Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-22100

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22100. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார்.

முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(உடனே) நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்களில் சிலர்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ فَذَكَرَ: «كَيْفَ تَقْضِي إِنْ عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ. قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي سَنَةِ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي وَلَا آلُو. قَالَ: فَضَرَبَ صَدْرِي فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا يُرْضِي رَسُولَهُ»


Musnad-Ahmad-22007

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22007. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார்.

முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(உடனே) நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்களில் சிலர்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ، فَقَالَ: «كَيْفَ تَصْنَعُ إِنْ عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ. قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، لَا آلُو. قَالَ: فَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدْرِي، ثُمَّ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يُرْضِي رَسُولَ اللَّهِ»


Musnad-Ahmad-18055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18055.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ لَهُ كِتَابًا بِالْوَصَاةِ لَهُ إِلَى مَنْ بَعْدِهِ مِنْ وُلَاةِ الْأَمْرِ، وَخَتَمَ عَلَيْهِ»


Musnad-Ahmad-18054

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18054.

முஸ்லிம் பின் அல்ஹாரிஸ் அத்தமீமீ அறிவிக்கின்றார்:

நீ சுப்ஹு தொழுதால் யாரோடும் பேசுவதற்கு முன்னர், ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் பகல் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும் மக்ரிப் தொழுதுவிட்டு, யாரோடும் பேசுவதற்கு  முன்னர் ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் இரவுப் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ரகசியமாகக் கூறினார்கள்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا صَلَّيْتَ الصُّبْحَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا مِنَ النَّاسِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ، سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مِتَّ مِنْ يَوْمِكَ ذَلِكَ، كَتَبَ اللَّهُ لَكَ جِوَارًا مِنَ [ص:593] النَّارِ، وَإِذَا صَلَّيْتَ الْمَغْرِبَ، فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا مِنَ النَّاسِ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِنْ مِتَّ مِنْ لَيْلَتِكَ تِلْكَ، كَتَبَ اللَّهُ لَكَ جِوَارًا مِنَ النَّارِ


Musnad-Ahmad-3013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِيهِ»


Musnad-Ahmad-2647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2647. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று (பழமொழியாகக்) கூறுவோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை உதாரணமாகக் கூறினார்கள் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவிக்கும்போதே இதைப் பற்றி தெரிந்துக்கொண்டோம்.


كُنَّا نَقُولُ وَنَحْنُ صِبْيَانٌ: الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ، يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ، وَلَمْ نَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ فِي ذَلِكَ مَثَلًا، حَتَّى حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

வாந்தியை (விழுங்குவது) ஹராம் என்றே நான் அறிகிறேன் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா அவர்கள் (கூறினார் என ஹம்மாம்) கூறினார்.


«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ» قَالَ قَتَادَةُ: «وَلا أَعْلَمُ الْقَيْءَ إِلا حَرَامًا»


Musnad-Ahmad-2622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِنَّمَا مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ، ثُمَّ يَعُودُ فِي صَدَقَتِهِ، كَالَّذِي يَقِيءُ، ثُمَّ يَأْكُلُ قَيْئَهُ»


Musnad-Ahmad-2529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2251

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2251. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்.

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ أُعْمِرَ عُمْرَى، فَهِيَ لِمَنْ أُعْمِرَهَا جَائِزَةٌ، وَمَنْ أَرْقَبَ رُقْبَى، فَهِيَ لِمَنْ أُرْقِبَهَا جَائِزَةٌ، وَمَنْ وَهَبَ هِبَةً، ثُمَّ عَادَ فِيهَا، فَهُوَ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Next Page » « Previous Page