Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-50

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 27

மற்றவர்களின் பல்குச்சியால் பல் துலக்குதல்.

50. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது ‎அவர்களினருகில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை ‎விட மூத்தவர். அப்போது பல் துலக்குவதைச் சிறப்பிக்கும் விதத்தில் அவ்விருவரில் ‎மூத்தவருக்கு பற்குச்சியை வழங்கி கண்ணியப்படுத்தும் படி நபி (ஸல்) அவர்களுக்கு ‎வஹி இறை அறிவிப்புச் செய்யப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

குறிப்பு : இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் இதே ஹதீஸின் கருத்தை முஸ்லிம் ‎அவர்கள் பதிவு செய்துள்ளனர். இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் ‎இல்லாமல் பதிவு செய்துள்ளனர்.‎


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ، أَنْ كَبِّرْ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا»


Abu-Dawood-49

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 26

பல் துலக்கும் முறை.

49. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு ‎கேட்டு வந்த போது அவர்கள் தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று ‎அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அறிவிப்பதாக முஸத்தத் ‎குறிப்பிடுகிறார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது ‎நாவின் ஓரத்தில் பற்குச்சியை வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு ‎பல் துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன் என அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகின்றார் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்.‎

அபூபுர்தா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) ‎மூலம் அறிவிக்கிறார்கள். அது ஒரு நீண்ட ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி ‎விட்டேன் என முஸத்தத் கூறுவதாக அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.‎

அறிவிப்பவர் : அபூபுர்தா(ரலி)‎


«أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ»


Abu-Dawood-48

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

48. உலூவுடன் இருந்தாலும் இல்லா விட்டாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் இப்னு உமர் ‎‎(ரலி) அவர்கள் உலூ செய்த காரணம் என்ன? என்று அவர்களது மகன் ‎அப்துல்லாஹ்விடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ‎உலூவுடன் இருந்தாலும் உலூவுடன் இல்லாவிட்டாலும் உலூச் செய்யுமாறு ‎ஏவப்பட்டிருந்தார்கள். இது அவர்களுக்கு சிரமமான போது ஒவ்வொரு தொழுகைக்கும் ‎பல்துலக்குமாறு கட்டளை யிடப்பட்டார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் தனக்கு சக்தி ‎இருப்பதாகக் கருதியதால் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்பவர்களாக ‎இருந்தனர் என்று அவர்களது மகனார் விடையளித்தார்கள்.‎

இந்த தகவலை அப்துல்லாஹ் பின் ஹன்லலா அவர்களிடம் கேட்டு அஸ்மா ‎பின்த்ஸைது என்பவர் தமக்கு கூறியதாகவும் குறிப்பிட்டார்.‎

அறிவிப்பவர் : முஹம்மது பின் ய்ஹ்யா பின் ஹப்பான் (ரலி)‎

முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து இதை இப்ராஹிம் பின் சஃது அவர்கள் ‎அறிவிக்கின்ற போது (அறிவிப்பாளர் பெயரை அப்துல்லாஹ் என்பதற்கு பதிலாக) ‎உபைத்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் என கூறுவதாக இமாம் அபூதாவூத் அவர்கள்

قُلْتُ: أَرَأَيْتَ تَوَضُّؤَ ابْنِ عُمَرَ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا، وَغَيْرَ طَاهِرٍ، عَمَّ ذَاكَ؟ فَقَالَ: حَدَّثَتْنِيهِ أَسْمَاءُ بِنْتُ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ حَنْظَلَةَ بْنِ أَبِي عَامِرٍ، حَدَّثَهَا «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرَ بِالْوُضُوءِ لِكُلِّ صَلَاةٍ، طَاهِرًا وَغَيْرَ طَاهِرٍ، فَلَمَّا شَقَّ ذَلِكَ عَلَيْهِ، أُمِرَ بِالسِّوَاكِ لِكُلِّ صَلَاةٍ»، فَكَانَ ابْنُ عُمَرَ يَرَى أَنَّ بِهِ قُوَّةً، فَكَانَ لَا يَدَعُ الْوُضُوءَ لِكُلِّ صَلَاةٍ


