Author: Abdul Hakkim

Tirmidhi-182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

182. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஹாஷிம் பின் உத்பா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் கூறினார்:

ஹஸன் பஸரீ, ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் சரியானதே. ஏனெனில் ஹஸன் பஸரீ ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸை செவியுற்றுள்ளார் என்று அலீ பின் அப்துல்லாஹ் (இப்னுல் மதீனீ) அவர்கள் கூறினார்.


“நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்” என்ற மேற்கண்ட ஸமுரா (ரலி) அவர்களின் ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

நபித்தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் அதிகமானோர், இந்த ஹதீஸின் படி “நடுத்தொழுகை அஸர் தொழுகையே” என்ற கருத்தில் உள்ளனர்.

ஆனால், ஸைத் பின் ஸாபித் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது லுஹர் தொழுகை” என்று கூறுகின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது ஃபஜ்ர் தொழுகை” என்று கூறுகின்றனர்.


ஹபீப் பின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் முஹம்மத் பின் ஸீரீன் அவர்கள்,

«صَلَاةُ الوُسْطَى صَلَاةُ العَصْرِ»


raavi-31168-உமர் பின் அபூஸலமா

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உமர் பின் அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப். عمر بن أبي سلمة بن عبد الرحمن بن عوف       உமர் பின் அபூஸலமா அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இவரைப் பற்றி ஷுஅபா, அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத், இப்னு ஸஃத், இப்னுல் மதீனீ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா போன்றோர்...

Musnad-Ahmad-24768

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24768. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“என் சகோதரியின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி காது மடலுக்கு மேல், தோள்பட்டைக்கு கீழ் இருந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் சகோதரியின் மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒரு மாதம் கழிந்துவிடும். அப்படி இருந்தும் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நெருப்பு மூட்டப்பட்டிருக்காது. (எப்போதாவது சிறிது இறைச்சி கிடைத்தாலே தவிர). அப்போது எங்கள் உணவு இரண்டு கருப்பானவைதான்: ஒன்று தண்ணீர். மற்றொன்று பேரீச்சம் பழம்.

எங்கள் வீட்டருகில் அன்சாரித் தோழர்களின் வீடுகள் இருந்தன. அவர்களுக்கு அல்லாஹ் எப்போதும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக! அவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆடுகளிலிருந்து நிறைய பால் அனுப்புவார்கள். அதிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் கிடைக்கும்.

என் (வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது.

” يَا ابْنَ أُخْتِي، كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوْقَ الْوَفْرَةِ، وَدُونَ الْجُمَّةِ، وَايْمُ اللَّهِ يَا ابْنَ أُخْتِي، إِنْ كَانَ لَيَمُرُّ عَلَى آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْرُ، مَا يُوقَدُ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَارٍ، إِلَّا أَنْ يَكُونَ اللُّحَيْمُ، وَمَا هُوَ إِلَّا الْأَسْوَدَانِ: الْمَاءُ وَالتَّمْرُ، إِلَّا أَنَّ حَوْلَنَا أَهْلَ دُورٍ مِنَ الْأَنْصَارِ جَزَاهُمُ اللَّهُ خَيْرًا فِي الْحَدِيثِ وَالْقَدِيمِ، فَكُلُّ يَوْمٍ يَبْعَثُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغَزِيرَةِ شَاتِهِمْ، يَعْنِي: فَيَنَالُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ اللَّبَنِ، وَلَقَدْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا فِي رَفِّي مِنْ طَعَامٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلَّا قَرِيبٌ مِنْ شَطْرِ شَعِيرٍ، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَيَّ لَا يَفْنَى، فَكِلْتُهُ فَفَنِيَ، فَلَيْتَنِي لَمْ أَكُنْ كِلْتُهُ، وَايْمُ اللَّهِ لَأَنْ كَانَ ضِجَاعُهُ مِنْ أَدَمٍ حَشْوُهُ لِيفٌ “،

وقَالَ الْهَاشِمِيُّ: بِغَزِيرَةِ شَاتِهِمْ، وَذَكَرَ نَحْوَهُ إِلَّا ضِجَاعُهُ


Musnad-Ahmad-10706

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

10706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஆடு சமைக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். (நபித்தோழர் ஒருவர்) அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதையும் அவர் கொடுத்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபித்தோழர், “அல்லாஹ்வின் தூதரே! ஆட்டுக்கு இரண்டு முன்னங்கால்கள் தானே உள்ளன!” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “(உறுதியாக) நீ அதைத் தேடியிருந்தால், (இன்னொன்றையும்) கண்டிருப்பாய்” என்று கூறினார்கள்.


