Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-208

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

208. அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டதாக இதன் அறிவிப்பாளர் மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். அதை மிக்தாத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவிய போது அவர் தனது ஆண்குறியையும் விரையையும் கழுவிக்கு கொள்ளவும் என்று பதிலளித்ததாகவும் அதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் அவர்கள் கூறுகின்றார்கள் : 

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அலீ மிக்தாத் ஆகியோர் வாயிலாக தன் தந்தை மூலம் ஹிஷாம் அவர்கள் அறிவிக்கின்றார். ஹிஷாம் அவர்களிடமிருந்து சவ்ரீ அவர்களும் ஒரு பெருங்குழுவினரும் அறிவிக்கின்றனர்.


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ لِلْمِقْدَادِ وَذَكَرَ نَحْوَ هَذَا قَالَ فَسَأَلَهُ الْمِقْدَادُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِيَغْسِلْ ذَكَرَهُ وَأُنْثَيَيْهِ»


Abu-Dawood-207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

207. ஒருவர் தன்னுடைய மனைவியை நெருங்கும் போது அதனால் அவருக்கு மதீ வெளிப்பட்டால் அவர் என்ன செய்யவேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளார் எனக்கு மனைவி என்பதால் அவர்களிடம் இதை நான் கேட்க வெட்கமடைகிறேன் எனக்கூறி அலீ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கும்படி சொன்னார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன்.

அவர்கள் உங்களில் ஒருவர் இதைக் கண்டால் தனது மர்ம உறுப்பில் நீர் தெளித்து தொழுகைக்கு உலூச் செய்வது போன்று அவர் உலூச் செய்வாராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : மிக்தாத் பின் அஸ்வத் (ரலி).


أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ [ص:54]، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، مَاذَا عَلَيْهِ؟ فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، قَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ»


Abu-Dawood-206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 83

மதீ (இச்சை நீர்) வெளிப்படுதல்.

206. எனக்கு (மதீ) இச்சை நீர் அதிகமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் என் முதுகு ஒடிகின்ற (குளிர் வேதனையினால்) அளவிற்கு அடிக்கடி குளித்து கொண்டிருப்பேன். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ அவ்வாறு வெளிப்படுவதை கண்டால் உனது ஆண்குறியை கழுவிக் கொள். பிறகு தொழுகைக்கு நீ உலூச் செய்வது போல் உலூச் செய்து கொள்க! உனக்கு இந்திரியம் வெளிப்பட்டால் குளித்துக் கொள்க என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அலீ (ரலி).


كُنْتُ رَجُلًا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ ذُكِرَ لَهُ – فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ»


Abu-Dawood-205

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 82

தொழும் போது உளூ நீங்கி விடுதல்.

205. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் காற்று விட்டால் அவர் (தொழுகையை விட்டுவிட்டு) உலூச் செய்து, திரும்பத் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ، فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ وَلْيُعِدِ الصَّلَاةَ»


Abu-Dawood-204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 81

கழிவுப் பொருளை காலால் மிதித்தால் ?

204. கழிவுப்பொருட்கள் காலில் மிதிப் பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம் (தொழும் போது) எங்களது தலை முடி, ஆடை (தரையில் படுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸுத் (ரலி).


«كُنَّا لَا نَتَوَضَّأُ مِنْ مَوْطِئٍ وَلَا نَكُفُّ شَعْرًا وَلَا ثَوْبًا»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ: إِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ فِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: وَقَالَ هَنَّادٌ، عَنْ شَقِيقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ


Abu-Dawood-203

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

203. ஆசன வாயின் கட்டுப்பாடு கண்களாகும். யார் உறங்கி விட்டாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«وِكَاءُ السَّهِ الْعَيْنَانِ، فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ»


Abu-Dawood-202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்வார்கள். பிறகு உலூச் செய்யாமலேயே குறட்டை விட்டவாறு (ஸஜ்தாவில்) உறங்குவார்கள். பிறகு எழுந்து தொழுவார்கள். அவர்களிடம் நான் உறங்கிய நீங்கள் உலூச் செய்யாமல் தொழுதீர்களே? என்று வினவினேன். படுத்து உறங்கியவர்கள் தான் உலூச் செய்ய வேண்டும் என்று அவர்கள் பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

