Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-116

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

116. நான்‏ ‏அலீ‏ (‏ரலி‏) ‏அவர்களை‏ ‏உலூச்‏ ‏செய்யக்‏ ‏கண்டேன்‏ ‏என்று‏ ‏அபூஹய்யா‏ ‏அவர்கள்‏ ‏அறிவிக்கும்‏ ‏போது‏ ‏அவர்கள்‏ ‏எல்லா‏ ‏உறுப்புக்களையும்‏ ‏மும்முறை‏ ‏கழுவி‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏என்று‏ ‏குறிப்பிடுகிறார்கள்‏. ‏பின்னர்‏ ‏அவர்கள்‏ ‏தலையை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பின்னர்‏ ‏தம்‏ ‏இரு‏ ‏கால்களை‏ ‏கரண்டைக்‏ ‏கால்வரை‏ ‏கழுவினார்கள்‏. ‏பின்னர், நான்‏ ‏உங்களுக்கு‏ ‏அல்லாஹ்வின்‏ ‏தூதர்‏ (‏ஸல்‏) ‏அவர்களின்‏ ‏செய்யும்‏ ‏முறையை‏ ‏காண்பிக்க‏ ‏விரும்பினேன்‏ ‏என்றும்‏ ‏சொன்னார்கள்‏.‏


رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَذَكَرَ وُضُوءَهُ كُلَّهُ ثَلَاثًا ثَلَاثًا»، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّمَا أَحْبَبْتُ أَنْ أُرِيَكُمْ طُهُورَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

115. அலீ‏ (‏ரலி‏) ‏அவர்களை‏ ‏உலூச்‏ ‏செய்யக்‏ ‏கண்டேன்‏. ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்யும்‏ ‏போது‏ ‏முகத்தை‏ ‏மூன்று‏ ‏முறை‏ ‏கழுவினார்கள்‏. ‏தலையை‏ ‏ஒரு‏ ‏முறை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பின்னர்‏ ‏இப்படித்‏ ‏தான்‏ ‏ரஸுல்‏ (‏ஸல்‏) ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏எனவும்‏ ‏அப்துர்‏ ‏ரஹ்மான்‏ ‏பின்‏ ‏அபூலைலா‏ (‏ரலி‏) ‏அறிவிக்கிறார்கள்‏.‏


رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً»، ثُمَّ قَالَ: «هَكَذَا تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

114. மேற்கண்ட கருத்துள்ள ஹதீஸே இங்கும் இடம் பெற்றுள்ளது. அதில் அலீ (ரலி) அவர்கள் ‎தமது தலைக்கு நீர் சொட்டு சொட்டாக வழியாத அளவுக்கு மஸஹ் செய்தார்கள் என்று ‎அதிக விளக்கம் இடம் பெற்றுள்ளது.‎


وَسُئِلَ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ: «وَمَسَحَ عَلَى رَأْسِهِ حَتَّى لَمَّا يَقْطُرْ، وَغَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Abu-Dawood-113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

113. அலீ (ரலி) அவர்களுக்கு ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அமர்ந்து ‎இருந்தார்கள். பின்னர் தண்ணீர் கூசா ஒன்று கொண்டு வரப்பட்டது. தனது கைகளை ‎மூன்று முறை கழுவினார்கள். பிறகு ஒரு கை நீராலேயே வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று அப்து கைர் அறிவித்து விட்டு மேற்கண்ட ‎ஹதீஸையே அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு : நஸயீயிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎


رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «أُتِيَ بِكُرْسِيٍّ فَقَعَدَ عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِكُوزٍ مِنْ مَاءٍ فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ مَعَ الِاسْتِنْشَاقِ بِمَاءٍ وَاحِدٍ»، وَذَكَرَ الْحَدِيثَ


Abu-Dawood-112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

112. அலீ (ரலி) அவர்கள் சுப்ஹு தொழுது விட்டு (கூபாவிலுள்ள இடமான) ரஹ்பா விற்கு ‎சென்று தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். அப்போது ஒரு சிறுவர் தண்ணீர் ‎பாத்திரத்தையும், கை கழுவும் தட்டையும் கொண்டு வந்தார். அவர்கள் தமது வலது ‎கையினால் பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு தமது இடது கைக்கு தண்ணீர் ஊற்றி தமது ‎இரு முன்கை களையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலது கையை ‎பாத்திரத்தில் நுழைத்து மூன்று தடவை வாய் கொப்பளித் தார்கள். மும்முறை நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கை சுத்தம் செய்தார்கள் என்று அறிவித்துவிட்டு (மேற்கண்ட) அபூ அவானா ‎ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவிக்கிறார். பிறகு தலையின் முன் நெற்றி யிலிருந்து ‎தலையின் பின்புறம் வரை மஸஹ் செய்தார்கள். பின்னர் மேற்கண்ட ஹதீஸைப் ‎போன்றே அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு : நஸயீ , திர்மிதீ, அஹ்மது ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளது.)‎


