61.தொழுகையின் திறவு கோல் சுத்தமாகும் (ஏனைய செயல்களில்) ஈடு படுவதை) ஹராமாக ஆக்கி விடுவது (ஆரம்ப) தக்பீர் ஆகும். ஏனைய காரியங்களை) செய்வதற்கு அனுமதியாவது ஸலாம் கொடுப்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு: திர்மிதீ, இப்னுமாஜா, ஷாபி, பஸ்ஸார், ஹாகிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அகீல் என்பவர் உண்மையாளர் எனினும் இவரது நினைவாற்றல் பற்றி அறிஞர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.
«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»
சமீப விமர்சனங்கள்