Author: Abdul Hakkim

Tirmidhi-960

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இறையில்லமான கஅபாவைச் சுற்றி வரும்போது பேசுவது குறித்து வந்துள்ளவை.

960. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையைப் போன்றதாகும். என்றாலும் நீங்கள் தவாஃப் செய்யும்போது பேசிக்கொள்ளலாம். அப்படி ஒருவர் பேசுவதாக இருந்தால் அவர் நல்லதைத் தவிர வேறு எதையும் பேசவேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இப்னு தாவூஸ் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நபியின் சொல்லாக, அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

இந்தச் செய்தியின் அடிப்படையில், கஅபாவைச் சுற்றி வருபவர் ஏதேனும் அவசியமான பேச்சுகள், அல்லாஹ்வை திக்ரு செய்தல், கல்வி சார்ந்த விசயங்கள் தவிர மற்றவற்றை பேசாமலிருப்பது நல்லது என்று கல்வியாளர்களில் அதிகமானோர் கருதுகின்றனர்.


«الطَّوَافُ حَوْلَ البَيْتِ مِثْلُ الصَّلَاةِ، إِلَّا أَنَّكُمْ تَتَكَلَّمُونَ فِيهِ، فَمَنْ تَكَلَّمَ فِيهِ فَلَا يَتَكَلَّمَنَّ إِلَّا بِخَيْرٍ»


Musnad-Ahmad-15423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

15423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே நீங்கள் தவாஃப் செய்யும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர்.

அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:

முஹம்மத் பின் பக்ர் அவர்கள் இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை என எனது தந்தை (அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்) கூறினார்கள்.


«إِنَّمَا الطَّوَافُ صَلَاةٌ، فَإِذَا طُفْتُمْ، فَأَقِلُّوا الْكَلَامَ»


Nasaayi-2923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2923. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (அப்போது) தொழுகையில் உள்ளீர்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


«أَقِلُّوا الْكَلَامَ فِي الطَّوَافِ، فَإِنَّمَا أَنْتُمْ فِي الصَّلَاةِ»


Nasaayi-2922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து) வரும்போது பேசுவதற்கு அனுமதி.

2922. “(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே (அப்போது) பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

நஸாயீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியின் வாசக அமைப்பு யூஸுஃப் பின் ஸயீத் அவர்கள் அறிவித்தவையாகும். என்றாலும் ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் இதற்கு மாற்றமாக வேறு அமைப்பில் அறிவித்துள்ளார்.


«الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ، فَأَقِلُّوا مِنَ الْكَلَامِ»


Shuabul-Iman-3833

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3833.


رَأَيْتُ ابْنَ الْمُبَارَكِ أَتَى زَمْزَمَ فَمَلَأَ إِنَاءً ثُمَّ اسْتَقْبَلَ الْكَعْبَةَ، فَقَالَ: اللهُمَّ إِنَّ ابْنَ أَبِي الْمَوَالِ، حَدَّثَنَا عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” مَاءُ زَمْزَمَ لِمَا شُرِبَ لَهُ وَهُوَ ذَا أَشْرَبُ هَذَا لِعَطَشِ يَوْمِ الْقِيَامَةِ “، ثُمَّ شَرِبَهُ.


Ibn-Majah-1602

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1602. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»


Musannaf-Abdur-Razzaq-6074

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6074.


«مَنْ عَزَّى مُؤْمِنًا بِمُصِيبَةٍ دَخَلَتْ عَلَيْهِ كَسَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ رِدَاءً يُحَبَّرُ بِهِ»، قُلْنَا لِعَبْدِ الرَّزَّاقِ: وَكَيْفَ يُعَزَّى؟ قَالَ: بَلَغَنِي أَنَّ الْحَسَنَ مَرَّ بِأَهْلِ مَيِّتٍ فَوَقَفَ عَلَيْهِمْ فَقَالَ: أَعْظَمَ اللَّهُ أَجْرَكُمْ وَغَفَرَ اللَّهُ لِصَاحِبِكُمْ، ثُمَّ مَضَى وَلَمْ يَقْعُدْ، قُلْنَا لَهُ: مَنْ يُعَزَّى؟ قَالَ: يُعَزَّى كُلُّ حَزِينٍ، فَقَدْ يَكُونُ الرَّجُلُ حَزِينًا لِصَاحِبِهِ وَأَخِيهِ أشَدَّ مِنْ حُزْنِ أَهْلِهِ عَلَيْهِ


Ibn-Khuzaymah-3013

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபா எனும் பள்ளிவாசலுக்குள் நுழைவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஅபா ஆலயத்தில் நுழைபவர் நன்மையில் நுழைந்து, தீமையிலிருந்து வெளியேறி மன்னிக்கப்பட்டவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ دَخَلَ الْبَيْتَ دَخَلَ فِي حَسَنَةٍ وَخَرَجَ مِنْ سَيِّئَةٍ مَغْفُورًا لَهُ»


Next Page » « Previous Page