Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-12073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் துன்பத்தில் இருக்கும் மற்றொருவருக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க (சிறந்த) ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் பின் கரீஸ் (ரஹ்)


«مَنْ عَزَّى مُصَابًا كَسَاهُ اللَّهُ رِدَاءً يُحْبَرُ بِهِ»، يَعْنِي يَغْبِطُ بِهِ


Tirmidhi-1073

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை குறித்து வந்துள்ளவை.

1073. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். அலீ பின் ஆஸிம் என்பவரே இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.

இந்தச் செய்தியை(ப் போன்று பல செய்திகளை இவ்வாறு) அறிவித்ததின் காரணமாகவே இவர் அறிஞர்களின் விமர்சனத்தால் அதிகம் பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.


«مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»


Tirmidhi-1076

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆறுதல் கூறுவதின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்றொரு செய்தி.

1076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தையை இழந்து தவிக்கும் தாயாருக்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் (மதிப்புக்குரிய) ஆடை அணிவிக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானதல்ல.


«مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الجَنَّةِ»


Shuabul-Iman-8843

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க பச்சை நிற ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்…

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


مَنْ عَزَّى أَخَاهُ الْمُسْلِمَ فِي مُصِيبَةٍ، كَسَاهُ اللهُ حُلَّةً خَضْرَاءَ يُحْبَرُ بِهَا ” قِيلَ: يَا رَسُولَ اللهِ، مَا يُحْبَرُ بِهَا؟ قَالَ: ” يُغْبَطُ بِهَا


Ibn-Majah-1601

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை.

1601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு (நீ அல்லாஹ்வுக்காக பொறுமையாக இரு என்பது போன்ற) ஆறுதலைக் கூறினால் அவருக்கு, மறுமைநாளில் கண்ணியம் எனும் சொர்க்கத்தின் ஆடையை தூயோன் அல்லாஹ் அணிவிக்க செய்கிறான்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அல்லது முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்)


«مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ، إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alkabir-109

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

109. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இன்ன பனூ கூட்டத்தாரின் குப்பை மேட்டில் போடப்பட்டு மூன்று நாட்கள் கிடந்தார்கள். பிறகு அங்கு 12 பேர் வந்தார்கள். அவர்களில் எனது பாட்டனார் மாலிக் பின் அபூஆமிர், ஹுவைத்திப் பின் அப்துல்உஸ்ஸா, ஹகீம் பின் ஹிஸாம், அப்துல்லாஹ் பின் ஸுபைர், ஆயிஷா பின்த் உஸ்மான் ஆகியோர் இருந்தனர்.

…அவர்களிடம் 4 வயது ஒட்டகமும், விளக்கும் இருந்தது…

அதில் உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கிடத்தி பகீஃ எனும் பொதுமையவாடிக்கு கொண்டு வந்தனர்…

பிறகு அவருக்கு யார் ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு ஹகீம் பின் ஹிஸாம் அல்லது ஹுவைத்திப் தொழ வைத்தார்.

பிறகு அங்கு அவர்களை அடக்கம் செய்ய நாடினார்கள். அப்போது பனூ மாஸின் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை முஸ்லிம்களுடன் நீங்கள் அடக்கம் செய்தால் மக்களிடத்தில் நான் சொல்லி விடுவேன் என்று கூறினார். எனவே அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கவ்கப் என்பவரின் தோட்டத்துக்கு கொண்டு வந்தார்கள். பிறகு கப்ர் குழித் தோண்டி அதில் உடலை வைத்தார்கள். அப்போது ஆயிஷா பின்த் உஸ்மான் அவர்கள் சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَقَامَ مَطْرُوحًا عَلَى كُنَاسَةِ بَنِي فُلَانٍ ثَلَاثًا، فَأَتَاهُ اثْنَا عَشَرَ رَجُلًا، فِيهِمْ جَدِّي مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ، وَحُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى، وَحَكِيمُ بْنُ حِزَامٍ، وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ، وَعَائِشَةُ بِنْتُ عُثْمَانَ مَعَهُمْ مِصْبَاحٌ فِي حِقٍّ فَحَمَلُوهُ عَلَى بَابٍ، وَإِنَّ رَأْسَهُ يَقُولُ عَلَى الْبَابِ طَقْ طَقْ حَتَّى أَتَوْا بِهِ الْبَقِيعَ، فَاخْتَلَفُوا فِي الصَّلَاةِ عَلَيْهِ، فَصَلَّى عَلَيْهِ حَكِيمُ بْنُ حِزَامٍ أَوْ حُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى – شَكَّ عَبْدُ الرَّحْمَنِ – ثُمَّ أَرَادُوا دَفْنَهُ، فَقَامَ رَجُلٌ مِنْ بَنِي مَازِنٍ فَقَالَ: وَاللهِ لَئِنْ دَفَنْتُمُوهُ مَعَ الْمُسْلِمِينَ، لَأُخْبِرَنَّ النَّاسَ، فَحَمَلُوهُ حَتَّى أَتَوْا بِهِ إِلَى حَشِّ كَوْكَبٍ، فَلَمَّا دَلُّوهُ فِي قَبْرِهِ صَاحَتْ عَائِشَةُ بِنْتُ عُثْمَانَ، فَقَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: اسْكُتِي فَوَاللهِ لَئِنْ عُدْتِ لَأَضْرِبَنَّ الَّذِي فِيهِ عَيْنَاكِ، فَلَمَّا دَفَنُوهُ وَسَوَّوْا عَلَيْهِ التُّرَابَ قَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: صِيحِي مَا بَدَا لَكِ أَنْ تَصِيحِي، قَالَ مَالِكٌ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، قَبْلَ ذَلِكَ يَمُرُّ بِحُشٍّ كَوْكَبٍ فَيَقُولُ: لَيُدْفَنَنَّ هَهُنَا رَجُلٌ صَالِحٌ ” قَالَ أَبُو الْقَاسِمِ: ” الْحُشُّ: الْبُسْتَانُ “


Nasaayi-627

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

627.


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَالًا أَنْ يَشْفَعَ الْأَذَانَ، وَأَنْ يُوتِرَ الْإِقَامَةَ»


Ibn-Majah-729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

729.


الْتَمَسُوا شَيْئًا يُؤْذِنُونَ بِهِ عَلَمًا لِلصَّلَاةِ، «فَأُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ، وَيُوتِرَ الْإِقَامَةَ»


Next Page » « Previous Page