Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-3013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِيهِ»


Musnad-Ahmad-2647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2647. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று (பழமொழியாகக்) கூறுவோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை உதாரணமாகக் கூறினார்கள் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவிக்கும்போதே இதைப் பற்றி தெரிந்துக்கொண்டோம்.


كُنَّا نَقُولُ وَنَحْنُ صِبْيَانٌ: الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ، يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ، وَلَمْ نَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ فِي ذَلِكَ مَثَلًا، حَتَّى حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

வாந்தியை (விழுங்குவது) ஹராம் என்றே நான் அறிகிறேன் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா அவர்கள் (கூறினார் என ஹம்மாம்) கூறினார்.


«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ» قَالَ قَتَادَةُ: «وَلا أَعْلَمُ الْقَيْءَ إِلا حَرَامًا»


Musnad-Ahmad-2622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِنَّمَا مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ، ثُمَّ يَعُودُ فِي صَدَقَتِهِ، كَالَّذِي يَقِيءُ، ثُمَّ يَأْكُلُ قَيْئَهُ»


Musnad-Ahmad-2529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2251

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2251. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்.

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ أُعْمِرَ عُمْرَى، فَهِيَ لِمَنْ أُعْمِرَهَا جَائِزَةٌ، وَمَنْ أَرْقَبَ رُقْبَى، فَهِيَ لِمَنْ أُرْقِبَهَا جَائِزَةٌ، وَمَنْ وَهَبَ هِبَةً، ثُمَّ عَادَ فِيهَا، فَهُوَ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2119

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2119. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர.

கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்துவிட்டுப் பிறகு அந்த வாந்தியை உண்ணும் நாயைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்கள்: இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَحِلُّ لِلرَّجُلِ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ، فَيَرْجِعَ فِيهَا، إِلا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ، وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ، فَيَرْجِعُ فِيهَا، كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ، ثُمَّ رَجَعَ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-1872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1872. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


لَيْسَ لَنَا مَثَلُ السُّوءِ: الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ


Musnad-Ahmad-491

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

491.


«مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ نِصْفِ لَيْلَةٍ، وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ كَقِيَامِ لَيْلَةٍ»


Next Page » « Previous Page