Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

260. நான் மாதவிலக்காக இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் தலையை என் மடியில் வைத்து படுத்து இருப்பார்கள். அப்போது அவர்கள் (குர்ஆன்) ஓதுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِي فَيَقْرَأُ وَأَنَا حَائِضٌ»


Abu-Dawood-259

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

259. நான் மாதவிலக்காக இருக்கும் போது இறைச்சி எலும்பைக் கடிப்பேன். பிறகு நான் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுப்பேன். அவர்கள் நான் வாய் வைத்த அதே இடத்திலேயே வாய் வைத்து சாப்பிடுவார்கள். நான் பானம் பருகி விட்டு, அதை அவர்களிடம் அளிப்பேன். நான் எந்த இடத்தில் பருகினேனோ அதே இடத்தில் அவர்களும் வாய் வைத்து பருகுவார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«كُنْتُ أَتَعَرَّقُ الْعَظْمَ وَأَنَا حَائِضٌ، فَأُعْطِيهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي فِيهِ وَضَعْتُهُ، وَأَشْرَبُ الشَّرَابَ فَأُنَاوِلُهُ فَيَضَعُ فَمَهُ فِي الْمَوْضِعِ الَّذِي كُنْتُ أَشْرَبُ مِنْهُ»


Abu-Dawood-258

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103

மாத விலக்கான பெண்ணுடன் உண்ணுதல், ஒட்டி உறவாடுதல்.

258. யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், பருகவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, 

மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அது ஓர் (அசுத்தமான) உபாதை. எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்களை (உடல் உறவு செய்வதை விட்டும்) விலகி இருங்கள் (அல் குர்ஆன் 2 : 222) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

(இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது) நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று பேசிக் கொண்டனர். அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகிய இருவரும்

أَنَّ الْيَهُودَ كَانَتْ إِذَا حَاضَتْ مِنْهُمُ الْمَرْأَةُ أَخْرَجُوهَا مِنَ الْبَيْتِ، وَلَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُشَارِبُوهَا وَلَمْ يُجَامِعُوهَا فِي الْبَيْتِ، فَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ: {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ} [البقرة: 222] قُلْ: هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ إِلَى آخِرِ الْآيَةِ،

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ، وَاصْنَعُوا كُلَّ شَيْءٍ غَيْرَ النِّكَاحِ». فَقَالَتِ الْيَهُودُ: مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ شَيْئًا مِنْ أَمْرِنَا إِلَّا خَالَفَنَا فِيهِ، فَجَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْر، وَعَبَّادُ بْنُ بِشْر إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْيَهُودَ تَقُولُ كَذَا وَكَذَا أَفَلَا نَنْكِحُهُنَّ فِي الْمَحِيضِ؟ فَتَمَعَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم حَتَّى ظَنَنَّا أَنْ قَدْ وَجَدَ عَلَيْهِمَا، فَخَرَجَا فَاسْتَقْبَلَتْهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ فِي آثَارِهِمَا فَسَقَاهُمَا، فَظَنَنَّا أَنَّهُ لَمْ يَجِدْ عَلَيْهِمَا


Abu-Dawood-257

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 102

கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்

257. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் (உடலுறவின் போது வழிகின்ற) இந்திரியம் தொடர்பாக ஆயிஷா (ரலி) குறிப்பிடும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கையளவு தண்ணீர் எடுத்து இந்திரியம் பட்ட இடத்தில் ஊற்றுவார்கள். பிறகு, ஒரு கையளவு நீர் எடுத்து அதில் (மறைவு உறுப்பில்) ஊற்றுவார்கள். என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவாஆ பின் ஆமிர் கிளையினரில் ஒருவர்.


فِيمَا يَفِيضُ بَيْنَ الرَّجُلِ وَالْمَرْأَةِ مِنَ الْمَاءِ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُ كَفًّا مِنْ مَاءٍ يَصُبُّ عَلَيَّ الْمَاءَ، ثُمَّ يَأْخُذُ كَفًّا مِنْ مَاءٍ، ثُمَّ يَصُبُّهُ عَلَيْهِ»


Abu-Dawood-256

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 101

மூலிகையைத் தேய்த்து கடமையான குளிப்பை நிறைவேற்றுதல்.

256. நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பின் போது தனது தலையை கித்மிய்யி என்ற மூலிகையினால் தேய்த்து கழுவுவார்கள். இதை கொண்டே போதுமாக்கிக் கொள்வார்கள். இதற்கு தண்ணீர் ஊற்றமாட்டார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).


