Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-81

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 40

ஆண்களும் பெண்களும் சேர்ந்து உளூச் செய்யத் தடை.

81. அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டது போல் ‎நான்காண்டுகள் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட ஒருவரை நான் ‎சந்தித்தேன். அவர் ஆண் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் பெண் குளிப்பதையும் ‎அல்லது பெண் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் ஆண் குளிப்பதையும் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அறிவித்தார் என ‎ஹுமைத் அல் ஹிம்யரி தெரிவிக்கிறார்கள்.‎

முஸத்தத் அவர்கள் தமது அறிவிப்பில் ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து நீர் ‎அள்ளட்டும் என்ற வாசகத்தை அதிகமாக அறிவித்துள்ளார்.‎

‎(குறிப்பு: நஸயீ, அஹ்மத் ஆகியவற்றிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ، أَوْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ»، زَادَ مُسَدَّدٌ: «وَلْيَغْتَرِفَا جَمِيعًا»


Abu-Dawood-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் (ஆண்களாகிய) நாங்களும் ‎பெண்களும் ஒரே பாத்திரத்தில் எங்களது கைகளை உள்ளே விட்டு உலூச் செய்வோம் ‎என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎


«كُنَّا نَتَوَضَّأُ نَحْنُ وَالنِّسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نُدْلِي فِيهِ أَيْدِيَنَا»


Abu-Dawood-79

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

79. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ‎உலூச் செய்வார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது ‎அறிவிப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள் ‎என கூறிவுள்ளார்.‎

‎(குறிப்பு: நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ‎ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎


«كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ مُسَدَّدٌ: «مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا»


Abu-Dawood-78

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

78. ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது ‎எனது கையும், ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும் என்று ‎உம்மு சுமைய்யா (ரலி) அறிவிக்கிறார்கள். ‎

‎(குறிப்பு: இது இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)‎


«اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»


Abu-Dawood-77

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 39

பெண்கள் மீதம் வைத்த தண்ணீரில் உளூச் செய்தல்.

77. நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர் களாக ‎இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளித்தோம் என அன்னை ஆயிஷா (ரலி) ‎அறிவிக்கிறார்கள். ‎

‎(குறிப்பு: முஸ்லிம், நஸயீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، وَنَحْنُ جُنُبَانِ»


Abu-Dawood-76

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

76. ஹரீஸா (என்ற ஒரு வகை மாவு பண்டத்தை) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‎கொடுத்து விடுமாறு எனது தாயாரை அவர்களது எஜமானி அனுப்பி வைத்தார். ‎அங்கே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். ‎அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எனது தாயாரை நோக்கி நீ அதை அங்கு வைத்து ‎விடு எனச் சாடை காட்டினார்கள். அப்போது ஒரு பூனை வந்து அதை தின்றது. ‎ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது முடித்த பின்னர் பூனை வாய் வைத்து தின்ற அதே ‎இடத்திலிருந்து சாப்பிட்டார்கள். பூனைகள் அசுத்தமானவை அல்ல. அவை ‎உங்களையே சுற்றித் திரிந்து உங்களை அண்டி வாழ்பவை என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) கூறி விட்டு பூனையின் எச்சில் நீரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் உலூச் செய்ய நான் கண்டிருக்கிறேன் எனவும் சொன்னார்கள். இதை தாவூத் ‎பின் ஸாலிஹ் பின் தீனார் அத்தம்மார் தனது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இந்த தாவூத் பின் ஸாலிஹ் அவர்களின் தாயார் ஹதீஸ் கலையில் யாரென ‎தெரியாதவர்)‎


أَنَّ مَوْلَاتَهَا أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَوَجَدَتْهَا تُصَلِّي، فَأَشَارَتْ إِلَيَّ أَنْ ضَعِيهَا، فَجَاءَتْ هِرَّةٌ، فَأَكَلَتْ مِنْهَا، فَلَمَّا انْصَرَفَتْ أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ، فَقَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ»، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِفَضْلِهَا


Abu-Dawood-75

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 38

பூனை வாய் வைத்த தண்ணீர்.

75. கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூகத்தாதா (ரலி) அவர்களின் மகனின் மனைவியாக இருந்தேன். என் மாமனார் அபூகத்தாதா (ரலி) அவர்கள் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்கு ‘உளூ’ செய்ய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன். ஒரு பூனை வந்து அதில் கொஞ்சம் தண்ணீரைக் குடித்தது. (என் மாமனார், பூனை சிரமப்படாமல் நன்றாகக்) குடிப்பதற்காகப் பாத்திரத்தைச் சாய்த்தார்கள். (பூனை திருப்தியாகக் குடித்தது).

நான் அதை (வியப்புடன்) உற்று நோக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அபூகத்தாதா (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகளே! (நான் இவ்வாறு செய்ததைப் பார்த்து) ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “பூனை அசுத்தமான பிராணியல்ல. அது வீட்டில் (உங்களுடன்) சுற்றித் திரிகிற பிராணிகளில் ஒன்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ أَبَا قَتَادَةَ، دَخَلَ فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»


Abu-Dawood-74

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

74. நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்ல வேண்டுமென உத்திரவிட்டார்கள். பின்னர் ‎நாய்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன வேண்டிக் கிடக்கிறது? என்று கூறிவிட்டு ‎வேட்டையாடும் நாய்களையும், ஆட்டு மந்தையைக் காக்கும் நாய்களையும் ‎‎(கொல்லாமல்) வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள். மேலும் பாத்திரத்தில் ‎நாய் வாய் வைத்து விட்டால் அதை ஏழு தடவை கழுவுங்கள்.‎

நான் அவரையே கூர்ந்து நோக்குவதை கண்ட போது என் சகோதரர் மகளே! நீ ‎வியப்படைகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன். அதற்கு பூனைகள் ‎அசுத்தமானவையல்ல. அவை உங்களை சுற்றி (வந்து அண்டி வாழ்ந்து) ‎வரக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரலி) ‎அவர்கள் சொன்னதாக கஃபுன் பின் மாலிக் (ரலி) அவர்களின் புதல்வியும் அபூகதாதா ‎‎(ரலி) அவர்கள் மகனின் மனைவியுமான கப்ஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா ஆகிய நூல்களிலும் இது ‎இடம் பெற்றுள்ளது.)‎


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، ثُمَّ قَالَ: «مَا لَهُمْ وَلَهَا»، فَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ، وَفِي كَلْبِ الْغَنَمِ وَقَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مِرَارٍ، وَالثَّامِنَةُ عَفِّرُوهُ بِالتُّرَابِ»


Abu-Dawood-73

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

73. பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். ஏழாவது ‎தடவை மண்ணைப் பயன் படுத்திக் கழுவுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ‎அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.‎

அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து அபூஸாலிஹ், அபூரஸீன், அல் அ1ரஜ், சாபித் ‎அல் அஹ்னப், ஹம்மாம் பின் முனப்பஹ், அபூஸ்ஸீத்தி அப்துர் ரஹ்மான் ஆகியோர் ‎இதை அறிவிக்கும் போது மண்ணை பயன் படுத்துவது பற்றி குறிப்பிடவில்லை என ‎இமாம் அபூதாவூத் கூறுகின்றார்கள்.‎

‎(குறிப்பு: திர்மிதீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎


«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، السَّابِعَةُ بِالتُّرَابِ»


Next Page » « Previous Page