Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-20

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

சிறுநீர் (உடலிலும் ஆடையிலும்) பட்டுவிடாமல் கவனமாக இருப்பது.

20. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனை
செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (அவர்கள்) பெரிய குற்றத்திற்காக வேதனை செய்யப்படவில்லை என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரில் ஒருவர், சிறுநீர் (கழித்துவிட்டு, சிறுநீர் தன் உடல்மீது அல்லது தன் ஆடையில்) பட்டுவிடாமல் இருக்கக் கவனம் செலுத்தவில்லை.
மற்றொருவர், கோள் (புறம்) சொல்லித் திரிபவர் என்று கூறினார்கள்.

பின்னர் பேரீச்ச மரத்தின் பசுமையான கிளையொன்றைக் கொண்டுவரும்படிக் கூறினார்கள். (கொண்டுவந்து கொடுக்கப்பட்டது). அதை இரண்டாகப் பிளந்து ஒரு மண்ணறை மீது ஒன்றையும், மற்றொரு மண்ணறை மீது இன்னொன்றையும் நட்டு வைத்து, “இந்தக் கிளைகள் காயாமல் இருக்கும் வரை இவ்விருவருக்கும் வேதனை குறைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்) ஹன்னாத்

مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ، ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، وَقَالَ: لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا “

قَالَ هَنَّادٌ: يَسْتَتِرُ مَكَانَ يَسْتَنْزِهُ


Abu-Dawood-19

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 10

உயர்ந்தோன் அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம் அணிந்து கழிவறைக்குச் செல்வது.

19. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கழிவறையில் நுழையும்முன்
(அல்லாஹ்வின் பெயர்பொறிக்கப்பட்டிருந்த)
மோதிரத்தைக் கழற்றிவிடுவார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி ‘முன்கர்’ (நிராகரிக்கப்பட்டது) என்ற வகையைச் சார்ந்தது.

இந்த நபிமொழி இப்னு ஜுரைஜ் —> ஸியாத் பின் ஸஃத் —> ஸுஹ்ரீ —>  அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், “நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். பின்பு அவர்கள் அதை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்” என்றே (மற்றவர்களால்) அறிவிக்கப்படுகிறது.

“இதைக் கழிவறைக்குச் செல்லும்போது கழற்றிவைத்து விடுவார்கள்” என்று ஹம்மாம் பின் யஹ்யா அவர்கள் மட்டுமே, (இவ்வாறு) இப்னு ஜுரைஜிடமிருந்து தவறாக அறிவித்துள்ளார்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ وَضَعَ خَاتَمَهُ»


Abu-Dawood-18

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

தூய்மையின்றி, உயர்ந்தோன் அல்லாஹ்வை துதிப்பவர் குறித்து (வந்துள்ளவை).

18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் (குளிப்பு கடமையாக இருக்கும் சமயத்தில் கூட) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை துதிப்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ»


Abu-Dawood-17

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17. முஹாஜிர் பின் குன்ஃபுத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து முடிக்கும் வரை அவருக்கு பதில் ஸலாம் கூறவில்லை.

பிறகு, “தூய்மையில்லாத நிலையில் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதை நான் வெறுக்கிறேன்” என்று அவரிடம் காரணம் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹுளைன் பின் முன்திர் (ரஹ்)


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ ” إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ أَوْ قَالَ: عَلَى طَهَارَةٍ


Abu-Dawood-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

கழிவறையில் பேசுவது அருவருக்கத்தக்கது.

15. இரண்டு மனிதர்கள் மலம் கழிக்க (ஒன்றாகச்) சென்று, ஒருவர் மற்றவருக்கு முன் மறைவான உறுப்புகளைத் திறந்தும், பேசிக் கொண்டும் மலம் கழிக்க வேண்டாம். இதனால் மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கோபப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து பலர் இந்த நபிமொழியை அறிவிக்கிறார்கள். இவர்களில்) இக்ரிமா பின் அம்மார் மட்டும் தான் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (மற்றவர்கள் மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்)


«لَا يَخْرُجُ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَيْنِ عَنْ عَوْرَتِهِمَا يَتَحَدَّثَانِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَمْقُتُ عَلَى ذَلِكَ»


Abu-Dawood-14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மலம், ஜலம் கழிக்கும் போது எப்போது ஆடையை விலக்குவது?