«أَنَّهُ كَانَ يَغْسِلُ رَأْسَهُ بِالْخِطْمِيِّ وَهُوَ جُنُبٌ يَجْتَزِئُ بِذَلِكَ، وَلَا يَصُبُّ عَلَيْهِ الْمَاءَ»


Abu-Dawood-255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

255. தங்களுக்கு சவ்பான் (ரலி) அறிவித்தார்கள் என கடமையான குளிப்பு முறையை பற்றி எனக்கு ஜுபைர் பின் நுபைர் தீர்ப்பளித்தார். கடமையான குளிப்பு முறைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்பு கோரிய போது, ஒரு ஆண் தனது தலை(முடி)யை விரித்து விட வேண்டும். முடிகளின் அடிக்காம்புகளுக்கு நீர் சென்று அடையும் அளவுக்கு அதை அவர் கழுவ வேண்டும். ஒரு பெண் அவள் மீது (முடியை) அவிழ்த்து விடாமல் இருப்பது தவறில்லை. அவள் தமது இரு கைகளால் மூன்று தடவைகள் தண்ணீரை அள்ளி தலையில் விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : ஷுரைஹ் பின் அபீத்.


أَفْتَانِي جُبَيْرُ بْنُ نُفَيْرٍ عَنِ الْغُسْلِ مِنَ الجَنَابَة، أَنَّ ثَوْبَانَ حَدَّثَهُمْ أَنَّهُمُ اسْتَفْتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: «أَمَّا الرَّجُلُ فَلْيَنْشُرْ رَأْسَهُ فَلْيَغْسِلْهُ حَتَّى يَبْلُغَ أُصُولَ الشَّعْرِ، وَأَمَّا الْمَرْأَةُ فَلَا عَلَيْهَا أَنْ لَا تَنْقُضَهُ لِتَغْرِفْ عَلَى رَأْسِهَا ثَلَاثَ غَرَفَاتٍ بِكَفَّيْهَا»


Abu-Dawood-254

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

254. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர்களாகவும் கட்டாதவர்களாகவும் இருக்கும் போது எங்கள் மீது லிமாத் இருக்கும் நிலையிலேயே குளிப்போம்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(குறிப்பு : லிமாத் என்பது தலையில் இறுக கட்டியுள்ள துணியாகும்)


«كُنَّا نَغْتَسِلُ وَعَلَيْنَا الضِّمَادُ، وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحِلَّاتٌ وَمُحْرِمَاتٌ»


Abu-Dawood-253

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

253. எங்களில் ஒருத்திக்கு குளிப்பு கடமை ஏற்பட்டு விட்டால் அவள் மூன்று தடவை இரு கையளவு தண்ணீரை இவ்வாறு – (என்று ஆயிஷா (ரலி) அவர்கள்) தனது இரு கைகளையும் இணைத்துக் காட்டினார்கள் – தண்ணீரை அள்ளி தனது தலையில் ஊற்றும் போது ஒரு கையளவு தண்ணீரை எடுத்து (தலையின்) ஒரு பகுதியில் ஊற்றுவாள், இன்னொரு கையளவு தண்ணீரை இன்னொரு பக்கம் ஊற்றுவாள் என ஆயிஷா (ரலி) கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஸஃபிய்யா பின் ஷைபா.


«كَانَتْ إِحْدَانَا إِذَا أَصَابَتْهَا جَنَابَةٌ أَخَذَتْ ثَلَاثَ حَفَنَاتٍ – هَكَذَا تَعْنِي بِكَفَّيْهَا جَمِيعًا – فَتَصُبُّ عَلَى رَأْسِهَا، وَأَخَذَتْ بِيَدٍ وَاحِدَةٍ فَصَبَّتْهَا عَلَى هَذَا الشِّقِّ، وَالْأُخْرَى عَلَى الشِّقِّ الْآخَرِ»


Abu-Dawood-251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 100

(பெருந்தொடக்கை நீக்குவதற்காக) குளிக்கும் பெண் தன் பின்னல்முடியை அவிழ்க்க வேண்டுமா?

251. முஸ்லிம்களில் ஒரு பெண்மணி, (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நான் தலையை இறுக்கமாக பின்னிக் கொள்பவளாக இருக்கிறேன். கடமையான குளிப்பின் போது நான் (அதனை) அவிழ்த்து விட வேண்டுமா? என்று கேட்டார்.

(இந்தக் கேள்வியை உம்மு ஸலமா (ரலி) அவர்களே, நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக ஸுஹைர் அவர்களின் அறிவிப்பில் உள்ளது)

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ மூன்று முறை இரு உள்ளங்கை நிரம்ப தண்ணீரை எடுத்து தலை மீது  ஊற்று! இவ்வாறு ஊற்றுவதே உனக்குப் போதுமானதாகும். பிறகு, உனது உடலில் மற்ற பகுதியில் நீரை ஊற்றிக் கொள்! நீ அப்போது தூய்மையாகி விடுவாய்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)


أَنَّ امْرَأَةً مِنَ الْمُسْلِمِينَ – وَقَالَ زُهَيْرٌ أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي امْرَأَةٌ – أَشُدُّ ضُفُرَ رَأْسِي أَفَأَنْقُضُهُ لِلْجَنَابَةِ؟ قَالَ: «إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْفِنِي عَلَيْهِ ثَلَاثًا» – وَقَالَ زُهَيْرٌ: «تُحْثِي عَلَيْهِ ثَلَاثَ حَثَيَات مِنْ مَاءٍ» ثُمَّ تُفِيضِي عَلَى سَائِرِ جَسَدِكِ، فَإِذَا أَنْتِ قَدْ طَهُرْتِ


Next Page » « Previous Page