Abu-Dawood-47

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

47. எனது சமுதாயத்தவர்களுக்கு நான் கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில் லாவிடில் ‎ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு ‎உத்திரவிட்டிருப்பேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் ‎செவிமடுத்தேன் என்று ஸைது காலித் அல்ஜுஹனீ (ரலி) அறிவிக்கிறார்கள். இதன் ‎காரணமாக எழுத்தாளனுடைய காதில் பேனா இடம் பெறுவது போல் ஸைது பின் ‎காலித் (ரலி) அவர்கள் காதில் பற்குச்சி இடம் வகிக்கும் நிலையில் அவர்களைப் ‎பள்ளியில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்கள் தொழத் தயாராகும் போதெல்லாம் பல் ‎துலக்குவார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஸலமா (ரஹ்)‎

‎(குறிப்பு : இதை திர்மிதீ, நஸயீ, அஹ்மத் ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)‎


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»، قَالَ أَبُو سَلَمَةَ: فَرَأَيْتُ زَيْدًا يَجْلِسُ فِي الْمَسْجِدِ، وَإِنَّ السِّوَاكَ مِنْ أُذُنِهِ مَوْضِعَ الْقَلَمِ مِنْ أُذُنِ الْكَاتِبِ، فَكُلَّمَا قَامَ إِلَى الصَّلَاةِ اسْتَاكَ


Abu-Dawood-46

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 25

பல் துலக்குதல்.

46. நான் மூஃமின்களுக்கு கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில்லை யானால் நான் ‎அவர்களுக்கு இஷாவை பிற் படுத்தி தொழ வேண்டும் என்றும் ஒவ்வொரு ‎தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டிருப்பேன் என ‎நபி (ஸல்) கூறினார்கள்.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎

‎(குறிப்பு : இந்த கருத்துள்ள ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மது, ‎ஹாகிம், இப்னுமாஜா, ஹிப்னு ஹிப்பான், முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம் ‎பெற்றுள்ளன.)‎


«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ، لَأَمَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاءِ، وَبِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»


Abu-Dawood-45

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 24

சுத்தம் செய்த பின் கையை தரையில் தேய்த்துக் கழுவுதல்.

45. நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் சென்றால் நான் அவர்களுக்கு சிறு பாத்திரத்தில் ‎அல்லது தோல்பையில் தண்ணீர் கொண்டு செல்வேன். அவர்கள் துப்புரவு செய்து ‎கொள்வார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பின்னர் அவர்கள் ‎தங்கள் கையை தரையில் தேய்ப்பார்கள். பிறகு அவர்களுக்கு (தண்ணீருள்ள) ‎வேறொரு பாத்திரத்தைக் கொண்டு வருவேன். அவர்கள் உலூச் செய்வார்கள் என்று ‎வகீஃ அவர்களுடைய அறிவிப்பில் காணப்படுகிறது.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :- (வகிஃ அவர்களின் ஹதீஸை ‎விட) அஸ்வத் பின் ஆமிர் அவர்களுடைய ஹதீஸில் கூடுதல் விவரங்கள் ‎இருக்கின்றன.‎

‎(குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. ‎இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஷரீக் என்பவர் நினைவாற்றல் ‎குறைந்தவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும்.)‎


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، أَتَيْتُهُ بِمَاءٍ فِي تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجَى»، قَالَ أَبُو دَاوُدَ: فِي حَدِيثِ وَكِيعٍ: «ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى الْأَرْضِ، ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ آخَرَ فَتَوَضَّأَ»


Abu-Dawood-44

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

44. அங்கே தூய்மையை விரும்பக் கூடிய மக்கள் உள்ளனர் (9:108) என்ற இந்த ‎இறைவசனம் குபா (என்ற பள்ளி) வாசிகள் தொடர்பாக இறங்கியது என்று நபி(ஸல்) ‎அவர்கள் கூறினார்கள். (மலஜலம் கழித்தால்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு சுத்தம் ‎செய்பவர்களாக இருந்தனர். ஆதலால் இந்த வசனம் அவர்கள் தொடர்பாக இறங்கியது.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎

‎(குறிப்பு: இதை இமாம் திர்மிதீ, இப்னுமாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவு ‎செய்துள்ளனர். இமாம் திர்மிதீ இந்த ஹதீஸை கரீப் என்ற வகையில் ‎சேர்க்கின்றார்கள். இதன் மூன்றாவது அறிவிப்பாளரான இப்ராஹீம் பின் அபீமைமூனா ‎என்பவர் யார் என அறியப்படாதவர். இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் ‎மேற்கண்டவர் இடம் பெறாவிடினும் அதில் இடம் பெறும் மூன்றாவது ‎அறிவிப்பாளராக உத்பா பின் அபீ ஹகீம் என்பவர் பலவீனமானவர். மேலும் ‎இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் அபூதல்ஹா (ரலி) இவ்வாறு அறிவிப்பதாகக் ‎கூறும் தல்ஹாபின் நாபிவு என்பார் அபூஅய்யூபு (ரலி)யின் காலத்தவர் அல்ல) எனவே ‎இது ஏற்கத்தக்கதல்ல.‎


نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي أَهْلِ قُبَاءٍ: {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا} [التوبة: 108] “، قَالَ: «كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ، فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الْآيَةُ»


Abu-Dawood-43

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

தண்ணீரால் சுத்தம் செய்தல்.

43. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்கு சென்றார்கள். அப்போது ‎அவர்களுடன் ஒரு சிறுவர் தண்ணீர் பாத்திரத்துடன் சென்றார். அவர் எங்களில் ‎மிகவும் சிறியவர். அதை அவர் இலந்த மரத்தடியில் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் ‎தங்கள் இயற்கை தேவையை நிறைவேற்றி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு எங்களிடம் வந்தார்கள்.‎

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)‎


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا، وَمَعَهُ غُلَامٌ مَعَهُ مِيضَأَةٌ، وَهُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ السِّدْرَةِ، فَقَضَى حَاجَتَهُ، فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ اسْتَنْجَى بِالْمَاءِ»


Abu-Dawood-42

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 22

சிறுநீர் கழித்த பின் நன்கு சுத்தம் செய்தல்.

42. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அப்போது அவர்களுக்குப் ‎பின்னால் தண்ணீர் கூஜாவுடன் உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ‎உமரே ! இது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதும் தாங்கள் உலூச் ‎செய்வதற்கான தண்ணீர் என்று உமர் (ரலி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‎நான் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உலூச் செய்யும் படி கட்டளையிடப் படவில்லை. ‎அவ்வாறு நான் செய்தால் அது சுன்னத்தாக (வழிமுறையாக) ஆகிவிடும் என்று ‎சொன்னார்கள்.‎

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)‎

‎(குறிப்பு: இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)‎


بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عُمَرُ خَلْفَهُ بِكُوزٍ مِنْ مَاءٍ، فَقَالَ: «مَا هَذَا يَا عُمَرُ»، فَقَالَ: هَذَا مَاءٌ تَتَوَضَّأُ بِهِ، قَالَ: «مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ، وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً»


Abu-Dawood-41

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

41. சுத்தம் செய்வது எத்தனை கற்களால் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ‎வினவப்பட்ட போது, “விட்டையல்லாத மூன்று கற்களினால் சுத்த செய்ய வேண்டும்” ‎என்று பதிலளித்ததாக குஸைமா பின் சாபித் (ரலி) அறிவிக்கிறார்க்ள். இவ்வாறே ‎இதை ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்துஅபூ உஸாமா இப்னு நுமைர் ஆகியோரும் ‎அறிவிக்கின்றனர் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்.‎

‎(குறிப்பு: அஹ்மத், இப்னுமாஜா ஆகியவற்றில் இது இடம் பெற்றுள்ளது)‎


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِاسْتِطَابَةِ، فَقَالَ: «بِثَلَاثَةِ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ»،


Next Page » « Previous Page