Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-92

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 44

உளூச் செய்ய போதுமான அளவு தண்ணீர்.

92. நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து (இரு கை கொள்ளளவு) தண்ணீரில் உலூச் செய்து ‎விடுபவர்களாகவும் ஒரு ஸாவு (இரு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) ‎தண்ணீரில் குளித்து விடுபவர்களாகவும் இருந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) ‎அறிவிக்கிறார்கள். இதை அப்பான் அவர்கள் கதாதா வாயிலாக அறிவிக்கும் போது ‎ஸபிய்யா அவர்களிடம் கேட்டதாக இமாம் அபூதாவூத் கூறுகிறார்கள்.‎

‎(குறிப்பு: முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் ‎இடம் பெற்றுள்ளது.)‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»


Abu-Dawood-91

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது


«لَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ» – ثُمَّ سَاقَ نَحْوَهُ عَلَى هَذَا اللَّفْظِ قَالَ: «وَلَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخْتَصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Abu-Dawood-90

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

90. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மூன்று ‎காரியங்களைச் செய்ய உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை.

1 . ‎(ஒரு கூட்டத்தினருக்கு) தொழுகை நடத்துபவர் பிரார்த்தனை செய்யும் போது தமக்கு மட்டும் கேட்டுக்கொள்கிறார். (அவர்களை தனது பிரார்த்தனையில் இணைக்கவில்லை). அப்படி செய்தால் ‎அவர், அவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.

2 . ஒரு வீட்டில் நுழைய அனுமதி ‎பெறுவதற்கு முன்பு, அவ்வீட்டின் உட்பகுதிகளை அவர் பார்க்கக் கூடாது. அவ்வாறு ‎அவர் பார்த்து விட்டால் (அனுமதி பெறாமலேயே) வீட்டில் நுழைந்தவர் போலாவார். ‎

3 . மலஜலத்தை வெளியாக்கி தன் வயிற்றை இலகுவாக்கும் வரை, அதை அடக்கிக் கொண்டு தொழக்கூடாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


ثَلَاثٌ لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَفْعَلَهُنَّ: لَا يَؤُمُّ رَجُلٌ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَنْظُرُ فِي قَعْرِ بَيْتٍ قَبْلَ أَنْ يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ


Abu-Dawood-89

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

89. நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு ‎கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி)) அவர்களின் பேரன்) காஸிம் ‎அவர்கள் தொழத் துவங்கினர். அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உணவு ‎தயாராக இருக்கும் போது, மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் எனக் ‎கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இமாம் அஹ்மத், முஸத்தத், முஹம்மது பின் ஈஸா ஆகியோரில் முஹம்மது பின் ஈஸா அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்ற பெயருடன் இப்னு அபூபக்ர் என்று கூறினார். மற்ற இருவரும் அவ்வாறு கூறவில்லை. என்றாலும் மூவருமே (அப்துல்லாஹ் பின் முஹம்மது யார் என்று விளக்குவதற்கு) காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்று கூறினர்.


كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Abu-Dawood-87

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

87. ஒருவருக்குக் குளிப்பு கடமை ஆகிவிட்டது. தண்ணீர் இல்லை ஆனால் நபீத் என்ற ‎பானம் உள்ளது. அதைக் கொண்டு அவர் குளிக்கலாமா? என்று நான் அபுல் ஆலியர் ‎அவர்களிடம் கேட்டபோது அவர் கூடாது என்று பதிலளித்ததாக அபூசுல்தா ‎அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு: ஹதீஸ் எண் 86, 87 இவ்விரண்டும், ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப் படாது. ‎மாறாக அஸர் என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப் படாமல் நபித் ‎தோழர்களோ அல்லது மற்ற அறிவிப்பாளர்களோ தமது கருத்தாக அறிவிப்பவை அஸர் ‎என்று கூறப்படும்.)‎


