Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-71

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 37

நாய் வாய் வைத்த நீரில் உளூச் செய்தல்.

71. உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் வாய் விட்டால் அதை சுத்தம் செய்யும் ‎முறை என்னவெனில், அது ஏழு தடவை கழுவப் பட வேண்டும், அதை முதன் ‎முதலாய் மண்ணைப் பயன் படுத்தி கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) கூறியதாக ‎அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

இவ்வாறே முஹம்மத் அவர்கள் மூலம் அய்யூப், ஹபீப் பின் ஷஹீத் ஆகிய இருவரும் ‎அறிவிப்பதாக இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, முஅத்தா, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் ‎இடம் பெறுகிறது.)‎


«طُهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ، أَنْ يُغْسَلَ سَبْعَ مِرَارٍ، أُولَاهُنَّ بِتُرَابٍ»


Abu-Dawood-70

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

70. உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம். மேலும் ‎அதிலேயே கடமையான குளிப்பை நிறைவேற்றவும் வேண்டாம் என அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் ‎பெற்றுள்ளது.)‎


«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنَ الْجَنَابَةِ»


Abu-Dawood-69

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 36

தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல்.

69. உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டு பிறகு அதிலேயே ‎குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) ‎அறிவிக்கின்றார்கள். ‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது ‎இடம் பெற்றுள்ளது.)‎


«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»


Abu-Dawood-68

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 35

தண்ணீர் தீட்டாகாது.

68. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். ‎அப்போது நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்வதற்காக, அல்லது குளிப்பதற்காக வந்த ‎போது அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமை யானவளாக இருந்தேன் ‎என்று அவர்கள் கூற தண்ணீர் தண்ணீரை தீட்டாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் ‎பதில் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.‎

‎(குறிப்பு: திர்மிதீ, இப்னுமாஜா, தாரமி, ஹாகிம், ரஸீன், அஹ்மத், நஸயீ ஆகிய ‎நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎


اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَتَوَضَّأَ مِنْهَا أَوْ يَغْتَسِلَ، فَقَالَتْ: لَهُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ»


Abu-Dawood-67

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

67. நாய்களின் மாமிசத் துண்டங்களும், மாதவிடாய்த் துணிகளும் மக்களின் கழிவுப் ‎பொருட்களும் கொட்டப்படும் புழாஆ கிணற்றிலிருந்து உங்களுக்கு நீர் கொண்டு ‎வரப்படுகிறதே? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது ‎நிச்சயமாக தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை ‎அசுத்தப் படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்றேன் ‎என அபூஸயிதுல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

புழாஆ கிணற்றை பராமரிப்பவரிடம் அதன் ஆழத்தைப் பற்றி கேட்டேன். அதற்கு ‎அவர் அதிக பட்ச தண்ணீர் அளவு அடிவயிறு வரை இருக்கும் என்றார் நான் அதன் ‎குறைந்த பட்ச தண்ணீர் அளவு பற்றி கேட்டதற்கு முட்டுக் காலுக்குக் கீழ் இருக்கும் ‎என்று அவர் கூறியதாக குதைபா பின்ஸயீது அவர்கள் கூற நான் செவியுற்றேன் என ‎இமாம் அவூதாவூது குறிப்பிடுகின்றார்கள்.‎

நான் புழாஆ கிணற்றின் மேல் என் மேலாடையை விரித்து அளவெடுத்தேன். பிறகு ‎நான் அதை அளந்தபோது அதன் அகலம் ஆறு முழம் இருந்தது. எனக்காக தோட்டக் ‎கதவைத் திறந்து என்னை அங்கு அனுமதித்த வாயிற் காப்பாளரிடம் ஏற்கனவே ‎இருந்த அமைப்பை

إِنَّهُ يُسْتَقَى لَكَ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا لُحُومُ الْكِلَابِ، وَالْمَحَايِضُ وَعَذِرُ النَّاسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»


Abu-Dawood-66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 34

புழாஆ என்ற கிணறு.

66. மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் ‎போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உலூச் செய்யலாமா? என்று ‎அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது, தண்ணீர் ‎தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப் படுத்தாது என்று ‎நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததாக அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். ‎

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ராபிஃ என்ற பெயருக்கு பதிலாக ‎அப்துர் ரஹ்மான் பின் ராபிஃ என சிலர் அறிவிப்பதாக இமாம் அபூதாவூது ‎குறிப்பிடுகிறார்கள்.‎


أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»


Abu-Dawood-65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

65. தண்ணீர் இரண்டு குல்லத் கள் இருந்தால் அது அசுத்தமடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தமது தந்தை உமர் (ரலி) அவர்கள் மூலம் அப்துல்லாஹ் பின்  உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது காணப்படுகிறது.


«إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَإِنَّهُ لَا يَنْجُسُ»


Abu-Dawood-64

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

64. மேலுள்ள ஹதீஸே இங்கு இடம் பெறுகின்றது. ஆனால் இதில் திறந்து வெளியில் ‎உள்ள தண்ணீர் பற்றிக் கேட்கப் பட்டதாக கூறப்படுகிறது.‎

அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) தமது தந்தை மூலம் அறிவிக்கிறார்கள்.‎

குறிப்பு : திர்மிதீ, நஸயீ போன்ற நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.‎


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ يَكُونُ فِي الْفَلَاةِ فَذَكَرَ مَعْنَاهُ


Abu-Dawood-63

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 33

தண்ணீரை அசுத்தமாக்குபவை.

63. நபி (ஸல்) அவர்களிடம் கால் நடைகள், ‎வனவிலங்குகள் (அடிக்கடி) வந்து (குடித்துவிட்டு மீதம்வைத்துவிட்டு) செல்லும் தண்ணீரை பற்றி கேட்டபோது, அதற்கு ‎நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத்களை அடைந்து விட்டால் ‎அசுத்தங்களால் அது பாதிப்படையாது என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது முஹம்மது பின் அலா அறிவிக்கும் வார்த்தையாகும்.

உஸ்மான் பின் ‎அபூஷைபா, ஹஸன் பின் அலீ ஆகியோர், முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஃபர் ‎அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். இதுதான் சரியானதாகும்…


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»


Abu-Dawood-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 32

உளூ இருக்க உளூ செய்தல்.

62. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது லுஹர் தொழுகைக்கு பாங்கு ‎சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்து தொழுதார்கள். அஸர் தொழுகைக்கு ‎பாங்கு சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்தார்கள். அப்போது நான் (உலூச் ‎செய்வதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் யார் ‎உலூவுடன் இருக்க மீண்டும் உலூச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து ‎நன்மைகளை எழுதி விடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள் என அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள். இதை குதைஃப் ‎அறிவிக் கிறார். முஸத்தத் அவர்களின் இந்த ஹதீஸ் பூரணமானது என இமாம் ‎அபூதாவூது குறிப்பிடுகிறார்கள். ‎

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ‎இமாம் திர்மிதீ அவர்கள் இதை பலவீனமான ஹதீஸ் என குறிப்பிடுகிறார்கள். ‎ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் பின் ‎ஸியாத் அல் அப்ஃரீகீ பலவீனமானவர். மேலும் இவர் தத்லீஸ் செய்பவரும் ஆவார்.‎

தத்லீஸ் என்பவர், ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரிடம்

كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَلَمَّا نُودِيَ بِالظُّهْرِ تَوَضَّأَ فَصَلَّى، فَلَمَّا نُودِيَ بِالْعَصْرِ تَوَضَّأَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ عَشْرَ حَسَنَاتٍ»،


Next Page » « Previous Page