14. நபி (ஸல்) அவர்கள் தன் இயற்கைக் கடனை நிறைவேற்ற விரும்பினால் (தம் மறைவான உறுப்புகளை யாரும் பார்த்துவிடாதபடி) தரைக்கு மிக நெருக்கமான பின் தமது ஆடையை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள், அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (அஃமஷ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது பலவீனமானதாகும்.

(அபூதாவூத் இமாம் அவர்களின் எழுத்தாளரான) அபூஈஸா அர்ரம்லீ (இஸ்ஹாக் பின் மூஸா பின் ஸஃத்) கூறுகிறார்:

அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எங்களுக்கு, அஹ்மத் பின் வலீத் அவர்கள், அம்ர் பின் அவ்ன் —> அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் —> அஃமஷ் —> அனஸ் பின் மாலிக் (ரலி) என்று அறிவித்தார்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ حَاجَةً لَا يَرْفَعُ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»


Abu-Dawood-13

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13. நபி (ஸல்) அவர்கள், நாங்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழிப்பதற்கு தடை விதித்திருந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், அவர்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ، فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا»


Abu-Dawood-12

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 5

மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க அனுமதி.

12. நான் (என் சகோதரி ஹஃப்ஸா (ரலி) அவர்களின்) வீட்டின் மாடியில் ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கழிவறையில்) இரண்டு செங்கற்கள் மீது (கால்வைத்து) பைத்துல் மக்திஸை முன்னோக்கி அமர்ந்து மலம் கழித்துக் கொண்டிருந்ததை (தற்செயலாக) நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


لَقَدْ ارْتَقَيْتُ عَلَى ظَهْرِ الْبَيْتِ، «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ لِحَاجَتِهِ»


Abu-Dawood-11

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11. மர்வான் அல்அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் ஒட்டகத்தைக் கிப்லா திசையில் அமரவைத்து (பின்னர் அதை மறைப்பாக ஆக்கி) கிப்லாவை நோக்கியவாறு சிறுநீர் கழித்ததை நான் பார்த்தேன்.

அப்போது நான் அவர்களிடம், “அபூ அப்துர் ரஹ்மானே! இது தடுக்கப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம், (எனினும்) அப்படிச் செய்வது திறந்த வெட்டவெளியில்தான் தடுக்கப்பட்டது. கிப்லாவுக்கும் உனக்கும் இடையில் (சுவர், கட்டடம், வாகனம் போன்ற) உன்னை மறைக்கும் ஏதேனும் பொருள் இருந்தால் (அது) தவறல்ல என்று பதில் அளித்தார்கள்.


رَأَيْتُ ابْنَ عُمَرَ أَنَاخَ رَاحِلَتَهُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ، ثُمَّ جَلَسَ يَبُولُ إِلَيْهَا، فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا؟  قَالَ: بَلَى إِنَّمَا «نُهِيَ عَنْ ذَلِكَ فِي الْفَضَاءِ، فَإِذَا كَانَ بَيْنَكَ وَبَيْنَ الْقِبْلَةِ شَيْءٌ يَسْتُرُكَ فَلَا بَأْسَ»


Abu-Dawood-10

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10. நாங்கள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது (பைத்துல் முகத்தஸ், கஃபா என்ற) இரு கிப்லாக்களை முன்னோக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: மஃகில் பின் அபூமஃகில் அல்அஸதீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபூஸைத் என்பவர் பனூ ஸஃலபா எனும் குலத்தாரால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِبَوْلٍ أَوْ غَائِطٍ»


Next Page » « Previous Page