Author: Abdul Hakkim

Tirmidhi-3643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ بِرَأْسِي وَدَعَا لِي بِالبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، فَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى الخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الحَجَلَةِ»


Musnad-Ahmad-22882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22882. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் இரு தோள்புஜங்களுக்கிடையில் நபித்துவ முத்திரையை (ஒரு மனிதர் ஆச்சரியமாக பார்ப்பது போன்று) நான் பார்த்தேன். மேலும் அதை எனது கையால் தொட்டும் பார்த்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநஹீக் கூறுகிறார்:

அபூஸைத் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தனது மூன்றாவது விரலால் இவ்வாறு (தொட்டுப்பார்த்தேன்) என்று செய்துக் காட்டினார்கள்.


«رَأَيْتُ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرَجُلٍ، قَالَ بِإِصْبَعِهِ الثَّالِثَةِ هَكَذَا، فَمَسَحْتُهُ بِيَدِي»


Musnad-Ahmad-20732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்.

20732. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வா என்று அழைத்தார்கள். நான் அவர்களின் அருகில் சென்றேன். அப்போது அவர்கள், உனது கையால் என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்களின் சட்டையில் நான் கையை விட்டு முதுகைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நபித்துவ முத்திரை என்னுடைய விரலில் பட்டது.


அபூஸைத் (ரலி) அவர்களிடம் நபித்துவ முத்திரை எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று பதில் கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَرِبْ مِنِّي» ، فَاقْتَرَبْتُ مِنْهُ، فَقَالَ: «أَدْخِلْ يَدَكَ فَامْسَحْ ظَهْرِي» ، قَالَ: فَأَدْخَلْتُ يَدِي فِي قَمِيصِهِ، فَمَسَحْتُ ظَهْرَهُ، فَوَقَعَ خَاتَمُ النُّبُوَّةِ بَيْنَ إِصْبَعَيَّ، قَالَ: فَسُئِلَ عَنْ خَاتَمِ النُّبُوَّةِ، فَقَالَ: «شَعَرَاتٌ بَيْنَ كَتِفَيْهِ»


Musnad-Ahmad-22889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22889. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை நான் சிறுவயதில் இருக்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூஸைதே! என்னிடம் நெருங்கி வந்து என் முதுகைத் தொட்டுப்பார்” என்று கூறினார்கள். எனவே அவர்கள் முதுகைத் திறக்க நான் அதைத் தொட்டுப் பார்த்தேன். அப்போது நான் (நபித்துவ முத்திரை எனும்) காதமை என்னுடைய விரல்களுக்கிடையில் வைத்து அழுத்திப் பார்த்தேன்.


அபூஸைத் (ரலி) அவர்களிடம் காதம் எப்படி இருந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோள்புஜத்தில் அது திரளான முடி (போன்று கட்டியாக) இருந்தது என்று கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا زَيْدٍ ادْنُ مِنِّي، وَامْسَحْ ظَهْرِي» . وَكَشَفَ ظَهْرَهُ، فَمَسَحْتُ ظَهْرَهُ، وَجَعَلْتُ الْخَاتَمَ بَيْنَ أَصَابِعِي. قَالَ: فَغَمَزْتُهَا. قَالَ فَقِيلَ: وَمَا الْخَاتَمُ؟ قَالَ: شَعَرٌ مُجْتَمِعٌ عَلَى كَتِفِهِ


Abu-Dawood-4082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

சட்டைப் பித்தான்களை மாட்டாமலிருப்பது.

4082. நான், எனது முஸைனா கூட்டத்தாருடன் சேர்ந்து வந்து (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் எனும் உறுதிமொழி அளித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பித்தான்கள் திறந்திருந்தன.

நான் பைஅத் செய்யும் போது நபி (ஸல்) அவர்களின் சட்டைப் பையில் கையை விட்டு நபித்துவ முத்திரையை தடவிப் பார்த்தேன்.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

உர்வா பின் அப்துல்லாஹ் (ரஹ்) கூறுகிறார்:

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்களும், அவரின் மகனும் குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் சட்டைப் பித்தான்களை திறந்தே விட்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். எப்போதும், அவர்கள் சட்டைப் பித்தான்களை மாட்டுவதில்லை.