உஸ்மான், ஹன்னாத் ஆகிய அறிவிப்பாளர்கள் ஏனெனில் (ஒருவர்) படுத்து உறங்கும் போது மூட்டிணைப்புகள் தளர்வுறுகின்றன. (அதனால் காற்று வெளியேற வாய்ப்புண்டு) என்று கூடுதலாக அறிவிக்கின்றனர்.


இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றனர் :

படுத்து உறங்கியவர் தான் உலூச் செய்ய úண்டும் என்ற அவரது அறிவிப்பு முன்கரான நிராகரிக்கப்பட்ட ஹதீஸ் ஆகும். கதாதாவிடமிருந்து யசீத் அபூகாரித் தாலனியை தவிர வேறு யாரும் இதை அறிவிக்கவில்லை.

இதன் ஆரம்பத்தை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களிடமிருந்து பெருங்குழுவினரே அறிவிக்கின்றனர்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْجُدُ وَيَنَامُ وَيَنْفُخُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي وَلَا يَتَوَضَّأُ، قَالَ: فَقُلْتُ لَهُ: صَلَّيْتَ وَلَمْ تَتَوَضَّأْ وَقَدْ نِمْتَ، فَقَالَ: «إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا»، زَادَ عُثْمَانُ، وَهَنَّادٌ: فَإِنَّهُ إِذَا اضْطَجَعَ اسْتَرْخَتْ مَفَاصِلُهُ،


Abu-Dawood-201

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

201. இஷா தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டது. அப்போது ஒருவர் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொன்னார். அவர்கள் அவரிடம் மக்கள் அல்லது மக்களில் சிலர் சிறு துயில் கொள்ளும் வரை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் சாபித் அல்புனானீ ஆவார். இவர் உலூவைப்பற்றி இதில் குறிப்பிடவில்லை.


أُقِيمَتْ صَلَاةُ الْعِشَاءِ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي حَاجَةً، «فَقَامَ يُنَاجِيهِ حَتَّى نَعَسَ الْقَوْمُ، أَوْ بَعْضُ الْقَوْمِ، ثُمَّ صَلَّى بِهِمْ وَلَمْ يَذْكُرْ وُضُوءًا»


Abu-Dawood-200

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இஷாவை (உறக்கத்தினால்) தங்களது தலைகள் சரிந்து விழும் அளவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் உலூச் செய்யாமலேயே தொழுவார்கள். 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் (இஷா தொழுகையை எதிர்பார்த்து) தலைகள் சரிந்து விழும் வரை தூங்கிக் கொண்டிருப்போம் என்று அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் கூடுதலாக அறிவிக்கின்றார். 

இந்த ஹதீஸை இப்னு அபீ அரூபா என்பவர் கதாதா இடமிருந்து வேறோரு உரைநடையில் அறிவிக்கின்றார்.


«كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَ الْعِشَاءَ الْآخِرَةَ حَتَّى تَخْفِقَ رُءُوسُهُمْ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ»


Abu-Dawood-199

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 80

உறங்குவதால் உளூ நீங்குமா ?

199. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (ஒரு பணியில்) முழு ஈடுபாடாக இருந்து விட்டார்கள். இதனால் அவர் இஷாவை பிற்படுத்தி விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் பள்ளியில் நாங்கள் உறங்கினோம். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்று உங்களைத் தவிர தொழுகைக்காக காத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شُغِلَ عَنْهَا لَيْلَةً فَأَخَّرَهَا حَتَّى رَقَدْنَا فِي الْمَسْجِدِ، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ اسْتَيْقَظْنَا، ثُمَّ رَقَدْنَا، ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَقَالَ: «لَيْسَ أَحَدٌ يَنْتَظِرُ الصَّلَاةَ غَيْرُكُمْ»


Next Page » « Previous Page