صَلَّى عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ الْغَدَاةَ، ثُمَّ دَخَلَ الرَّحْبَةَ فَدَعَا بِمَاءٍ فَأَتَاهُ الْغُلَامُ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ، قَالَ: «فَأَخَذَ الْإِنَاءَ بِيَدِهِ الْيُمْنَى، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُسْرَى، وَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ثَلَاثًا وَاسْتَنْشَقَ ثَلَاثًا»، ثُمَّ سَاقَ قَرِيبًا مِنْ حَدِيثِ أَبِي عَوَانَةَ، قَالَ: «ثُمَّ مَسَحَ رَأْسَهُ مُقَدَّمَهُ وَمُؤَخِّرَهُ مَرَّةً» ثُمَّ سَاقَ الْحَدِيثَ نَحْوَهُ


Abu-Dawood-111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

111. அலீ (ரலி) அவர்கள் தொழுது முடித்து விட்டு எங்களிடம் வந்தார்கள். தண்ணீர் கொண்டு ‎வரச் சொன்னார்கள். அவர்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் தண்ணீர் கொண்டு ‎வருமாறு சொல்வது நமக்கு (உலூவின் முறைகளைக்) கற்றுத் தருவதற்காகவே என ‎நாங்கள் பேசிக்கொண்டோம். தண்ணீருள்ள பாத்திரமும் (உலூச் செய்து நீரைப் ‎பிடிப்பதற்காக) ஒரு தட்டும் கொண்டு வரப்பட்டது. அப்பாத்திரத்திலிருந்து தனது வலது ‎கையில் தண்ணீர் ஊற்றி தமது இரு கைகளையும் மும்முறை கழுவினார்கள். பிறகு ‎மூன்று தடவை வாய் கொப்பளித்து மூன்று முறை நாசிக்கு தண்ணீர் செலுத்தி மூக்கை ‎சுத்தம் செய்தார்கள். அப்போது, தான் அள்ளுகிற ஒருகை நீரிலேயே வாய் கொப்பளித்து ‎மூக்கையும் சுத்தம் செய்தார்கள். (இரண்டிற்கும் தனித்தனியாக மூன்றுமுறை நீர் ‎அள்ளவில்லை) பிறகு தமது முகத்தை மூன்று தடவையும், வலது கையை மூன்று ‎தடவையும், இடது கையை மூன்று தடவையும் கழுவினார்கள்.‎

பிறகு பாத்திரத்தில் கையை விட்டு தலைக்கு ஒரே ஒரு முறை மஸஹ் செய்தார்கள். பிறகு ‎வலது காலை மூன்றுமுறையும் இடது காலை மூன்று முறையும் கழுவி பின்னர், ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உலூச் செய்யும் முறையை அறிய ‎ஆவலுள்ளவருக்கு

أَتَانَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ صَلَّى فَدَعَا بِطَهُورٍ، فَقُلْنَا مَا يَصْنَعُ بِالطَّهُورِ وَقَدْ صَلَّى مَا يُرِيدُ، إِلَّا لِيُعَلِّمَنَا، فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ وَطَسْتٍ «فَأَفْرَغَ مِنَ الْإِنَاءِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا، فَمَضْمَضَ وَنَثَرَ مِنَ الْكَفِّ الَّذِي يَأْخُذُ فِيهِ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الشِّمَالَ ثَلَاثًا، ثُمَّ جَعَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى ثَلَاثًا، وَرِجْلَهُ الشِّمَالَ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَعْلَمَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ هَذَا»،


Abu-Dawood-107

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

107. மேற்கண்ட ஹதீஸ் இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் வாய் கொப்பளித்தலும், நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கைச் சிந்துவதும் கூறப்படவில்லை. எனினும் தலைக்கு மூன்று முறை ‎மஸஹ் செய்தார்கள். தமது இரு கால்களையும் மும்முறை கழுவினார்கள். பின்னர் நபி ‎‎(ஸல்) அவர்களை இவ்வாறு உலூச் செய்வதைக் கண்டேன் என்றும் யார் இதற்கு ‎குறைவாக உலூச் செய்தாலும் அது அவருக்குப் போதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் ‎கூறியதாகவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். பின்னர் இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய ‎விபரம் இடம் பெறுவில்லை. இதை ஹும்ரான் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎


وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ دُونَ هَذَا كَفَاهُ» وَلَمْ يَذْكُرْ أَمْرَ الصَّلَاةِ


Abu-Dawood-105

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

105. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் மூன்று முறை (கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக்) கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது அல்லது அவரது கை இரவில் எங்கெங்கு ‎உலவியது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ، أَوْ أَيْنَ كَانَتْ تَطُوفُ يَدُهُ»


Abu-Dawood-103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49

கைகளை கழுவதற்கு முன் பாத்திரத்தில் நுழைத்தல்.

103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் மூன்று முறை (கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக்) கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

‎(குறிப்பு: இந்த செய்தி புகாரீ, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா, முஅத்தா ஆகிய நூல்களிலும் ‎இடம் பெற்றுள்ளது. புகாரியில் மூன்று முறை என்ற வார்த்தை இல்லை.)‎


«إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Next Page » « Previous Page