«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنْ مُزَيْنَةَ، فَبَايَعْنَاهُ، وَإِنَّ قَمِيصَهُ لَمُطْلَقُ الْأَزْرَارِ»، قَالَ: «فَبَايَعْتُهُ ثُمَّ أَدْخَلْتُ يَدَيَّ فِي جَيْبِ قَمِيصِهِ، فَمَسِسْتُ الْخَاتَمَ»

قَالَ عُرْوَةُ: «فَمَا رَأَيْتُ مُعَاوِيَةَ وَلَا ابْنَهُ قَطُّ، إِلَّا مُطْلِقَيْ أَزْرَارِهِمَا فِي شِتَاءٍ وَلَا حَرٍّ، وَلَا يُزَرِّرَانِ أَزْرَارَهُمَا أَبَدًا»


Tirmidhi-3644

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3644. நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரை, புறா முட்டை அளவில் (அவர்களது உடலின் நிறத்திலேயே) சிவந்த கட்டியாக இருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: – يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ – غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ


Ibn-Hibban-3001

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்கள், நபி என்பதற்கு அடையாளமாக இருந்த இறை அற்புதமான நபித்துவ முத்திரை பற்றிய உண்மை நிலை.

3001. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் முதுகில் (தோள்பட்டை அருகில்) நபித்துவ முத்திரை, கலிமண் குண்டு போன்று (அவர்களது உடலின் நிறத்திலேயே) இருந்தது.

மேலும் அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (முஹம்மத்-ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று எழுதப்பட்டிருந்தது.


كَانَ خَاتَمُ النُّبُوَّةِ فِي ظَهْرِ رَسُولِ اللهِ صَلى الله عَلَيه وسَلم مِثْلَ الْبُنْدُقَةِ مِنْ لَحْمٍ عَلَيْهِ، مَكْتُوبٌ مُحَمَّدُ رَسُولِ اللهِ.


Muwatta-Malik-2858

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2858. அஸ்லம் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன்-இறைநம்பிக்கையாளர்களின் தலைவருக்காக பயணம் செய்வதற்கேற்ற ஒட்டகத்தை எனக்கு காட்டுங்கள்! என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ஸகாத் ஒட்டகம் இருக்கிறது. (அதைத் தரவா?) என்று கூறினேன்.

அதற்கவர்கள், குண்டான மனிதர் கடுமையான வெயில் காலத்தில் தனது வேட்டியிலிருந்து தொடை வரை உள்ள பகுதிகளைக் கழுவி அதை உமக்கு கொடுத்தால் அதை நீ குடிப்பாயா? என்று கேட்டார்கள். உடனே நான் கோபமடைந்து, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்னிடம் இது போன்ற வார்த்தைகளை சொல்கிறீர்களே? (இது முறையா?) என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸதகா, ஸகாத் எனும் தர்மப்பொருட்கள் மக்களின் அழுக்குகளாகும். (அதை வழங்குவதின் மூலம்) தங்களை கழுவிக்கொள்கிறார்கள்” என்று கூறினார்கள்.


ادْلُلْنِي عَلَى بَعِيرٍ مِنَ الْمَطَايَا أَسْتَحْمِلُ عَلَيْهِ أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَقُلْتُ: نَعَمْ جَمَلاً مِنَ الصَّدَقَةِ، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: أَتُحِبُّ أَنَّ رَجُلاً بَادِنًا فِي يَوْمٍ حَارٍّ غَسَلَ لَكَ مَا تَحْتَ إِزَارِهِ وَرُفْغَيْهِ، ثُمَّ أَعْطَاكَهُ فَشَرِبْتَهُ؟ قَالَ: فَغَضِبْتُ، وَقُلْتُ: يَغْفِرُ اللهُ لَكَ، أَتَقُولُ لِي مِثْلَ هَذَا؟ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: إِنَّمَا الصَّدَقَةُ أَوْسَاخُ النَّاسِ يَغْسِلُونَهَا عَنهُمْ.


Kubra-Bayhaqi-10821

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

10821.


أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , عَلِّمْنِي فَذَكَرَ الْحَدِيثَ , قَالَ: وَكَانَ فِي آخِرِ مَا حَفِظْتُ أَنْ قَالَ: ” إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللهِ إِلَّا أَبْدَلَكَ اللهُ بِهِ مَا هُوَ خَيْرٌ مِنْهُ


Musnad-Ahmad-23074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23074. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் (ஹஜ்ஜுக்கு சென்றபோது) ஒரு கிராமவாசியை சந்தித்தோம். அவரிடம், நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ் எதையும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டோம். அதற்கவர், ஆம். நபி (ஸல்) அவர்கள், “நீ அல்லாஹ்வுக்காக எந்த ஒன்றை விட்டாலும் அதனைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்” எனக் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.


أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقُلْنَا: هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ»


Next Page » « Previous Page