سَأَلْتُ أَبَا الْعَالِيَةِ، عَنْ رَجُلٍ أَصَابَتْهُ جَنَابَةٌ، وَلَيْسَ عِنْدَهُ مَاءٌ، وَعِنْدَهُ نَبِيذٌ أَيَغْتَسِلُ بِهِ؟ قَالَ: «لَا»


Abu-Dawood-86

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

86. பாலிலும், நபீதிலும் உலூச் செய்வதை அதாஃ அவர்கள் வெறுத்தார்கள். இதை விட ‎தயம்மும் செய்வதே என்னை பொறுத்தவரை சிறந்தது எனவும் கூறியுள்ளனர் என ‎இப்னுஜுûஜ் அறிவிக்கிறார்.‎


أَنَّهُ كَرِهَ الْوُضُوءَ بِاللَّبَنِ وَالنَّبِيذِ، وَقَالَ: «إِنَّ التَّيَمُّمَ أَعْجَبُ إِلَيَّ مِنْهُ»


Abu-Dawood-85

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

85. ஜின்கள் வருகை தந்த இரவில் உங்களில் யாராவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்களுடன் இருந்தீர்களா? என்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) ‎அவர்களிடம் வினவியபோது எங்களில் யாரும் அவர்களுடன் இருக்கவில்லை என்று ‎அவர்கள் பதிலளித்தார்கள் என அல்கமா அறிவிக்கிறார்.‎

குறிப்பு : முஸ்லிம், திர்மிதீ ஆகியோரும் அறிவிக்கின்றனர்.‎


قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: مَنْ كَانَ مِنْكُمْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ؟، فَقَالَ: «مَا كَانَ مَعَهُ مِنَّا أَحَدٌ»


Abu-Dawood-84

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 42

நபீத் என்ற பானத்தில் உளூச் செய்தல்.

84. ஜின்கள் வருகை தந்த இரவில் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களை நோக்கி ‎உம்முடைய தோல் பாத்திரத்தில் என்ன உள்ளது? என நபி (ஸல்) அவர்கள் ‎கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ்பின் மஸ்வூது (ரலி) அவர்கள் நபீத் என ‎பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அதில் போடப் பட்டுள்ளது) நல்ல ‎பேரீத்தம் பழமாகும் (இந்த) தண்ணீரும் தூய்மையானதாகும் என நபி (ஸல்) அவர்கள் ‎கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களிடமிருந்து அபூஸைத் என்பவர் ‎அறிவிக்கிறார்.‎

அபூஸைத் அல்லது ஸைத் கூறுவதாக ஷரீக் தெரிவிக்கிறார் என அறிவிப்பாளர் ‎சுலைமான் பின் தாவூது குறிப்பிடுவதாக இமாம் அபூதாவூது கூறுகிறார்கள். ‎ஹன்னாத் அவர்கள் ஜின் கள் வருகை தந்த இரவு என்ற வாசகத்தைக் ‎குறிப்பிடவில்லை.‎

‎(குறிப்பு: திர்மிதீ, இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் ‎அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூஸைத் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது ‎என ஹதீஸ்கலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.‎


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ: «مَا فِي إِدَاوَتِكَ؟»، قَالَ: نَبِيذٌ، قَالَ: «تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ»


Abu-Dawood-83

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

கடல் நீரில் உளூச் செய்தல்.

83. அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த ‎அளவு தண்ணீரையே எடுத்து செல்கிறோம்.‎நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் ‎படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) ‎அவர்களிடம் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான், ‎ஹாகிம், தாரகுத்னீ, பைஹகீ, முஅத்தா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவு ‎செய்யப்பட்டுள்ளது.)‎


سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ بِمَاءِ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


Abu-Dawood-82

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

82. பெண் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ‎தடை செய்தார்கள் என ஹகம் பின் அமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இது திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ ஆகியவற்றிலும் பதிவாகியுள்ளது. ஹகம் ‎பின் அமர் மூலம் அறிவிக்கப் படும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என இமாம் ‎நவவீ குறிப்பிடுகின்றார்கள்.)‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ الْمَرْأَةِ»


Next Page » « Previous Page