Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-40

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 21

கற்களினால் சுத்தம் செய்தல்.

40. உங்களில் ஒருவர் மலம் கழிக்க சென்றால் தம்முடன் சுத்தப் படுத்தக் கூடிய மூன்று கற்களை எடுத்துச் செல்லட்டும். அவை சுத்தம் செய்வதற்கு போதுமானவையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத். நஸாயீ, தாரகுத்னீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் காணப்படுகிறது)


«إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ، فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلَاثَةِ أَحْجَارٍ يَسْتَطِيبُ بِهِنَّ، فَإِنَّهَا تُجْزِئُ عَنْهُ»


Abu-Dawood-39

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

39. ஜின் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்று முஹம்மத் (ஸல்) அவர்களே! எலும்பு அல்லது விட்டை அல்லது கரித்துண்டு ஆகிய வற்றினால் சுத்தம் செய்வதை விட்டும் உமது தஆலா அவற்றில் எங்களுக்கு உணவை அமைத்து இருக்கின்றான் என்று கூறினார்கள்.  எனவே நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்.


قَدِمَ وَفْدُ الْجِنِّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا مُحَمَّدُ: انْهَ أُمَّتَكَ أَنْ يَسْتَنْجُوا بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ حُمَمَةٍ، فَإِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ لَنَا فِيهَا رِزْقًا، قَالَ: «فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ»


Abu-Dawood-38

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

38. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எலும்பு அல்லது விட்டையை கொண்டு சுத்தம் ‎செய்வதை தடை செய்து விட்டார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ‎அறிவிக்கின்றார்கள்.‎

‎(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப் ‎பட்டுள்ளது.)‎


«نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بَعْرٍ»


Abu-Dawood-37

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

37. ஹதீஸ் எண்-36 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வந்துள்ளது. 

(அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் (எகிப்தில் உள்ள) அல்யூன் என்ற கோட்டையின் வாசலை ‎காவல் காத்து கொண்டிருக்கும் போது (மேற்கண்ட) இந்த ஹதீஸை (தமக்கு) ‎அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவித்ததாக அபூஸாலிம் அல்ஜைஷானி (ரஹ்) அவர்கள் கூறினார்) 

இமாம் அபூதாவூத் கூறுகிறார்:

அல்யூன் என்ற கோட்டை ஃபுஸ்தாத் என்ற ஊரின் மலையின் மீது இருக்கிறது.

(மேலும்) இமாம் அபூதாவூத் கூறுகிறார்:

(ஹதீஸ் எண்-36 இல் வரும் வரும்) ஷைபான் அல்கித்பானீ என்பவர் ‎அபூஹுதைபா என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் ஷைபான் பின் உமைய்யா என்பவர் ஆவார்.‎


يَذْكُرُ ذَلِكَ وَهُوَ مَعَهُ مُرَابِطٌ بِحِصْنِ بَابِ أَلْيُونَ


Abu-Dawood-36

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 20

சுத்தம் செய்வதற்கு தடுக்கப்பட்டவை

36. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (வாழும்) காலத்தில் எங்களில் ஒருவர் ‎‎(போருக்கு செல்லும் போது) தான் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் செல்வத்தில், ‎உடமையாளருக்குப் பாதி, தமக்குப் பாதி என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமது ‎சகோதரனுடைய மெலிந்த ஒட்டகத்தை (வாடகைக்கு) எடுத்துச் செல்வார். (அதன் படி ‎போரில் ஒரு அம்பு கிடைத்தால்) எங்களில் ஒருவருக்கு அம்புத் தலையும் இறகுகளும் ‎ஒன்னொருவருக்கு அம்பின் அடிப்பாகமும் கிடைக்கும்.‎

பிறகு ருவைபிஃ சொன்னார்கள்: எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎பின்வருமாறு கூறினார்கள் :‎

ருவைபிஃ! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம் ! அப்போது நீ மக்களுக்கு யார் ‎தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கழுத்தில் கயிறு ‎அணிகின்றாரோ அல்லது மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் ‎செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி ‎விட்டார்கள் என்று அறிவித்துவிடுக!‎

மஸ்லமா பின் முகல்லத்

إِنَّ مَسْلَمَةَ بْنَ مُخَلَّدٍ اسْتَعْمَلَ رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ عَلَى أَسْفَلِ الْأَرْضِ، قَالَ شَيْبَانُ: فَسِرْنَا مَعَهُ مِنْ كَوْمِ شَرِيكٍ، إِلَى عَلْقَمَاءَ أَوْ مِنْ عَلْقَمَاءَ إِلَى كَوْمِ شَرِيكٍ يُرِيدُ عَلْقَامَ فَقَالَ رُوَيْفِعٌ: «إِنْ كَانَ أَحَدُنَا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْخُذُ نِضْوَ أَخِيهِ عَلَى أَنَّ لَهُ النِّصْفَ مِمَّا يَغْنَمُ، وَلَنَا النِّصْفُ، وَإِنْ كَانَ أَحَدُنَا لَيَطِيرُ لَهُ النَّصْلُ وَالرِّيشُ، وَلِلْآخَرِ الْقِدْحُ» ثُمَّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا رُوَيْفِعُ لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ، أَوْ عَظْمٍ فَإِنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ بَرِيءٌ»


Abu-Dawood-35

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 19

மலம், ஜலம் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளல்.

35. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப் ‎படையாக தீட்டுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். ‎எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் கற்களை வைத்து ‎சுத்தம் செய்கின்றாரோ அவர் (அக்கற்களை) ஒற்றைப் படையாக்குவாராக! எவர் ‎‎(அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் அவ்வாறு ‎செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவரேனும் சாப்பிட்டதும் பற்குத்தினால் ‎‎(அதை துப்பி விடுவாராக) அவர்களது நாவால் துளாவியதை விழுங்கி விடுவாராக! ‎எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) ‎செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் மலம் கழிக்கச் செல்கிறாரோ அவர் ‎மறைப்பை தேடிக் கொள்வாராக! திறந்த வெளியில் மணல் மேட்டை குவித்து அதில் ‎மறைந்திருப்பதை தவிர அவர் வேறு வசதியை வெறவில்லையெனில் அதை ‎பின்னோக்கி கொள்வாராக! ஏனெனில் சைத்தான் ஆதமுடைய மக்களின் பிட்டத்தில் ‎விளையாடுகின்றான். எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தார். எவர் ‎‎(அவ்வாறு) செய்யவில் லையோ அதனால் தவறில்லை. இதை அபூஹுரைரா (ரலி) ‎அறிவிக்கின்றார்கள்.‎

«مَنِ اكْتَحَلَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقْدَ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ أَكَلَ فَمَا تَخَلَّلَ فَلْيَلْفِظْ، وَمَا لَاكَ بِلِسَانِهِ فَلْيَبْتَلِعْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ، فَإِنْ لَمْ يَجِدْ إِلَّا أَنْ يَجْمَعَ كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَسْتَدْبِرْهُ، فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ بَنِي آدَمَ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ»