَيْنَهُمْ تَرْكُ الصَّلَاةِ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Musnad-Ahmad-22937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Ibn-Majah-1079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Next Page » « Previous Page