Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

188. ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர் களிடம் விருந்தாளியாக தங்கினேன். அவர் கள் சிறிதளவு இறைச்சியை வறுவல் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கத்தியை எடுத்து அதை எனக்காக வெட்டத் துவங் கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர் கள் வந்து அவர்களுக்கு தொழுகையை அறிவித்தார்கள். உடனே அவர்கள் கத்தியைப் போட்டு விட்டு இவருக்கு என்ன அவசரம்? அவரது கைகளில் மண் படியட்டும் என்று கூறி தொழலானார்கள். 

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள்

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அன்பாரி அவர்கள் எனக்கு மீசை அதிகமாக வளர்ந்திருந்தது. அதை எனக்கு ஒரு பற்குச்சியை (அளவாக) வைத்து (அதற்கு மேற்பட்டதை) கத்தரித்து விட்டார்கள் என்றோ அல்லது பற்குச்சியை (அளவாக) வைத்து உனக்கு நான் அதை கத்தரிப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை கூடுதலாக அறிவிக்கிறார்.


ضِفْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ، وَأَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ، قَالَ: فَجَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ، قَالَ: فَأَلْقَى الشَّفْرَةَ، وَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ» وَقَامَ يُصَلِّ، زَادَ الْأَنْبَارِيُّ: «وَكَانَ شَارِبِي وَفَى فَقَصَّهُ لِي عَلَى سِوَاكٍ» أَوْ قَالَ: «أَقُصُّهُ لَكَ عَلَى سِوَاكٍ؟»


Abu-Dawood-187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75

சமைத்த உணவை சாப்பிடுவதால் உளூ நீங்குமா ?

187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டின் தொடைப்பகுதியை சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ كَتِفَ شَاةٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Abu-Dawood-186

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 74

இறந்தவற்றை தொட்டால் உளூ நீங்குமா ?

186. தன் இரு பக்கங்களிலும் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீ னாவின் மேட்டுப்பகுதியிலிருந்து கடைத் தெருவிற்குள் நுழைந்தார்கள். செத்த, இரு காதுகளும், இணைந்திருக்கும் ஒரு ஆட்டுக் குட்டிக்கருகில் சென்ற போது அதை அதன் காதை பிடித்து தூக்கி பிறகு, இதை உங்களில் யார் விரும்புவார் என வினவினார்கள். 

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَيْهِ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ» وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72

ஒட்டக இறைச்சியை உண்ணுவதால் உளூச் செய்தல்.

184. ஒட்டகை இறைச்சியை சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், அதை சாப்பிட்டால் உளூச் செய்யுங்கள் என்று பதிலளித்தார்கள். ஆட்டிறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்ய வேண்டுமா? என்று வினவப்பட்ட போது அதற்காக நீங்கள் உளூச் செய்ய வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.

ஒட்டகைத் தொழுவங்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது ஒட்டகைத் தொழுவங்களில் தொழாதீர்கள். காரணம் அவை (ஒட்டகங்கள்) ஷைத்தான்களின் வகையாகும் என்று பதிலளித்தார்கள். ஆட்டுக் கொட்டில்களில் தொழலாமா? என்று வினவப்பட்ட போது அவற்றில் நீங்கள் தொழுங்கள். அவை (ஆடுகள்) அபிவிருத்திக்குரியவை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ، فَقَالَ: «تَوَضَّئُوا مِنْهَا» وَسُئِلَ عَنْ لُحُومِ الْغَنَمِ، فَقَالَ: «لَا تَوَضَّئُوا مِنْهَا»، وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَبَارِكِ الْإِبِلِ، فَقَالَ: «لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإِبِلِ، فَإِنَّهَا مِنَ الشَّيَاطِينِ» وَسُئِلَ عَنِ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ، فَقَالَ: «صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ»


Abu-Dawood-182

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 71

ஆண்குறியை தொடுவதற்கு அனுமதி.

182. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது கிராமவாசி போல் ஒருவர் வந்தார். அல்லாஹ்வின் நபி அவர்களே! ஒருவர் உளூச் செய்த பிறகு தனது ஆண்குறியை தொடுவது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுவும் அவரது (உடலிலுள்ள) ஒரு உறுப்புதானே?” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி) 

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஹிஷாம் பின் ஹஸ்ஸான், ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷுஅபா, இப்னு உயைனா, ஜரீர் அர்ராஸீ ஆகியோர், முஹம்மது பின் ஜாபிர் —> கைஸ் பின் தல்க் —> தல்க் பின் அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ؟ فَقَالَ: «هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْهُ»، أَوْ قَالَ: «بَضْعَةٌ مِنْهُ»


Abu-Dawood-181

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 70

ஆண்குறியை தொடுவதால் உளூ நீங்குமா ?

181. நான் மர்வா பின் அல்ஹகம் என்பாரிடம் சென்றிருந்தேன். எதனால் உலூ நீங்கும் என்பதை அவரிடம் விவாதித்தோம். ஆண்குறியை தொடுவதினால் உலூ முறியும் என்று மர்வான் கூறினார். இதை நான் (இதுவரை) அறியவில்லையே என்றேன். அதற்கு மர்வான், யார் தனது ஆண்குறியை தொடுகின்றாரோ அவர் உலூச் செய்து கொள்வாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, தான் செவியுற்றதாக புஸ்ரா பிஸ்த் சப்வான் எனக்கு அறிவித்தார்கள் என்று சொன்னார்.

அறிவிப்பவர் : உர்வா பின் ஜுபைர் அவர்கள்.


دَخَلْتُ عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَذَكَرْنَا مَا يَكُونُ مِنْهُ الْوُضُوءُ، فَقَالَ مَرْوَانُ: وَمِنْ مَسِّ الذَّكَرِ؟ فَقَالَ عُرْوَةُ: مَا عَلِمْتُ ذَلِكَ، فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِي بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ»


Abu-Dawood-179

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

179. நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டு பிறகு உலூச் செய்யாமல் தொழச் சென்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்

இதை அன்னையாரிடமிருந்து அறிவிக்கின்ற உர்வா அவர்கள் தெரிவிக்கின்றார் உங்களைத் தவிர அது வேறு யாராகவும் இருக்க முடியாதே என்று நான் வினவியதற்கு அன்னையார் அவர்கள் சிரித்தார்கள்.

இமாம் அவூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இவ்வாறே இதை சாயிதா என்பவரும், அப்துல் ஹமீது அல்ஹிம்மானி அவர்களும் சுலைமான் அல்அஃமஷ் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ عُرْوَةُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ


Abu-Dawood-178

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 69

முத்தமிட்டால் உளூ முறியுமா ?

178. நபி (ஸல்) அவர்கள் என்னை முத்தமிட்டார்கள். அவர்கள் உலூச் செய்யவில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : இந்த ஹதீஸ் முர்ஸலாகும். காரணம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்ற இப்றாகீம் என்பார் அன்னையாரிடமிருந்து எதையும் செவியுறவில்லை. அபூ அஸ்மா என்று இடுகுறிப் பெயரால் அழைக்கப்படும் இப்றாகீம் அத்தைமூ என்பார் நாற்பது வயதை அடையும் முன்பே இவர் மரணித்து விட்டார் என்று இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறே இந்த ஹதீஸை பர்யாபீ அவர்களும் மற்றவர்களும் அறிவிக்கின்றனர் என்று இமாம் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَهَا وَلَمْ يَتَوَضَّأْ»


Next Page » « Previous Page