Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

177. உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது பின் துவாரத்தில் ஏதோ ஏற்பட்டதாக எண்ணி உளூ முறிந்துவிட்டதா? இல்லையா? என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், காற்றின் சத்தத்தை கேட்காதவரை அல்லது துர்நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَوَجَدَ حَرَكَةً فِي دُبُرِهِ، أَحْدَثَ أَوْ لَمْ يُحْدِثْ، فَأَشْكَلَ عَلَيْهِ فَلَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Abu-Dawood-176

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 68

ஹதஸ் ஆகிவிட்டோமோ என்று ஐயம் கொள்தல்.

176. ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிவது போன்று உணர்வது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் காற்று பிரிந்த சப்தத்தை அல்லது அதன் நாற்றத்தை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


شُكِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلَاةِ حَتَّى يُخَيَّلَ إِلَيْهِ، فَقَالَ: «لَا يَنْفَتِلْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Abu-Dawood-175

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

175. நபி (ஸல்) அவர்கள் ஒருவரை தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். அவருடைய மேற்பாதத்திற்கு மேல் திர்ஹம் (நாணயம்) அளவிற்கு நீர்படாமல் வெண்மை தெரிந்தது. அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உலூவையும் தொழுகையையும் மீட்டுமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : நபித்தோழர்களில் ஒருவர்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّ وَفِي ظَهْرِ قَدَمِهِ لُمْعَةٌ قَدْرُ الدِّرْهَمِ، لَمْ يُصِبْهَا الْمَاءُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الْوُضُوءَ وَالصَّلَاةَ»


Abu-Dawood-173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 67

உறுப்பில் ஒரு பகுதி நனையாமல் விடுபடுதல்.

173. நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் உலூச் செய்து விட்டு தனது பாதங்களில் ஒரு நக அளவு நனையாமல் விட்டவராக வந்தார். அவரை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள ஜரீர் பின் ஹாசிம் என்பாரிடமிருந்து அறிய முடியவில்லை. இதை இதே வரிசையில் இடம் பெற்றுள்ள இப்னு வஹப் மட்டுமே அறிவிக்கின்றார்.

நீர் திரும்பிச் சென்று உமது உலூவை அழகுறச் செய்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் வாயிலாக மஃகல் அவர்களிடமிருந்து இதைப் போன்று அறிவிக்கப்படுகின்றது.


أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ تَوَضَّأَ وَتَرَكَ عَلَى قَدَمِهِ مِثْلَ مَوْضِعِ الظُّفْرِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ»،


Abu-Dawood-172

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளின் போது ஒரே உலூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள் நீங்கள் இது வரை செய்திராத ஒன்றை இன்று செய்யக் காண்கின்றேனே? (ஏன்) என்று வினவியதும் நான் வேண்டுமென்று தான் செய்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ خَمْسَ صَلَوَاتٍ بِوُضُوءٍ وَاحِدٍ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقَالَ لَهُ عُمَرُ: إِنِّي رَأَيْتُكَ صَنَعْتَ الْيَوْمَ شَيْئًا لَمْ تَكُنْ تَصْنَعُهُ، قَالَ: «عَمْدًا صَنَعْتُه»


Abu-Dawood-171

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 66

ஒருவர் ஒரே உளூவில் பல தொழுகை தொழுதல்.

171. நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் உலூவைப் பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்வார்கள். ஆனால் நாங்கள் ஒரே உலூவில் பல தொழுகைகளை தொழுது கொள்வோம் என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : அபூ அஸத் பின் அம்ர் (ரலி).


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ الْوُضُوءِ، فَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، وَكُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ»


Abu-Dawood-169

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 65

உளூச் செய்த பின் கூறவேண்டியவை.

169. நாங்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். எங்களுடைய ஒட்டகங்களை மேய்ப்பதற்கு நாங்கள் முறை வைத்துக் கொள்வோம். எனது மேய்ப்பு முறை வந்ததும், மாலையில் நான் அவற்றை (தொழுவத்திற்கு) ஓட்டி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களை அடைந்தேன். அப்போது அவர்கள் கூற நான் செவியுற்றேன், உங்களில் ஒருவர் உலூச் செய்யும் போது அவ்வுலூவை அவர் அழகுறச் செய்து பின்பு (தொழுவதற்கு) நின்று தனது அகத்தாலும், முகத்தாலும் அவர் ஒருமுகப்பட்டு இரண்டு ரக்அத்துகளை தொழுதால் அவருக்கு சுவனம் நிச்சயமாகி விடும். அப்போது ஆஹா என்ன அருமை என்றேன். ஆச்சர்ய மேலீட்டால் சப்புக் கொட்டினேன். எனக்கு முன்பிருந்த ஒருவர் உக்பாவே! இதற்கு முன்பு ஆற்றிய உரை இதை விட அருமை என்று கூறினார். (யார் என்று) பார்த்தேன். அவர் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தான்! அபஹப்ஸ் அவர்களே! அது என்ன உரை என்று கேட்டேன். நீ வருவதற்கு சற்று முன்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அவர்கள் கூறலானார்கள்.

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُدَّامَ أَنْفُسِنَا، نَتَنَاوَبُ الرِّعَايَةَ – رِعَايَةَ إِبِلِنَا – فَكَانَتْ عَلَيَّ رِعَايَةُ الْإِبِلِ، فَرَوَّحْتُهَا بِالْعَشِيِّ، فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ يَخْطُبُ النَّاسَ، فَسَمِعْتُهُ يَقُولُ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَقُومُ فَيَرْكَعُ رَكْعَتَيْنِ، يُقْبِلُ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ، إِلَّا قَدْ أَوْجَبَ»، فَقُلْتُ: بَخٍ بَخٍ، مَا أَجْوَدَ هَذِهِ، فَقَالَ رَجُلٌ مِنْ بَيْنِ يَدَيَّ الَّتِي قَبْلَهَا: يَا عُقْبَةُ، أَجْوَدُ مِنْهَا، فَنَظَرْتُ فَإِذَا هُوَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقُلْتُ: مَا هِيَ يَا أَبَا حَفْصٍ؟ قَالَ: إِنَّهُ قَالَ آنِفًا قَبْلَ أَنْ تَجِيءَ: ” مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يَقُولُ حِينَ يَفْرُغُ مِنْ وُضُوئِهِ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ، يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ “، قَالَ مُعَاوِيَةُ: وَحَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ،


Abu-Dawood-168

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

168. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள். பிறகு உலூச் செய்து விட்டு தனது மர்ம உறுப்பில் நீர் தெளிப்பார்கள்.

அறிவிப்பவர் : தன் தந்தை வாயிலாக ஹகம் அல்லது இப்னுல் ஹகம் அவர்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ»


Next Page » « Previous Page