Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-102

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

102. யார் உளூச் செய்யும் போது அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ அவருக்கு உளூ ‎இல்லை என்ற நபி மொழியின் விளக்கமாவது : ஒருவர் (தொழுகைக்கு) உளூச் செய்வார், ‎கடமையான குளிப்பின் போது கடமையான குளிப்புக்காக குளிக்கிறேன் எனவும் மனதில் ‎எண்ணி இருக்கமாட்டார் என்பது தான் என ரபீஆ (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு : இது ரபீஆ (ரலி) அவர்களின் கருத்தே தவிர நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.)‎


أَنَّ تَفْسِيرَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ


Abu-Dawood-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 48

உளூச் செய்யத் துவங்கும் போது (பிஸ்மி) அல்லாஹ்வின் பெயர் கூறுதல்.

101. யார் உளூவின் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையோ அவருக்கு உலூ ‎இல்லை, யாருக்கு உலூ இல்லையோ அவருக்கு தொழுகை இல்லை என்று ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மது, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ, திர்மிதீ ஆகிய நூல்களிலும் ‎இது இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறும் யஃகூப்பின் சலமா ‎தனது தந்தையிடம் செவியுற்றதில்லை. அவரது தந்தை அபூஹுரைரா (ரலி) ‎அவர்களிடம் செவியுற்றதில்லை. எனவே இது தொடர்பு துண்டிக்கப்பட்ட ‎செய்தியாகிறது.)‎

மேலும் இந்த கருத்தில் பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய ஒரு ‎ஹதீஸைக்கூட நான் அறியவில்லை என்று இமாம் அஹ்மது பின் ஹன்பல் ‎குறிப்பிட்டுள்ளனர். எனினும் பொதுவாக எல்லாக் காரியங்களையும் பிஸ்மில்லா ‎கூறியே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஹதீஸின் அடிப்படையில் உலூவுக்கும் ‎பிஸ்மில்லா கூற வேண்டும் என்று கருத இடம் உள்ளது. மேலும் நபித்தோழர்கள் ‎சிலர் உலூச் செய்வதற்காக தண்ணீரைத் தேடினார்கள்.

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ»


Abu-Dawood-100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

100. எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது ‎நாங்கள் அவர்களுக்கு உலூச் செய்ய பித்தளை பாத்திரத்தில் நீர் வழங்கினோம். ‎அவர்கள் உலூச் செய்தார்கள் என அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎


«جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ»


Abu-Dawood-98

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 47

பித்தளை பாத்திரத்தில் உளூச் செய்தல்.

98. நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பித்தளைப் பாத்திரத்தில் ‎குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَوْرٍ مِنْ شَبَهٍ»


Abu-Dawood-97

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 46

உளூவை பூரணமாகச் செய்தல்.

97. தங்களது குதிகால்களில் தண்ணீர் படாமல் தோற்றமளித்த ஒரு கூட்டத்தாரை பார்த்து ‎‎(உலூச் செய்யும் போது நன்றாக நனையாத) குதிகால்களுக்கு நரகம் என்ற நாசம் ‎உண்டாவதாக! (இதை அஞ்சி) உலூவை பூரணமாக செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இதை முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, தாரகுத்னீ, புகாரி ஆகியோரும் ‎அறிவித்துள்ளார்கள்.)‎


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ، فَقَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»


Abu-Dawood-96

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 45

தண்ணீரை விரயமாக்குதல்.

96. யா அல்லாஹ்! நான் சுவனத்தில் நுழைந்ததும் அதன் வலப்பக்கத்தில் எனக்கு ஒரு ‎வெள்ளைமாளிகையை அருள்வாயாக என உன்னிடம் வேண்டுகிறேன் என்று தனது ‎மகன் பிரார்த்தனை செய்வதை செயியுற்ற அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) ‎அவர்கள் தமது மகனை நோக்கி, என்னருமை மகனே! நீ அல்லாஹ்வின் சுவனத்தை ‎கேள். (பிரார்த்தனையில் வரம்பு மீறாதே) ஏனெனில் சுத்தம் செய்வதிலும் ‎பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறும் ஒரு கூட்டம் எனது இந்த சமுதாயத்தில் இனி ‎உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என அறிவுரை ‎வழங்கினார்கள்.‎

‎(குறிப்பு: இது அஹ்மது, இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு ‎முகப்பல் அவர்களின் மகன் என்பவர் யார் என தெரியாதவர்.)‎


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ، عَنْ يَمِينِ الْجَنَّةِ إِذَا دَخَلْتُهَا، فَقَالَ: أَيْ بُنَيَّ، سَلِ اللَّهَ الْجَنَّةَ، وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ»


Abu-Dawood-95

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

95. நபி (ஸல்) அவர்கள் (இரண்டு ராத்தல்) கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உலூச் ‎செய்தார்கள். ஒரு ஸாவு (இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) ‎தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-‎

இந்த ஹதீஸை ஷரீக் என்பார் வாயிலாக யஹ்யா பின் ஆதம் அறிவிக்கும்போது ‎‎(அப்துல்லாஹ் பின் ஜப்ர் என்பதற்கு பதிலாக) இப்னு ஜப்ர் பின் அதீக் எனக் ‎கூறியுள்ளர். அப்துல்லாஹ் பின் ஈஸா என்பார் வழியாக இதை சுஃப்யான் ‎அறிவிக்கும்போது எனக்கு ஜப்ர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் எனக் ‎குறிப்பிட்டுள்ளர்.‎

மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அப்துல்லாஹ் பின் ஜப்ர் ‎அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக ஷுஃபா அறிவிக்கின்றார். எனினும் ‎ஷுஃபா அவர்கள் இரண்டு ராத்தல்கள் எனக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் ஒரு ‎மக்கூக் அளவு தண்ணீரில் உலூச் செய்வார்கள் என அறிவிக்கிறார்.‎

மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»


Abu-Dawood-94

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

94. நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உலூச் செய்தனர். ஒரு முத்து (இரு கைகள் ‎கொள்ளளவு) நீரில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது ‎என உம்மு உமாரா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், நஸயீ ஆகியவற்றிலும் இது இடம் ‎பெற்றுள்ளது.)‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَيِ الْمُدِّ»


Abu-Dawood-93

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

93. மேற்கண்ட ஹதீஸே ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ‎அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அபூயஸீத் கூபாவாசிகள் மூலம் ‎அறிவித்தால் அது ஆதாரமாக கொள்ளத்தக்கதல்ல.‎


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»


Next Page » « Previous Page