أَنَّ شَاةً، طُبِخَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، فَقَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، ثُمَّ قَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ قَالَ: «أَمَا إِنَّكَ لَوِ الْتَمَسْتَهَا لَوَجَدْتَهَا»


Musnad-Ahmad-17576

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

துகைன் பின் ஸயீத் அல்கஸ்அமீ (ரலி) அவர்களின் ஹதீஸ்.

17576. துகைன் (ரலி) கூறியதாவது:

நாங்கள் நானூற்று நாற்பது பேர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவு கேட்டு வந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “எழுந்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கோடை காலத்திற்குப் போதுமான அளவு தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் வகீஉ கூறுகிறார்: அரபியரின் வழக்கில், கோடை காலம் என்பது நான்கு மாதங்கள் ஆகும்.)

நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எழுந்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! செவியேற்றோம், கட்டுப்பட்டோம்” என்று கூறிவிட்டு, எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். அவர்கள் எங்களை அவர்களுடைய அறைக்கு அழைத்துச் சென்றார்கள். தம் இடுப்பில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்தார்கள்.

துகைன் (ரலி) கூறுகிறார்:

அந்த அறையில், படுத்திருக்கும் ஒட்டகக் குட்டியைப் போன்ற பேரீச்சம் பழக் குவியல் இருந்தது. உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய அளவு எடுத்துக்கொண்டோம்.

أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ أَرْبَعُونَ وَأَرْبَعُ مِائَةٍ، نَسْأَلُهُ الطَّعَامَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «قُمْ فَأَعْطِهِمْ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا عِنْدِي إِلَّا مَا يَقِيظُنِي وَالصِّبْيَةَ؟ – قَالَ وَكِيعٌ: الْقَيْظُ فِي كَلَامِ الْعَرَبِ: أَرْبَعَةُ أَشْهُرٍ – قَالَ: «قُمْ فَأَعْطِهِمْ» قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، سَمْعًا وَطَاعَةً. قَالَ: فَقَامَ عُمَرُ وَقُمْنَا مَعَهُ، فَصَعِدَ بِنَا إِلَى غُرْفَةٍ لَهُ، فَأَخْرَجَ الْمِفْتَاحَ مِنْ حُجْزَتِهِ، فَفَتَحَ الْبَابَ. قَالَ دُكَيْنٌ: فَإِذَا فِي الْغُرْفَةِ مِنَ التَّمْرِ شَبِيهٌ بِالْفَصِيلِ الرَّابِضِ، قَالَ: شَأْنَكُمْ. قَالَ: فَأَخَذَ كُلُّ رَجُلٍ مِنَّا حَاجَتَهُ مَا شَاءَ، قَالَ: ثُمَّ الْتَفَتُّ وَإِنِّي لَمِنْ آخِرِهِمْ وَكَأَنَّا لَمْ نَرْزَأْ مِنْهُ تَمْرَةً


Ibn-Majah-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

556. ஒரு பயணி உளூச் செய்து, தம் இரு காலுறைகளையும் அணிந்து, பின்னர் உளூவை முறித்துவிட்டால், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம்; உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒரு இரவும் ஒரு பகலும் (மட்டும்) காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


أَنَّهُ «رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ، ثُمَّ أَحْدَثَ وُضُوءًا، أَنْ يَمْسَحَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»


raavi-45556-முஹாஜிர் பின் மக்லத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹாஜிர் பின் மக்லத்-அபூமக்லத், அபூகாலித் -  مهاجر بن مخلد - أبو مخلد ، أبو خالد இறப்பு: 131 - 140 தரம்: இயற்பெயர்: முஹாஜிர் தந்தை பெயர்: மக்லத் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூமக்லத், அபூகாலித் ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி- … இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 6. الجرح والتعديل - ابن أبي...

Akhbar-Asbahan-2278

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2278. “மூன்று விஷயங்களால்தான் நான் (மிகவும்) துன்பமடைந்தேன். ஒன்று, நான் நபி (ஸல்) அவர்களின் தோழராகவும், சிறிய பணியாளராகவும் இருந்தபோது, அவர்கள் மரணமடைந்தது. இரண்டாவது, உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது. மூன்றாவது, மிஸ்வதை (தோல் பையை) இழந்தது” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், “தோல் பையின் கதை என்ன?” என்று கேட்டோம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், அப்போது தான் தோல் பை பற்றிய முழு ஹதீஸையும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)


«مَا أُصِبْتُ إِلَّا بِثَلَاثَةٍ، بِمَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ صُوَيْحِبَهُ وَخُوَيْدِمَهُ، وَبِقَتْلِ عُثْمَانَ، وَالْمِزْوَدِ، فَقُلْنَا وَمَا قِصَّةُ الْمِزْوَدِ؟» فَذَكَرَ حَدِيثَ الْمِزْوَدِ بِطُولِهِ.

وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، أنا أَبُو طَالِبٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دِعْبِلٍ، ثنا سُوَيْدٌ بِهِ


Dalail-Annubuwwah-Bayhaqi-2363

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2363. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! உம்மிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், “என்னுடைய பையில் சிறிது பேரீச்சம்பழங்கள் உள்ளன” என்று கூறினேன். அவர்கள், “அதைக் கொண்டு வாரும்” என்றார்கள். நான் அந்தப் பையைக் கொண்டு வந்தேன். அவர்கள், “ஒரு விரிப்பை கொண்டு வாரும்” என்று கூறினார்கள். நான் விரிப்பைக் கொண்டு வந்து விரித்தேன். அவர்கள் தம் கையை உள்ளே விட்டு பேரீச்சம்பழங்களைப் பிடித்தார்கள். அப்போது அதில் இருபத்தி ஒரு பேரீச்சம்பழங்கள் இருந்தன. பிறகு, “பிஸ்மில்லாஹ்” என்று கூறி, ஒவ்வொரு பேரீச்சம்பழத்தையும் எடுத்து வைத்துக்கொண்டே சென்றார்கள். (எண்ணி முடித்ததும்) அந்தப் பழங்களை இப்படி ஒன்று சேர்த்தார்கள்.

பிறகு, “இன்னாரையும், அவருடைய நண்பர்களையும் அழையும்” என்றார்கள். அவர்கள் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மீண்டும், “இன்னாரையும், அவருடைய நண்பர்களையும் அழையும்” என்றார்கள். அவர்கள் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டுச் சென்றார்கள். மீண்டும், “இன்னாரையும், அவருடைய நண்பர்களையும் அழையும்” என்றார்கள். அவர்களும் வயிறு நிரம்ப

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَأَصَابَهُمْ عَوَزٌ مِنَ الطَّعَامِ، فَقَالَ: «يَا أَبَا هُرَيْرَةَ، عِنْدَكَ شَيْءٌ؟» قَالَ: قُلْتُ: شَيْءٌ مِنْ تَمْرٍ فِي مِزْوَدٍ لِي، قَالَ: «جِئْ بِهِ» قَالَ: فَجِئْتُ بِالْمِزْوَدِ، قَالَ: «هَاتِ نِطْعًا» ، فَجِئْتُ بِالنِّطْعِ فَبَسَطْتُهُ، فَأَدْخَلَ يَدَهُ فَقَبَضَ عَلَى التَّمْرِ فَإِذَا هُوَ إِحْدَى وَعِشْرُونَ تَمْرَةً، ثُمَّ قَالَ: «بِسْمِ اللهِ» ، فَجَعَلَ يَضَعُ كُلَّ تَمْرَةٍ وَيُسَمِّي، حَتَّى أَتَى عَلَى التَّمْرِ، فَقَالَ بِهِ هَكَذَا، فَجَمَعَهُ، فَقَالَ: «ادْعُ فُلَانًا وَأَصْحَابَهُ» ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَخَرَجُوا، ثُمَّ قَالَ: «ادْعُ فُلَانًا وَأَصْحَابَهُ» ، فَأَكَلُوا وَشَبِعُوا وَخَرَجُوا، ثُمَّ قَالَ: «ادْعُ فُلَانًا وَأَصْحَابَهُ» ، فَأَكَلُوا وَشَبِعُوا وَخَرَجُوا، وَفَضَلَ تَمْرٌ، قَالَ: فَقَالَ لِي: «اقْعُدْ فَقَعَدْتُ» ، فَأَكَلَ وَأَكَلْتُ، قَالَ: وَفَضَلَ تَمْرٌ، فَأَخَذَهُ فَأَدْخَلَهُ فِي الْمِزْوَدِ، فَقَالَ لِي: «يَا أَبَا هُرَيْرَةَ، إِذَا أَرَدْتَ شَيْئًا فَأَدْخِلْ يَدَكَ فَخُذْ وَلَا تَكْفَأْ فَيُكْفَأَ عَلَيْكَ» ، قَالَ: فَمَا كُنْتُ أُرِيدُ تَمْرًا إِلَّا أَدْخَلْتُ يَدِي فَأَخَذْتُ مِنْهُ خَمْسِينَ وَسْقًا فِي سَبِيلِ اللهِ، وَكَانَ مُعَلَّقًا خَلْفَ رِجْلَيَّ فَوَقَعَ فِي زَمَانِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ فَذَهَبَ


Next Page » « Previous Page